இலங்கையில் அதிகரிக்கும் காசநோயாளர்கள் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கையில் வருடாந்தம் சுமார் 10,000 காசநோயாளிகள் கண்டுபிடிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காசநோயாளிகள் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளாதுவிட்டால் மரணம் கூட நேரிடும் என்றும் சுவாச நோய் தொடர்பான நிபுணர் டாக்டர் போதிக சமரசேகர கூறியுள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், காசநோய் காற்றினால் பரவும் நோய் என்பதால் சிகிச்சை எடுக்காமல் இருப்பது ஆபத்தானது என்றும் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தில் நுரையீரல் காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் ஆரோக்கியமான மக்களுக்கு […]