செய்தி வட அமெரிக்கா

ரஷ்ய -உக்ரைன் போரை என்னால் மட்டுமே நிறுத்த முடியும் – டிரம்ப் அதிரடி பேச்சு

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேல் ஆகியும் முடிவுக்கு வராமல் உள்ளதால் உலக நாடுகள் மத்தியில் இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2022 பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை தொடங்கினார். ஆரம்பத்தில் ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி உக்ரைனை திணறடித்தன. இருப்பினும், அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதில் தாக்குதலை சிறப்பாக மேற்கொண்டு போரில் தாக்குபிடித்து வருகிறது. பிப்ரவரி மாதத்தில் […]

இலங்கை செய்தி

சுற்றுலா பயணியிடம் அத்துமீறல் : ஒருவர் கைது!

  • April 11, 2023
  • 0 Comments

ஜப்பானைச் சேர்ந்த பெண் சுற்றுலாப்பயணியை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்த சுற்றுலா வழிகாட்டியொருவர் அனுராதபுரம் சுற்றுலா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சுற்றுலாப்பயணியின் முறைப்பாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் புனித நகர பகுதிக்கு தான் சென்றவேளை இந்த நபர் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என ஜப்பானைச் சேர்ந்த பெண் சுற்றுலாப்பயணி முறைப்பாடு செய்துள்ளார்.

இலங்கை செய்தி

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சி செய்தி

  • April 11, 2023
  • 0 Comments

தொழில் காரணமாக வெளிநாட்டிற்கு  செல்லும் இலங்கையர்களுக்கு பணியகத்தின் இணையத்தள முறைமையின் ஊடாக பதிவு செய்வதற்கான வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, www.slbfe.lk என்ற இணையத்தளத்தில் சுய பதிவை அணுகுவதன் மூலம் இந்தப் பதிவை மேற்கொள்ள முடியும் என பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

இலங்கையில் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம் – பாதுகாப்பு தடுப்பு பலகையில் சிக்கி பலி

  • April 11, 2023
  • 0 Comments

ஊவாபரணகம, மஸ்பன்ன கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் படுக்கையைச் சுற்றியிருந்த மர பாதுகாப்பு பலகையில் சிக்கி 7 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. மஸ்பன்ன, வெலேக்கடே வீடு ஒன்றில் வசித்து வந்த ஹர்ஷனி மதுஷிகா என்ற 7 மாத பெண் குழந்தையே வீட்டின் கட்டிலில் இருந்து வீழ்ந்து, மர பாதுகாப்பு பலகையில் சிக்கி உயிரிழந்துள்ளது. உயிரிழந்த குழந்தையின் தாய் வீட்டில் வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில், குழந்தை உறங்கிக் கொண்டிருந்த படுக்கையறைக்கு அருகில் வந்து பார்த்தபோது, ​​கட்டிலைச் […]

இலங்கை செய்தி

கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

  • April 11, 2023
  • 0 Comments

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்றைய தினம் 10 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை அறிவித்துள்ளது. மின்சார சபையால் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சீரமைப்பு பணிகள் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 11மணி முதல் இரவு 9 மணி வரை நீர் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது. இதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே மற்றும் கடுவலை நகர சபை அதிகாரப் பிரிவுகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த […]

இலங்கை செய்தி

இலங்கையில் பணியிலிருந்து விலகிய 25,000 படையினர்

  • April 11, 2023
  • 0 Comments

கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 25,000 இராணுவத்தினரும் 1,000 பொலிஸாரும் பணியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் சுமார் 1,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பதவிகளைவிட்டு வெளியேறியுள்ளதாகவும், இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் சுமார் 200 பொலிஸ் அதிகாரிகள் பதவிகளை விட்டு விலகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி வட அமெரிக்கா

ஒன்பது வயதில் 3உலக சாதனைகளுக்கு சொந்தக்காரியான கனேடிய சிறுமி !

கனடாவின் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி மூன்று கின்னஸ் உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். மமாதி வினோத் என்ற ஒன்பது வயது சிறுமியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். சாகச வளைய நடனத்தில் இந்தச் சிறுமி மூன்று பிரிவுகளில் உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதம் பிரித்தானியாவில் வைத்து இந்த சிறுமி மூன்று கின்னஸ் உலக சாதனைகளை படைத்துள்ளார். வெவ்வேறு நிலைகளில் சாகச வளையத்தில் சுழற்றுவதன் மூலம் இந்த சாதனையை குறித்த சிறுமி […]

இலங்கை செய்தி

இலங்கையில் பெரும் சோகம் – தாயை தேடி சென்ற பிள்ளைகளுக்கு நேர்ந்த கதி

  • April 11, 2023
  • 0 Comments

பதுளை-ஹாலி-எல, போகொட கிராமத்தில் நீர்ப்பாதையை கடக்க முயன்றபோது, நீரால் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவர்கள் உயிரிழந்துள்ளது. ஏழு வயது சிறுமி மற்றும் 10 வயது சிறுவன் ஆகியோரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நீர்ப்பாதையை கடக்க முற்பட்ட இந்த இரண்டு சிறு பிள்ளைகளும் நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்ட துரதிஷ்டவசமான சம்பவம் வியாழக்கிழமை பதிவாகியுள்ளது. இந்த இரண்டு பிள்ளைகளும் வேலைக்குச் சென்ற தங்கள் தாயைத் தேடிச் சென்றபோதே நீரால் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர். இந்த பிள்ளைகளின் தாய் தினசரி கூலிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்து வந்தார், […]

இலங்கை செய்தி

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி,

  • April 11, 2023
  • 0 Comments

ஜப்பானில் இருந்து வருகைதந்த சுற்றுலாப் பயணியான 52 வயதான பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டார் என்ற  குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் மரபுரிமை நகரத்தை பார்வையிடுவதற்காக வந்திருந்த ஜப்பான் பெண்ணுக்கு தேசிய மசாஜ் செய்வதாகக் கூறி அழைத்துச் சென்றே, அப்பெண்ணிடம் அவர் தவறாக செயற்பட்டுள்ளார். வலி தாங்கமுடியாத அப்பெண், அவரது பிடியில் இருந்து தப்பிவந்து, தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என சுற்றுலாப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சுற்றுலா வழிகாட்டியாக தன்னை இனங்காட்டிக்கொண்டு இவ்வாறு […]

இலங்கை செய்தி

யாழில் ஆசிர்வாத வழிபாடுகளை நடத்திய பிரபல பாதிரியார் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்

  • April 11, 2023
  • 0 Comments

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்து யாழ்ப்பாணப் பகுதியில் “ஆசிர்வாத வழிபாடுகளை” நடத்தத் தயாரான பாதிரியார் மற்றும் அவரது குடும்பத்தினர் நால்வரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவர்களுக்கு எதிராக யாழ்.பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பால் தினகரன் என்ற இந்த பாதிரியார் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கடந்த 15 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வர்த்தக விசாவில் இலங்கை வந்துள்ளார். […]