இலங்கை

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் வளர்ச்சி : தொடர்ந்து ஏற்றத்தில் இலங்கை ரூபாய்!

  • April 10, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை (09) உயர்வடைந்துள்ளது. அதற்கமைய  இன்றைய  தினம் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவு பெறுமதி 307.36 ரூபாவாகவும் அதன் விற்பனை பெறுமதி 325.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேவேளை நேற்று புதன்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவு பெறுமதி 313.77 ரூபாவாகவும்இ விற்பனை பெறுமதி 331.05 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை

நிதிப் பற்றாக்குறையால் ஏலத்தில் விடப்படவுள்ள அமைச்சர்களின் வாகனங்கள்!

  • April 10, 2023
  • 0 Comments

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட 10 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 6 வாகனங்களை சீர் செய்ய நிதிப் பற்றாக்குறை காரணமாக அவற்றை ஏலம் விடுவதற்கு கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி Land Cruiser V8, Land Rover, Micro, Tata வாகனங்கள் 2020 முதல் அமைச்சக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் கைத்தொழில் அமைச்சின் பிரதம கைத்தொழில் சேவை அதிகாரி கிஹான் சுமனசேகரவிடம் கூறுகையில்,இந்த வாகனங்கள் 2013ம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகவும், இந்த வாகனங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப குறைபாடுகளை சீர்செய்வதற்கு […]

இலங்கை

சுயாதீன உள்ளகப்பொறிமுறை கையாளப்படும் என இலங்கை அரசாங்கம் மீண்டும் தெரிவிப்

  • April 10, 2023
  • 0 Comments

நாட்டின் மனித உரிமைகளையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதில் சுயாதீன உள்ளகப்பொறிமுறைகளின் ஊடாக தீரவுகான இலங்கை உறுதியாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக சுட்டிக்காட்டியுள்ளார் அதற்கமைய அரசியலமைப்பின் பிரகாரம் உண்மை மற்றும் நல்லிணக்கப்பொறிமுறை ஒன்றை ஸ்தாபிப்பது குறித்தும், இலங்கைக்கு ஏற்புடைய   முறை எதுவென்பது குறித்தும் தற்போது ஆராயப்பட்டுவருகின்றது என்றும்  ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுக்கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கமானது நாட்டுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவற்றை மேம்படுத்துவதற்கும் அதிக முக்கியத்துவம் வழங்கிவருகின்றது எனக் […]

இலங்கை

மட்டக்களப்பு பிரதேசத்தில் நடுக் காட்டில் இருந்து மீட்கப்பட்ட முன்னாள் போராளி..

  • April 10, 2023
  • 0 Comments

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி என  கூறப்படும் நபர் ஒருவர் நடு காட்டில் இருந்து சடா முடியுடன் மீட்க்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேசத்துக்கு உட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுயிலிருந்து    நேற்றையதினம் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.மீட்கப்பட்டவர் கடந்த 4 வருடங்களாக குடும்பத்தினரால் கைவிடப்பட்ட  முன்னாள் போராளியான மனநலம் குன்றிய பாலா என்பவர் என தெரியவந்துள்ளது. கைவிடப்பட்ட முன்னாள் போராளி தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள றெட்பாணா எனும் கிராமத்திற்கு அப்பாலுள்ள […]

இலங்கை

இலங்கையில் 7 வகையான பொருட்களின் விலை குறைப்பு!

  • April 10, 2023
  • 0 Comments

பொருட்களின் விலை சதொச நிறுவனம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 7 பொருட்களின் விலையை குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாய் 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 1500 ரூபாவாகும். ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் விலை 230 ரூபாவாக உள்ளது. அத்துடன், ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலை 19 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 339 ரூபாவாகும். ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் […]

இலங்கை

இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம் – மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்று முன்தினத்துடன் ஒப்பிடும் போது நேற்று 24 கரட் தங்கப் பவுண் 9,250 ரூபாய் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அகில இலங்கை தங்க ஆபரண விற்பனையாளர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. மேலும், இலங்கை தங்க ஆபரண விற்பனையாளர் சங்கம் அளித்த தகவலின் படி, ஒரு பவுண் 22 கரட் தங்கம் 8,500 ரூபாய் குறைந்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி அதிகரித்தமையே முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை

இலங்கையில் இன்று முதல் தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கை

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தொழில் வல்லுநர்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் முறையற்ற வரிக்கொள்கைக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் தொழில் வல்லுநர்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர். இதேவேளை, ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கத்தினரால் நேறறு காலை 6.30 முதல் இன்று (09) காலை 6.30 வரை பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பளம் […]

இலங்கை

இலங்கையில் நகைக்கடையொன்றில் அதிர்ச்சி கொடுத்த பெண்

  • April 10, 2023
  • 0 Comments

பொல்பித்திகம பகுதியிலுள்ள தங்க நகைக்கடையொன்றில் 61 வயதான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்கள் அணியும் கடிகாரம் மற்றும் தங்க மோதிரம் என்பவற்றை வாங்கிக் கொண்டு உண்மையான ரூபா நோட்டுகளுடன் ஏழு போலி ஆயிரம் ரூபா நோட்டுகளையும் சேர்த்து வழங்கியதாக கூறப்படும் பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரான இப் பெண்ணிடமிருந்து 30 ஆயிரம் ரூபா போலி நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தும் இப்பெண் மிஹிரன்பிட்டிகம பிரதேசத்தைச் […]

இலங்கை

இலங்கைக்கு இக்கட்டான சூழ்நிலையில் உதவிய மூன்று பெண்கள்

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கை எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுபட 3 பெண்கள் உதவியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்ற தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். பெருமைமிக்க மற்றும் பிரகாசமான பெண் கதாபாத்திரங்களுக்கும் ஜனாதிபதி விருதுகளை வழங்கினார். இதற்கிடையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பெண் விமானிகள் மற்றும் பெண் பணியாளர்களை மட்டும் கொண்ட விமானம் ஒன்றை இன்று இந்தியாவின் […]

செய்தி

இரண்டு ஊராட்சி கிராமங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது

  • April 10, 2023
  • 0 Comments

வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முகுந்தராயபுரம் மற்றும் லாலாபேட்டை ஊராட்சி ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கு இடையே எல்லைகள் குறித்து பல ஆண்டுகாலமாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது . இந்நிலையில் காஞ்சனா கிரி மலைப்பகுதியில் உள்ள சிவன் கோயில் தொடர்பாக இரண்டு ஊராட்சி கிராமங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு அமைச்சு பேச்சு வார்த்தை மூலமாக தீர்வு காண மாவட்ட நிர்வாகம் சார்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பாடு செய்யப்பட்டு இரு கிராமங்களுக்கும் பிரச்சனை இல்லாமல் தீர்வு […]