பொன்னாவெளியில் சிமெந்து தொழிற்சாலை அமைக்கலாமா? ஆய்வு செய்யக்கோரி துணைவேந்தருக்கு சிறீதரன் எம்.பி கடிதம்
கிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேசத்தின் பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவிலுள்ள வேரவில் கிராமத்தில், சிமெந்து தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் மிகத் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதன் சாதக, பாதகத் தன்மையை ஆய்வுக்கு உட்படுத்தக் கோரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுத்துமூலக் கோரிக்கை ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். நேற்றையதினம் அனுப்பிவைக்கப்பட்டுள்ள இக் கோரிக்கைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; கிளிநொச்சியின் தொன்மம் மிகு பேரூர்களுள் ஒன்றாக விளங்கும் வேரவில் கிராமம் ஈழவூர் என சிறப்பித்துச் […]