இலங்கை

6ஆம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த அதிபர்!

  • April 10, 2023
  • 0 Comments

பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை அதிபரே இச் செயலை செய்ததாக  பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 11 வயது சிறுமியை வன்கொடுமை செய்துள்ளதாகவும் சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகத்திற்குரிய 50 வயதுடைய அதிபர் பலாங்கொட அல்லராவ பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் […]

இலங்கை

இலங்கையின் முக்கிய வீதி மூடல்

  • April 10, 2023
  • 0 Comments

கண்டி – மஹியங்கனை பிரதான வீதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கண்டி – மஹியங்கனை வீதியின் 18 ஆவது வளைவு பகுதியில் 14 ஆவது வளைவுக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்

  • April 10, 2023
  • 0 Comments

தங்கத்தின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை தங்க ஆபரண வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்தார். அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றமையால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு – செட்டியார் தெருவில் நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று ஒரு இலட்சத்து 57 ஆயிரத்து 480 ரூபாவிற்கு விற்பனை […]

இலங்கை

உலகின் சிறந்த இடங்களில் ஒன்றான இலங்கை – Forbes சஞ்சிகை தகவல்

  • April 10, 2023
  • 0 Comments

வனவிலங்குகளை பார்வையிட சிறந்த இடமாக இலங்கையை Forbes சஞ்சிகை தரப்படுத்தியுள்ளது. ஆபிரிக்காவிற்கு  வெளியில் இலங்கை இந்த இடத்தை பிடித்துள்ளது. உலக நாடுகளில்  சிறுத்தைகளின் அடர்த்தியான பரம்பலைக் கொண்ட இடமாகவும் ஆபிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை விடவும்  மிகச்சிறந்த பூனை இனங்களைக் கொண்ட இடமாகவும் இலங்கை அமைந்துள்ளதாக  Forbes குறிப்பிட்டுள்ளது. ஆசிய யானைகள், மயில்கள், நீர் எருமைகள், குரங்குகள் மற்றும்  தேன் உண்ணி கரடிகளை அதிகம் கொண்ட தேசமாகவும் இலங்கை அமைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Cape Cod-இல் இருந்து டொமினிக்கன் […]

இலங்கை

இலங்கையில் மசாஜ் நிலையங்களில் நடக்கும் அட்டகாசம் – சிக்கிய இளம் பெண்கள்

  • April 10, 2023
  • 0 Comments

கல்கிஸை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் பெண்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக கல்கிஸை, இரத்மலானை பிரதேசத்தில்  இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது விபசார விடுதியின் முகாமையாளர் உட்பட 7 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 23 முதல் 39 […]

இலங்கை

தடம் புரண்டது யாழ் தேவி

  • April 10, 2023
  • 0 Comments

அநுராதபுரத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் யாழ்தேவி புகையிரதம் மஹவ நிலையத்திற்கு அருகில் இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ளதாக ரயில்வே பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இன்று பிற்பகல் 2 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து பயணிக்க ஆரம்பித்த இந்த ரயில் தடம் புரண்டது. தடம் புரண்டதற்கு முன், ரயில் பெட்டிகள் இணைக்கும் பகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு, ஒரு வழிப்பாதை முற்றிலும் தடைபட்டதாக கூறப்படுகிறது. ரயிலை மீட்கும்  பணி விரைவில் தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இலங்கை

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை தங்க ஆபரண வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு – செட்டியார் தெருவில் இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த சங்கத்தின் பொருளாளர் ராமன் பாலசுப்ரமணியம் இதனை தெரிவித்தார். மேலும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று ஒரு இலட்சத்து 57 ஆயிரத்து 480 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். ரூபாவின் […]

இலங்கை

நெருக்கடியான நேரத்திலும் பெண் ஒருவருக்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சை

  • April 10, 2023
  • 0 Comments

நாட்டில் மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறைக்கு மத்தியில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை தொடர்பில் கண்டி தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. ஆசனவாயில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 67 வயதுடைய பெண் ஒருவரே உரிய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். கண்டி தெல்தெனிய அடிப்படை வைத்தியசாலையின் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைப் பயன்படுத்தி 67 வயதுடைய பெண் ஒருவரின் புற்றுநோயை வெற்றிகரமாக அகற்றுவதற்கு கண்டி தெல்தெனிய அடிப்படை வைத்தியசாலையின் வைத்தியர்கள் குழுவொன்று முயற்சித்துள்ளது. இது குறித்து வைத்தியர்கள் கருத்து தெரிவிக்கையில், மருந்து […]

இலங்கை

மருந்து இல்லை எனக் கூறினால் முறைப்பாடு அளியுங்கள் – இலங்கை வைத்திய சங்கம் வலியுறுத்தல்!

  • April 10, 2023
  • 0 Comments

அரச வைத்தியசாலைகள் அல்லது அரச மருந்தகங்களில் செல்லும் நோயாளர்களுக்கு அங்கு மருந்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டால் , அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்குமாறு இலங்கை வைத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை வைத்திய சங்கத்தினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பெப்ரவரி 15ஆம் திகதி நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவிக்கையில், எந்தவொரு நோயாளியும் அரச வைத்தியசாலைகள் அல்லது மருந்தகங்களுக்கு சென்று […]

இலங்கை

உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – ரோஹன ஹெட்டியாராச்சி!

  • April 10, 2023
  • 0 Comments

உள்ளூராட்சி மன்ற தேர்தலை திகதி குறிப்பிடாமல் பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசாங்கம் மிகவும் மோசமான முறையில் தலையிட்டு வருகிறது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். பெப்ரல் அமைப்பு நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர்,; தேர்தல் முறையை மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பது தெளிவாக தெரிகிறது. வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் அபாயத்தில் நாம் இருக்கிறோம்.  வரையறைகளை அமைத்து, அதற்கமைய மீண்டும் வேட்புமனு […]