கிறிப்டோ நாணயத்திட்டத்தில் முதலிடவேண்டாம் என இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு
கிறிப்டோ முதலீடுகளை அடிப்படையாகக்கொண்டு, நாடளாவிய ரீதியில் நிதியியல் மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. கிறிப்டோ நாணயங்கள் இலங்கையில் சட்டபூர்வமான நாணயம் அல்ல என்பதுடன், நாட்டில் அவற்றின் பயன்பாட்டுடன் தொடர்புடைய ஒழுங்குமுறைப்படுத்தலும் பாதுகாப்புச்செயன்முறைகளும் நடைமுறையில் இல்லை. எனவே இணையத்தளம் மற்றும் ஏனைய வழிமுறைகளின் ஊடாக வழங்கப்படும் கிறிப்டோ நாணயத்திட்டத்தில் முதலிடவேண்டாம் என்று இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை எச்சரித்துள்ளது. கிறிப்டோ என அழைக்கப்படும் மறைக்குறி நாணயங்கள் தொடர்பில் பொதுமக்களால் எழுப்பப்படும் கேள்விகளைக் கருத்திற்கொண்டு, அதுபற்றி விளக்கமளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே […]