உலகின் சிறந்த மாடல் போட்டியில் இலங்கையின் சந்தானி விஷ்மிதா மூன்றாமிடம்
உலகின் சிறந்த மாடல் 2023 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த சந்தானி விஷ்மிதா பீரிஸ் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார். உலக அழகி அமைப்பினால் இருபத்தி ஒன்பதாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டி எகிப்தில் உள்ள சன்ரைஸ் ஒயிட் ஹில்ஸ் ரிசார்ட்டில் நடைபெற்றது. நாற்பத்து மூன்று போட்டியாளர்களிடமிருந்து இறுதி வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் போட்டி நடைபெற்றது. உலகின் சிறந்த மாடல் கிரீடத்தை மெக்சிகோ அழகி மரியானா மெசியாஸ் வென்றார்.