இலங்கை செய்தி

எரிபொருள் விலையை குறைவடையும் : காஞ்சன விஜயசேகர!

  • April 11, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலர் பெறுமதி வீழ்ச்சிஇ உலக சந்தையில் எரிபொருள் விலை குறைப்பு ஆகிய காரணிகளை அடிப்படையாக கொண்டு எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் எரிபொருள் விலை குறைக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இந்த அறிவிப்பை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர், இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து நாணயக் கடிதங்களை இனி திறக்க […]

இலங்கை செய்தி

32 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை

  • April 11, 2023
  • 0 Comments

பாராளுமன்றத்தினதும் பாராளுமன்ற  உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 32 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேறியது.

இலங்கை செய்தி

இலங்கை தனது பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் அர்பணிப்புடன் இருக்க வேண்டும் – கிறிஸ்டலினா ஜோர்ஜுவா!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை தனது பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான மூலோபாயம் குறித்து அர்ப்பணிப்புடன் இருக்கவேண்டும் என  சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இதனை தெரிவித்துள்ளார். இலங்கை பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் தனது நடவடிக்கைகளின் நம்பகதன்மையை பேணுவதற்கு பலமுனை பணவீக்க உத்தி குறித்து அர்ப்பணிப்புடன் இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை கடும் பொருளாதார சமூக சவால்களை எதிர்கொண்டுள்ளது உயா பணவீக்கத்திற்கு மந்தியில் கடும் மந்த நிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள  அவர் குறைந்துபோயுள்ள வெளிநாட்டு நாணய கையிருப்பு நீடித்து நிலைக்க […]

இலங்கை செய்தி

இரத்தினபுரியிலிருந்து பாணந்துறை நோக்கி புறப்பட்ட பேருந்தில் தீ விபத்து!

  • April 11, 2023
  • 0 Comments

ஹொரணை – இரத்தினபுரி வீதியில் பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்துக்கு  முன்பாக தனியார் பஸ்  ஒன்று இன்று (21) தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இரத்தினபுரியிலிருந்து பாணந்துறை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு தீவிபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த பேருந்தில் 40 பயணிகள் இருந்துள்ளனர். அதிஸ்டவசமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஹொரணை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் கண்டறிப்படாத நிலையில், […]

இலங்கை செய்தி

இறக்குமதித்தடைகளை முற்றாக நீக்க முடியாது : பந்துல குணவர்த்தன!

  • April 11, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டவுனேயே இறக்குமதித்தடைகளை முற்றாக நீக்க முடியாது. அந்தளவிற்கு அந்நிய செலாவணி இருப்பு அதிகரிக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்ற இடம்பெற்ற போது அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டவுனேயே இறக்குமதித்தடைகளை நீக்க முடியாது. தடம் புரண்டுள்ள பொருளாதாரத்தை சற்று நகரத்தியுள்ளோம். அதற்கமைய இனிவரும் பயணங்களை மிகவும் அவதானத்துடன் திட்டமிட்டு மேற்கொள்ள […]

இலங்கை செய்தி

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

  • April 11, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் , கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற   சர்வதேச   அங்கீகாரத்தை பெற்றுள்ளதாகவும், அதன்படி இலங்கை  வங்குரோத்தான நாடல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எனவே இனிமேல் வழமையான கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்கும் திறன் எமக்கு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். சர்வதேச நாணய நிதியத்தின்  நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இன்று (21) விடுத்துள்ள […]

இலங்கை செய்தி

இலங்கையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள லிஸ்டீரியோசிஸ் – பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள லிஸ்டீரியோசிஸ் தொற்று நோய் நாட்டில் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷஅது குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி கொள்ள தேவையில்லை எனவும் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. லிஸ்டீரியா Listeriosis மொனோசைட்டஜன் பக்றீறியா தொற்றால் ஏற்படும் இந்த நோயால் சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில், சிறிய கடை ஒன்றை நடத்திச் சென்ற பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிக்கை விடுத்து குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. சிவனொளிபாத […]

இலங்கை செய்தி

OnmaxDT உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

லங்கையில் செயற்படும் பிரமிட் வகையிலான தடைசெய்யப்பட்ட மூன்று திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி (CBSL) சட்டமா அதிபரிடம் இந்த கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, Fast 3Cycle International (Pvt) Ltd (F3C), Sport Chain App, Sports Chain ZS Society Sri Lanka மற்றும் OnmaxDT ஆகிய நிறுவனங்கள் வங்கிச் சட்டத்தின் 83C இன் விதிகளை மீறியுள்ளனவா என்பதைக் கண்டறிய இலங்கை மத்திய வங்கி விசாரணைகளை […]

இலங்கை செய்தி

டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி ஸ்திரமடையும்!

  • April 11, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி படிப்படியாக அதிகரித்துச்செல்லுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த ஒருவாரகாலமாக அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி படிப்பயாக அதிகரித்துச்சென்றதுடன், மீண்டும் கடந்தவார இறுதியில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. இவ்வாறானதொரு பின்னணியில்  ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மீண்டும் படிப்படியாக அதிகரித்துச்செல்லுமெனத் […]

இலங்கை செய்தி

யாழில் தாய்ப்பால் கொடுக்க மறுத்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

  • April 11, 2023
  • 0 Comments

  வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் பச்சிளங்குழந்தை போசாக்கின்மையால் குழந்தை உயிரிழந்த செய்தி ஒன்று அண்மையில் வெளியானது. இந்த விவகாரத்தில், பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையே காரணமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தாயார் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததாகவும், மாதாந்த கிளினிக்கிற்கு செல்ல மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார். குழந்தையின் தந்தை மதுபோதைக்கு அடிமையானவர் என்றும், குழந்தை உணவூட்டப்படாமல் உயிரிழந்ததாக தெரிவித்தார்.