இலங்கை

இலங்கையில் வலுவடையும் ரூபாவின் பெறுமதி!! அமைச்சர் வெளியிட்ட தகவல்

  • April 10, 2023
  • 0 Comments

கடந்த காலங்களில் அரசாங்கம் மேற்கொண்ட  நடவடிக்கைகளினால் ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், ஜனவரி மாதத்தில் மட்டும் 437 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுப் பணமாகப் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார். சுற்றுலாத்துறையின் அண்மைக்கால வளர்ச்சியும் ரூபாயின் மதிப்பு வலுவடைய ஒரு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜனவரி முதல் பிப்ரவரி வரை, இந்த நாட்டில் அதிகாரப்பூர்வ கையிருப்பு அளவு 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், கொழும்பில் இன்று […]

இலங்கை

மஹிந்தவிற்கு எதிரான வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்

  • April 10, 2023
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் இவ்வாறு வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

வீட்டு பணிப்பெண்ணாக அரபு நாட்டிற்கு சென்ற பெண் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு!

  • April 10, 2023
  • 0 Comments

அரபு நாட்டிற்கு பணிக்காக சென்ற இலங்கை பெண் ஒருவர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவராவார். அவரது கணவர் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது. பச்சிலைப்பள்ளி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 39 வயதுடைய கோமதி பஞ்சலிங்கம் என்பவரே அரபு நாட்டிற்கு பணிக்காக சென்றிருந்த நிலையில், காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரபு நாட்டிற்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற அவர், இரண்டு மாதங்களாக […]

இலங்கை

இன்று நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படும் QR கோட்!

  • April 10, 2023
  • 0 Comments

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவில் QR கோட் புதுப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் இதனை தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக QR ஒதுக்கீடு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு நள்ளிரவில் புதுப்பிக்கப்பட்டது. இதனால் ஏற்படும் விநியோகச் செலவைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், QR கோட் மூலம் வாரத்திற்கு பெறப்படும் எரிபொருளின் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அமைச்சர் மேலும் […]

இலங்கை

இலங்கை கொடூரமான பாதுகாப்பு சட்டங்களை கைவிடவேண்டும் – வொல்க்கெர் டேர்க் வலியுறுத்தல்!

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கை  கொடூரமான பாதுகாப்பு சட்டங்களை  கைவிடவேண்டும் என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளிற்கான உயர்ஸ்தானிகர் வொல்க்கெர் டேர்க் இதனை தெரிவித்துள்ளார். பலவீனப்படுத்தும் கடன் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியன இலங்கையில் பொதுமக்கள்  அடிப்படை பொருளாதார சமூக உரிமைகளை பெறுவதை மட்டுப்படுத்தியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். மீட்பு கொள்கைகள் சமத்துவம்இன்மைகளிற்கு தீர்வை காணவேண்டும் வெளிப்படைத்தன்மை ஆட்சியில் பொறுப்புக்கூறல் மற்றும் ஆழமாக வேருன்றியுள்ள தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் ஆகியவற்றை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் […]

செய்தி

கொரோனா தொற்று மெல்ல மெல்ல மீண்டும் அதிகரிக்கும்

  • April 10, 2023
  • 0 Comments

கொரோனா நோய் தொற்றை தடுக்க அனைத்து விதமான கண்காணிப்பு பணிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று மெல்ல மெல்ல மீண்டும் அதிகரிக்கும் சூழலில் கோவையில் கடந்த வாரத்தில் மட்டும் கொரோனாவினால் உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடுமானால் கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ ரீதியாக எப்படி கையாள வேண்டும் என்பதற்கான ஒத்திகை  நிகழ்வு நடைபெற்று வருகிறது. […]

இலங்கை

தொடர்ந்து வளர்ச்சி பாதையில் ரூபாயின் பெறுமதி!

  • April 10, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் கொள்வனவு பெறுமதி 313.77 ஐ எட்டியுள்ளது. அத்துடன் விற்பனை விலை 331.05 ஆக பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், USD/LKR SPOT மாற்று விகிதத்தின் நடுத்தர விகிதம் ரூ. 326.63.

இலங்கை

மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

  • April 10, 2023
  • 0 Comments

நூணயத்தின் பெறுமதி வளர்ச்சியடைந்து வருகின்ற நிலையில், சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்து அரச நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை 30 ரூபாவாலும், பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விற்பனை விலை 40 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை உள்ள மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆத்துடன் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 15 […]

இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பது  குறித்து கவலை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் தளங்களில் பாலின வன்முறைகளை கையாள்வதற்கு பயனுள்ள மற்றும் திறமையான புகார் பொறிமுறைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், டிஜிட்டலை மையமாக கொண்ட பாலின வன்முறை குறித்து  விழிப்புணபுர்வை ஏற்படுத்தவேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் தளங்களை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என […]

தமிழ்நாடு

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா ஒத்திகை

  • April 10, 2023
  • 0 Comments

மதுரை அரசு மருத்துமனையில் கொரோனா ஒத்திகை மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் கொரோனா பரவலை முன்னிட்டு அதற்கான ஒத்திகை இன்று மருத்துவமனையில்  டீன் ரத்தினவேல் முன்னிலை நடத்தப்பட்டுள்ளது. இதில் கொரோனா பாதித்த நோயாளியை எப்படிப் மருத்துவமனை அழைத்து வந்து சிகிச்சை வழங்கப்படும் என செய்முறையில் விளக்கப்பட்டது. திடீரென அம்புலன்ஸில் கொரோனா உடை அணிந்த செவிலியர்கள் நோயாளிகள் போன்ற பொம்மையுடன் இறக்கியதால் அங்கிருந்த பொதுமக்கள் வேக வேகமாக பையில் இருந்த முகக் கவசத்தை எடுத்து மாட்டினர்.