இலங்கை செய்தி

11 கிலோ தங்கத்தை ஜெல் வடிவில் கடத்த முற்பட்ட நால்வர் கைது!

  • April 12, 2023
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் பல கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும்,  விமான நிலைய பாதுகாப்பு  பிரிவினர் மற்றும் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்திலிருந்து 11 கிலோ தங்கத்தை  ஜெல் வடிவில் ஆக்கப்பட்டு பார்சல்களில் அடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வெளிநாடு ஒன்றிலிருந்து வந்த பயணி ஒருவர் இந்த தங்க கையிருப்பை  பயணிகள் பரிமாற்று பகுதியில் உள்ள  குறித்த வரியில்லாத வர்த்தக நிலையம் ஒன்றின் முகாமையாளரிடம்  […]

இலங்கை செய்தி

புத்தாண்டு சுபநேரப் பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

தமிழ், சிங்கள புத்தாண்டு சுபநேரப் பத்திரம் பாரம்பரிய மற்றும் சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி மேளதாளத்துடன் கொண்டுவரப்பட்ட சுபநேரப் பத்திரத்தை, புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார். வளர்பிறை தரிசனம், பழைய ஆண்டிற்கான நீராடல், புத்தாண்டுப் பிறப்பு, புண்ணியகாலம், உணவு சமைத்தல்,  சுப காரியங்களை ஆரம்பித்தல் கைவிசேடம் பெறுதல், உணவு உண்ணுதல், தலைக்கு மருத்துநீர் வைத்தல், […]

இலங்கை செய்தி

காதலை மறுத்த மாணவி.. பாடசாலைக்குள் நுழைந்து வாள்வெட்டு சம்பவம் !

  • April 12, 2023
  • 0 Comments

கல்ஓயா பிரதேசத்தில் உள்ள தம்ம பாடசாலை (பௌத்த மத அறநெறி) ஒன்றில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கல்ஓயா காவல்துறை பிரிவிற்குட்பட்ட விகாரை ஒன்றில் இயங்கி வரும் தம்ம பாடசாலையில் 11 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மீதே வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆலய வளாகத்தினுள் (02) காலை 7.45 மணியளவில் நுழைந்த நபர் இமாஷா என்ற மாணவியை கூரிய ஆயுதத்தால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் கல்ஓயா காவல்துறைக்கு கிடைத்த […]

இலங்கை செய்தி

கிளர்ச்சிக்கார்ர்களை ஒடுக்கவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

  • April 12, 2023
  • 0 Comments

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு ஊடாக மக்களை அடக்குவது அரசின் நோக்கம் அல்ல. ஆனால், கிளர்ச்சியாளர்கள் வெறியாட்டம் போட நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வெளியிடப்படுவது தொடர்பில் கருத்துரைக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்தார். அது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் “புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு இம்மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டவரைவு சபையில் முன்வைக்கப்படுவதற்கு முன்னரே அது பேராபத்து […]

இலங்கை செய்தி

இலங்கையில் குறைவடையும் அத்தியாவசிய பொருட்களின் விலை

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களது மொத்த விலை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால், இவ்வாறு பொருட்கள் குறைவடைவதாக அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களிலும், தொடர்ந்தும் விலை குறைவடையும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார். எந்த பொருட்களிலும், தட்டுப்பாடு இதுவரை ஏற்படவில்லை. பண்டிகைக்காலத்தில் அனைத்து பொருட்களும், தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. வெங்காயம், பருப்பு, கிழங்கு, சீனி, கோதுமை […]

இலங்கை செய்தி

இலங்கையில் தண்டனை முறைமையில் மாற்றம்!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் சிறிய குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை சிறைச்சாலைகளில் தடுத்துவைப்பதற்கு பதிலாக மாற்று நடவடிக்கைகள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். குறித்த சந்தேகநபர்களை ஒரு பாதுகாவலரின் கீழ் வைத்து கண்காணிக்கும் வேலைத்திட்டமொன்று தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை செய்தி

இலங்கையில் மின் கட்டண குறைவு தொடர்பில் வெளியான தகவல்!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் டீசல் உட்பட எரிபொருள் விலை குறைவினால் 30 அலகுக்கும் குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் மின் பாவனையாளர்களுக்கு ஒரு மின்சார அலகை 12 ரூபாவிற்கு வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க இதனை தெரிவித்தார். மேலும், 31 முதல் 60 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 31வது யூனிட் முதல் ஒரு யூனிட் மின்சாரத்திற்காக வசூலிக்கப்படும் 37 ரூபாயை 15 ரூபாயாக குறைக்கலாம் என்றார். எரிபொருள் விலை குறைக்கப்பட்டதன் பின்னர் […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி ரணில் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

  • April 12, 2023
  • 0 Comments

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அநுராதபுரத்திலுள்ள விமனாப்டை முகாமில் முப்படையினருக்கான சிறப்புரை ஆற்றிய போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு மற்றும் நீதி அமைச்சர்களுக்கு இது தொடர்பான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதெனவும், இந்த நடவடிக்கைகளுக்கு காவல்துறையினர் உதவ வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தான் அதிபராக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீறுவதற்கு எவருக்கும் இடமளிக்கபோவதில்லை என அவர் தெரிவித்தார்.  

மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவது நிறுத்தப்படவில்லை – சியம்பலாபிட்டிய

  • April 12, 2023
  • 0 Comments

மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவது நிறுத்தப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளார். தெஹியோவிட்டவில் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முறையற்ற முறையில் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதை தடுப்பது போன்ற பல விடயங்களில் அமைச்சு செயற்பட்டு வருவதாக தெரிவித்தார். ஏற்கனவே வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், மேலும் விஞ்ஞான முறையின் கீழ் உரிமம் வழங்குவதற்கான அறிக்கை அடுத்தவாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை செய்தி

குப்பி விளக்கால் ஆறு மாத குழந்தை பலி – முல்லைத்தீவில் சம்பவம்

  • April 12, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேராவில் பகுதியில் குப்பி விளக்கு கவிழ்ந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 6 மாத குழந்தை எரிந்து ஆபத்தான நிலையில் உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி இரவு தேராவில் பகுதியில் உள்ள குறித்த வீட்டில் குழந்தை உறங்கிக் கொண்டிருந்த போது குப்பி விளக்கு தீப்பிடித்து எரிந்த நிலையில் சிசுவின் உடல் எரிந்து ஆபத்தான நிலையில் தருமபுரம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிசுவை மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு […]