ரயிலில் குழந்தையை கைவிட்டுச் சென்ற தம்பதி திருமணம் செய்து கொள்வதாக உறுதி
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினகயா ரயிலின் கழிவறையில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் மற்றும் தந்தை 5 இலட்சம் ரூபா பிணையில் இன்று (17) விடுவிக்கப்பட்டனர். மேலும், கடுமையான எச்சரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளுடன் குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் இன்று கொழும்பு-கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், பிணை வழங்கியதன் பின்னர் பெற்றோர் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக குழந்தையின் தாய் மற்றும் தந்தை சார்பில் ஆஜரான சட்டத்தரணி குழு நீதிமன்றில் அறிவித்தது. […]