கனடா வேலை வாய்ப்பு; விசா மோசடியில் சிக்கிய பிரதேச சபை உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது!
கனடாவில் வேலைவாய்ப்பு மற்றும் வதிவிட விசாக்களை பெற்று தருவதாக உறுதியளித்து நபர்களிடமிருந்து 5 – 20 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர் ஒருவர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் சந்தேக நபருக்கு பணம் செலுத்திய 25 பேரிடம் முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகநபருக்கு […]