வித்தியா கொலை வழக்கில் பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு விசாரணை
கடந்த 2015ஆம் ஆண்டு கடத்தப்பட்ட பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டுப் பலாத்காரம் மற்றும் படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் இருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மேன்முறையீட்டு மனுக்கள் இன்று (மார்ச் 20) நீதியரசர்களான ப்ரீதி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த […]