இலங்கை செய்தி

கொழும்பில் துப்பாக்கிச் சூடு

  • April 11, 2023
  • 0 Comments

கொழும்பு கொட்டாஞ்சேனை, பரமானந்த மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான சரியான காரணம் வெளியாகவில்லை. கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கை செய்தி

புட்டினை கைது செய்ய உத்தரவு – உக்ரைன் ஜனாதிபதி வரவேற்பு

  • April 11, 2023
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை வரலாற்று சிறப்பு மிக்க முடிவு என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் நேற்று இரவு செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனில் இருந்து சட்டவிரோதமாக குழந்தைகளை நாடு கடத்தியது உள்ளிட்ட போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக புடினுக்கு எதிராக இத்தகைய வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் […]

இலங்கை செய்தி

ஓடும் ரயிலை நிறுத்த குறுக்கே வந்து நின்ற நபருக்கு நேர்ந்த கதி

  • April 11, 2023
  • 0 Comments

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உதார மெனிகே ரயிலை நிறுத்த முயன்ற நபர் ஒருவர் பலத்த காயமடைந்து டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் (18) அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். (18) ரொசெல்ல மற்றும் ஹட்டன் புகையிரத நிலையங்களுக்கு இடையில், ஹட்டன் மல்லியப்புவ பகுதியில் பிற்பகல் 1 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நான்கு நாட்களுக்கு முன், வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக, ரயில் தண்டவாளத்தின் நடுவே ஓடும் ரயிலை நிறுத்த முயன்ற 41 வயதுடைய நபர் ரயிலில் […]

இலங்கை செய்தி

துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட இளம் பெண்

  • April 11, 2023
  • 0 Comments

கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய யுவதி கடந்த 10ம் திகதி இரவு 9.30 மணியளவில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில், அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொலையைச் செய்தாரா என்பதை உறுதிப்படுத்த அவரது DNA மாதிரிகள் மற்றும் […]

இலங்கை செய்தி

சர்வதேச நாணய நிதிய உதவியைத் தொடர்ந்து 7 பில்லியன் டொலர் நிதி உட்பாய்ச்சல் – இலங்கை நம்பிக்கை

  • April 11, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான கடன்வழங்குனர்களின் நிதியியல் உத்தரவாதம் உள்ளிட்ட அனைத்து நிபந்தனைகளும் இலங்கையால் பூர்த்திசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இச்செயற்திட்டம் நாளை மறுதினம் (20) சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இவ்வுதவிச்செயற்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியதன் பின்னர் அடுத்துவரும் 4 வருடகாலத்தில் 2.9 பில்லியன் டொலர் நிதி இலங்கைக்குக் கட்டம்கட்டமாக வழங்கப்படும். இலங்கைக்கான 2.9 பில்லியன் டொலர் உதவிச்செயற்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதி […]

இலங்கை செய்தி

நீலப் பெருஞ்சமரில் வெற்றிபெற்ற அணிக்கு ஜனாதிபதி தலைமையில் பரிசளிப்பு

  • April 11, 2023
  • 0 Comments

கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிஸ்ஸ புனித  தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான 144ஆவது நீலப் பெருஞ்சமரில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்றதுடன் பரிசளிப்பு விழா இன்று (18) பிற்பகல் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவத் தலைவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கொழும்பு SSC மைதானத்தில் நேற்று (17) நடைபெற்ற போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை ஜனாதிபதி பார்வையிட்டிருந்தார். இதன்போது ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான […]

இலங்கை செய்தி

நீலப் பெருஞ்சமரில் வெற்றிபெற்ற அணிக்கு ஜனாதிபதி தலைமையில் பரிசளிப்பு

  • April 11, 2023
  • 0 Comments

கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிஸ்ஸ புனித  தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான 144ஆவது நீலப் பெருஞ்சமரில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்றதுடன் பரிசளிப்பு விழா இன்று (18) பிற்பகல் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவத் தலைவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கொழும்பு SSC மைதானத்தில் நேற்று (17) நடைபெற்ற போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை ஜனாதிபதி பார்வையிட்டிருந்தார். இதன்போது ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான […]

இலங்கை செய்தி

உணவுப்பாதுகாப்பு நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு விவசாயத்துறையில் நிறைபேறான நடவடிக்கைகள் அவசியம்

  • April 11, 2023
  • 0 Comments

இவ்வாண்டு இலங்கையின் உணவுப்பாதுகாப்பு நிலை ஓரளவு முன்னேற்றமடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி விமலேந்திர ஷரண் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை உணவுப்பாதுகாப்பு நெருக்கடியிலிருந்து இலங்கை முழுமையாக மீட்சியடைவதற்கு விவசாயத்துறையை அடிப்படையாகக்கொண்ட நிலைபேறான நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர்  வலியுறுத்தியுள்ளார். பொருளாதார நெருக்கடியின் விளைவாக இலங்கை  முகங்கொடுத்திருக்கும் உணவுப்பாதுகாப்பின்மை அச்சுறுத்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் உணவுப்பாதுகாப்பு நிலை கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஓரளவு முன்னேற்றமடைந்திருக்கின்றது […]

இலங்கை செய்தி

இந்தியாவில் தவறுதலான முனையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையர்கள்

  • April 11, 2023
  • 0 Comments

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணித்த குழுவினர் உள்ளூர் பயணிகளை தவறுதலாக வருகை முனையத்திற்கு அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. UL 173 ரக ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் பயணித்த சுமார் 30 பயணிகளே நேற்று (17) இந்த நிலைக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானத்திலிருந்து வெளியே வந்த பயணிகளை சர்வதேச பயணிகள் வந்த முனையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டிய உள் பஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர், […]

இலங்கை செய்தி

தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளைச் செயலாளரை TIDயினர் விசாரணைக்கு அழைப்பு

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். விசாரணைக்கான காரணங்கள் எவையும் குறிப்பிடப்படாது, இன்றையதினம் (18) அவருக்கு வழங்கப்பட்டுள்ள எழுத்துமூல அழைப்பாணையில், வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக எதிர்வரும் 2023.03.24 ஆம் திகதி, மு.ப.9.00 மணிக்கு, பரந்தனில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவுக்கு சமுகமளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள, கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களினதும்  கௌரவ.தவிசாளர்கள் உள்ளிட்ட […]