இலங்கை செய்தி

இலங்கை விஞ்ஞானி ஒருவரின் உலக ஆச்சரியமான கண்டுபிடிப்பு

  • April 11, 2023
  • 0 Comments

பௌதிக உலகில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய அதிகடத்தியை கண்டுபிடிப்பதில் இலங்கை விஞ்ஞானி தலைமையிலான குழு வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்காவின் நியூ சயின்ஸ் இதழ் நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரான ரங்கா டயஸ் மற்றும் அவரது மாணவர்கள் குழு இந்த சூப்பர் கண்டக்டிங் பொருளைக் கண்டுபிடித்ததாகக் கூறுகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சிக்குப் பிறகு, இந்த சூப்பர் கண்டக்டிங் பொருள் ஹைட்ரஜன், நைட்ரஜன் மற்றும் லுடீடியம் ஆகிய தனிமங்களைக் கலந்து உருவாக்கப்பட்டது. இது நைட்ரஜன் லுடேடியம் ஹைட்ரைடு […]

இலங்கை செய்தி

ரயிலில் குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோர் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

  • April 11, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு நோக்கிச் செல்வதற்காக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மின்கயா புகையிரதத்தின் கழிவறையில் இருந்து மீட்கப்பட்ட சிசுவின் தாயும் தந்தையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு இன்று (15) கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபரான தம்பதியினரும் அவர்களது பெற்றோரும் குழந்தையை பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்ததால், சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் எந்தவொரு பிணை நிபந்தனைகளின் கீழும் அவர்களை […]

இலங்கை செய்தி

நான்கு வருடங்களில் பின் சஹ்ரானின் மனைவி பிணையில் விடுதலை

  • April 11, 2023
  • 0 Comments

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 04 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட சஹரன் ஹாசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா கடுமையான பிணை நிபந்தனைகளுடன் இன்று (15) விடுதலை செய்யப்பட்டார். 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் அவரை விடுவிக்குமாறு கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கட்டுவாப்பிட்டி தேவாலயத்தின் மீது குண்டுத் […]

இலங்கை செய்தி

பொருளாதாரத்தை மீளமைப்பதற்கு வெளிப்படைத்தன்மையை பேணுவதாக ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

  • April 11, 2023
  • 0 Comments

கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் பொருளாதாரத்தை மீளமைப்பதற்கும்  முழுமையான  வெளிப்படைத்தன்மையை இலங்கை  பேணுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்  வெளிநாட்டுக் கடன் வழங்குநர்களுக்கு  அனுப்பியுள்ள பகிரங்கக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இருதரப்பு மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுக்கு இடையே பரஸ்பர ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம்  அரச  கடன் நெருக்கடியை முன்கூட்டியே தீர்க்க இலங்கையுடன் சாதகமாக செயற்படுமாறும் ஜனாதிபதி  கோரியுள்ளார்

இலங்கை செய்தி

பருத்தித்துறை பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல்!

  • April 11, 2023
  • 0 Comments

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகர்கோவில் மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீச்சு மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் இன்னொரு மோட்டார் சைக்கிள் பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது. அத்துடன் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த வன்முறை சம்பவத்தை மேற்கொண்டவர்கள் யார் என இதுவரை தெரியவரவில்லை. இச்சம்பவம் குறித்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக […]

இலங்கை செய்தி

உள்ளூர் கடலில் வெளிநாட்டவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது – மாவை சேனாதிராசா!

  • April 11, 2023
  • 0 Comments

வெளிநாட்டு மீனவர்கள் எந்த எல்லையில் மீன் பிடிக்கலாம் என்பது சரியான முறையில்  அடையாளப்படுத்தப்பட வேண்டும். மேலும், உள்ளூர் கடலில் வெளிநாட்டவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடிப்பது தொடர்பாக கேட்டபோது இவ்வாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில், இலங்கை, இந்திய மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்கென கடற்பரப்பில் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லைக்குள் நின்று யாரும் மீன்பிடி தொழிலை செய்ய […]

செய்தி

புதையல் தோன்ற முற்பட்ட எழுவர் கைது!

  • April 11, 2023
  • 0 Comments

குருநாகல்  நாகொல்லாகம பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த 7 பேர் கைது  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மஹவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக  நாகொல்லாகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்மலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில்  குறித்த ஏழுபேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது  மூலம் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் பூஜைப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் மஹவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர். மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை செய்தி

இலங்கையர் அனைவர்க்கும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள மலேசிய அரசாங்கம்!

  • April 11, 2023
  • 0 Comments

மலேசிய அரசாங்கம் , இலங்கைக்கு கூடுதலாக 10,000 வேலை வாய்ப்புகளை ஒதுக்கியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 10,000 வேலை வாய்ப்புகளுக்கு மேலதிகமாக இந்தப் புதிய ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கொழும்பில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் அண்மைய வேலை வாய்ப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு […]

இலங்கை செய்தி

பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவிதற்கு GMOA தீர்மானம்!

  • April 11, 2023
  • 0 Comments

அரசாங்கத்தின் முறையற்ற வரிக்கொள்கை, ஊதிய உயர்வு என பல்வேறு காரணிகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்,  பணிப்புறக்கணிப்பை நாளை முதல் தற்காலிகமாக  கைவிடுவதற்கு  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி நாளை (16)  காலை 8 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தினால் தொழில் வல்லுநர்கள் சங்கத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

மடகஸ்கரில் இருந்து இலங்கை அழைத்துவரப்பட்ட கடத்தல்காரன்!

  • April 11, 2023
  • 0 Comments

மடகஸ்கரில் கைது செய்யப்பட்ட நந்துன் சிந்தக அல்லது “ஹரக் கட்டா” மற்றும் சலிந்து மல்ஷிகா அல்லது “குடு சலிந்து” ஆகியோர் இன்று (15) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் மடகஸ்கருக்குச் சென்றது. கடத்தல்காரகள் கென்யா மற்றும் இந்தியா ஊடாக இந்த நாட்டிற்கு வந்துள்ளனர். “ஹரக் கட்டா” மற்றும் “குடு சலிந்து” ஆகியோருடன் மேலும் ஆறு பேர் கடந்த 7ஆம் திகதி […]