இலங்கை செய்தி

யாழில் பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம்; விடுதிக்குள் நுழைந்து சரமாரி தாக்குதல்

  • April 11, 2023
  • 0 Comments

யாழ். திருநெல்வேலியில் உள்ள பிரபல தனியார் விடுதிக்குள் நுழைந்த இரண்டு பேர் விடுதிக் கணக்காளரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் நேற்றைய தினம் (21) காலை 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் பட்டப்பகலில் விடுதிக்குள் நுழைந்து கணக்காளரை தாக்கியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இலங்கை செய்தி

வெளிநாடொன்றில் சிக்கி தவித்து நாடு திரும்பிய 48 இலங்கை

  • April 11, 2023
  • 0 Comments

குவைட்டிற்கு தொழிலுக்காக சென்று பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய 48 இலங்கையர்கள் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளனர். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு எல் 230 என்ற விமானத்தில் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். குவைட்டுக்கு தொழிலுக்காக சென்று பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட இலங்கையர்கள் குவைட்டுக்கான இலங்கை தூதரகத்திற்கு அறிவித்துள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கான தூதரகத்தின் நடவடிக்கையால் 48 இலங்கையர்களும் இன்று நாடு திரும்பியுள்ளனர். 38 பெண்களும் 10 ஆண்களுமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இலங்கை செய்தி

இலங்கை முழுவதும் சொக்லேட் வேட்டை – சுற்றிவளைக்கும் அதிகாரிகள்

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் அமுலில் உள்ள உணவு சட்டத்தை மீறி விற்பனை செய்யப்படும் சகல சொக்லேட் மற்றும் இனிப்பு வகைகளையும் கைப்பற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். “நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் இருந்து இனிப்பு மற்றும் சொக்லேட் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் சில வர்த்தகர்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு சொக்லேட் மற்றும் பல்வேறு இனிப்பு வகைகளை கொண்டு வந்து விற்பனைக்கு விநியோகம் […]

இலங்கை செய்தி

இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடு நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் இறக்குமதி  தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு படிப்படியாக நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த தகவலை தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பில் ஆற்றிய விசேட உரையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதன்போது ஜனாதிபதி மேலும்  உரையாற்றுகையில், சர்வதேச நாணய நிதியத்தில் நிறைவேற்று சபை இலங்கையுடனான விரிவாக்கப்பட்ட கடன் வசதிக்கு அனுமதி அளித்துள்ளது. எனவே,  இலங்கை இனியும்  உலகில் வங்குரோத்தடைந்த நாடாக கருதப்படமாட்டாது. இலங்கையின் கடனை மறுசீரமைத்து வழமையான கொடுக்கல் வாங்கல்களை மீண்டும் […]

இலங்கை செய்தி

இலங்கை கல்வி அமைச்சர் விடுத்த விசேட அறிவிப்பு

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் ஆசிரியர்களின் இடமாற்றங்கள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்புகளை ஏற்படுத்துமாயின், அவ்வாறான இடமாற்றங்கள் மேலும் ஒத்திவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் கலாநிதி சுசில்  பிரேமஜயந்த நேற்று இதனை தெரிவித்தார். ஆசிரியர் இடமாற்றங்களினால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு பாரியளவு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினைக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் பணிபுரியும் சுமார் ஆயிரம் […]

இலங்கை செய்தி

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பை அடுத்து இலங்கைக்கு 7 பில்லியன் டொலர்கள் கிடைக்கும் வாய்ப்பு

  • April 11, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர்சபையின் அனுமதியை அடுத்து 7 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இலங்கைக்குக் கிட்டியிருப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கி, வெகுவிரைவில் நாட்டின் பொதுக்கடன்களின் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படுமெனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின்கீழ் 48 மாதகாலத்தில் சுமார் 2.9 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கான உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி எட்டப்பட்டது. அதனையடுத்து கடந்த 6 மாதகாலமாக சர்வதேச நாணய […]

இலங்கை செய்தி

கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றத்தைக் காண்பிப்பது அவசியம் என கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா வலியுறுத்தல்

  • April 11, 2023
  • 0 Comments

உறுதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதும், நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தை உரியகாலத்தில் அமுல்படுத்துவதும் இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு மிகவும் அவசியமாகும் என்று  சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா சுட்டிக்காட்டியுள்ளார். முக்கிய இருதரப்புக் கடன்வழங்குனர்களிடமிருந்து நிதியியல் உத்தரவாதம் பெறப்பட்டுள்ள நிலையில், தற்போது கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதில் இலங்கை அரசாங்கமும் கடன்வழங்குனர்களும் முன்னேற்றத்தைக் காண்பிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதகாலத்தில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை […]

இலங்கை செய்தி

சட்டக்கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விதிகள் நிராகரிக்கப்பட்டன

  • April 11, 2023
  • 0 Comments

சட்டக்கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இன்று (21) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விதிகளை அங்கீகரிப்பது மேலதிக வாக்குகளால் நிராகரிக்கப்பட்டது. இந்தப் பிரேரணைக்கு எதிராக 113 வாக்குகளும் ஆதரவாக 1 வாக்கும் அளிக்கப்பட்டன. இலங்கை சட்டக்கல்லூரியின் பரீட்சையை ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்துவது தொடர்பில் சட்டக்கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் 7வது பிரிவின் கீழ் நீதி அமைச்சரின் ஒருமைப்பாட்டுடன் கூட்டிணைக்கப்பட்ட சட்டக்கல்விப் பேரவையினால் 2020 டிசம்பர் 30 ஆம் திகதிய 2208/13ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட […]

இலங்கை செய்தி

நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு டிலான் பெரேரா நியமனம்

  • April 11, 2023
  • 0 Comments

நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவுசெய்யப்பட்டார். இவருடைய பெயரை பாராளுமன்ற உறுப்பினர்  மாயாதுன்ன சிந்தக அமல் முன்மொழிந்ததுடன்,  கெவிந்து குமாரதுங்க இதனை வழிமொழிந்தார். ஆளும் கட்சி உறுப்பினரால் தனது பெயர் முன்மொழியப்பட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரினால் வழிமொழியப்பட்டு குழுவின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமையையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகக் டிலான் பெரேரா இங்கு குறிப்பிட்டார். நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, […]

இலங்கை செய்தி

இலங்கையின் வலுவான கொள்கை உருவாக்கத்துக்கு நான் முன்னுரிமையளித்துள்ளோம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு

  • April 11, 2023
  • 0 Comments

கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட தவறான கொள்கைத் தீர்மானங்கள் மற்றும் பொருளாதார அதிர்வுகளின் விளைவாக இலங்கை தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. இந்நெருக்கடியின் காரணமாக இலங்கை மக்களின்மீது, குறிப்பாக வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினர்மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பிலும், வெளியக நிதியீட்டலில் நாடு எதிர்கொண்டிருக்கும் தாமதம் தொடர்பிலும் நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது, அந்தவகையில் சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபை வழங்கியுள்ள அனுமதியானது, இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிக்கான தீர்வை நோக்கிய மிகமுக்கிய […]