இலங்கை செய்தி

மரணப் பொறியாக மாறிய உலகின் மிக விலையுயர்ந்த பங்களா;வேதனையில் வீட்டின் உரிமையாளர்

  • April 12, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் சமீபத்தில் உலகின் மிக விலையுயர்ந்த பங்களாவை வாங்கிய நபர், அதனை ஒரு மரண பொறி என கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாம் கிளான்ஃபீல்ட் எனும் 44 வயது பிரித்தானியர், கடந்த மார்ச் மாதம் 13.5 மில்லியன் பவுண்டுகளை (இலங்கை பணமதிப்பில் ரூ. 536 கோடி) கொடுத்து டோர்செட்டின் சாண்ட்பேங்க்ஸ் ரிசார்ட்டில் உள்ள நார்த் ஹேவன் பாயிண்ட் பங்களாவை வாங்கினார். இங்கிலாந்தின் தெற்கில் உள்ள இந்த இடம் கடலோர ரியல் எஸ்டேட்டின் உலகின் மிக விலையுயர்ந்த பகுதியாக […]

இலங்கை செய்தி

மத்திய வங்கியில் காணாமல்போன 5 மில்லியன் ரூபா குறித்து விசாரணை!

  • April 12, 2023
  • 0 Comments

மத்திய வங்கியிலிருந்து காணாமல்போன 5 மில்லியன் ரூபா தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மத்திய வங்கியின் பெட்டகத்திலிருந்து காணாமல்போன குறித்த பணம் தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகள் கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மத்திய வங்கியும் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை செய்தி

கிளிநொச்சியில் 5 மாத கர்ப்பிணி மனைவி மீது துப்பாக்கி சூடு நடத்திய கணவன்!

  • April 12, 2023
  • 0 Comments

டும்பத்தகராறு காரணமாக ஐந்து மாத கர்ப்பிணியான மனைவி மீது கணவன் துப்பாக்கி சூடு மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மனைவி படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார். அக்கராஜன் குளம் காவல்துறை பிரிவுக்குற்பட்ட கரித்தாஸ் குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் 33 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 40 […]

செய்தி வட அமெரிக்கா

உலகின் முதல் 3டி-அச்சிடப்பட்ட ராக்கெட் கலிஃபோர்னியாவில் அறிமுகம்

கலிஃபோர்னியாவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் ரிலேட்டிவிட்டி ஸ்பேஸ் உருவாக்கிய 3D-அச்சிடப்பட்ட ராக்கெட், உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதற்கான அமெரிக்க நிறுவனத்தின் புதிய உத்தியின் முக்கிய சோதனையில் சுற்றுப்பாதையில் அதன் முதல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. 35-மீட்டர் (115-அடி) டெர்ரான் 1 ராக்கெட், இதில் 85 சதவீதம் 3டி பிரிண்டரில் இருந்து தயாரிக்கப்பட்டது, கிழக்கு நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடாவின் கேப் கனாவரலில் உள்ள அமெரிக்க விண்வெளிப் படையின் தள ஏவுதளத்தில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டது. ரிலேட்டிவிட்டி ஸ்பேஸின் […]

இலங்கை செய்தி

இலங்கையில் மசாஜ் நிலையம் சென்றவருக்கு நேர்ந்த கதி

  • April 12, 2023
  • 0 Comments

கந்தானை பகுதியில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றிற்கு சென்ற நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 42 வயதுடையவர் என தகவல் வெளியாகியுள்ளது. கந்தானை நாகொட பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர் நேற்று நள்ளிரவு மசாஜ் நிலையத்துக்கு வந்துள்ளார். பின்னர் இன்று காலை அந்த நபர் அங்கு உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

இலங்கை செய்தி

சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்

  • April 12, 2023
  • 0 Comments

வவுனியா மண்ணின் சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார். ரொய்ட்டர், பிபிசி, வீரகேசரி மற்றும் மின்னிதழ்களில் செய்தியாளராகவும் கட்டுரை ஆசிரியராகவும் செயற்பட்டுவந்த பொன்னையா மாணிக்கவாசகம், நள்ளிரவு 12.40 மணி அளவில் இம்மண்ணுலக வாழ்வை முடித்துக்கொண்டு எம்மிடமிருந்து விடைபெற்றார். அன்னார் நாட்டின் நெருக்கடியான காலகட்டங்களில் குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களில் இடம்பெற்ற யுத்த மோதல்கள் குறித்து தமது உயிரையும் பொருட்படுத்தாமல் செய்தி சேகரித்து சர்வதேசமெங்கும் மக்கள் எதிர்கொண்ட துன்பங்களை வெளிப்படுத்திவந்தார். அன்றைய நாட்களில் இரவு 9.15 மணிக்கு ஒலிபரப்பாகும் பிபிசியின் […]

இலங்கை செய்தி

அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்திற்கு 5 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு!

  • April 12, 2023
  • 0 Comments

அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 50 அரச மருந்தக நிலையகங்களின்  26 இல் தேவையற்ற செலவுகள் அடங்கலாக பல்வேறு காரணங்களால் 5 கோடியே 32 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் குறிப்பிடுகின்றது. தேசிய கணக்காய்வு அலுவலகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அறிக்கையின் படி, இரத்தினபுரி,  ஸ்ரீ ஜயவர்தனபுர,  பண்டாரகம மற்றும் மொனராகலை ஆகிய நான்கு  அரச மருந்தகங்களில்  2020 ஆம் ஆண்டு  இலாபம் ஈட்டி இருந்த நிலையில்,  […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு; இந்திய இளைஞர் ஒருவரை கைது செய்த பொலிஸார்

ஒன்ராறியோ பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டதும், பின்னர் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கில் இந்திய இளைஞர் ஒருவர் ஐந்தாவது நபராக கைதாகியுள்ளார். ஒன்ராறியோ பகுதியை சேர்ந்த Elnaz Hajtamiri கடத்தப்பட்டு, இதுவரை அவர் உயிருடன் உள்ளனரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற விவகாரத்தில் இதுவரை துப்புத்துலங்கவில்லை.இந்த நிலையில் கடந்த 2021 டிசம்பர் மாதம் இறுதியில் Elnaz Hajtamiri மீது வாணலியால் தாக்கிய விவகாரத்தில், தற்போது 25 வயதான ஆகாஷ் ரானா என்பவர் கைதாகியுள்ளார். குறித்த சம்பவமானது அவர் தங்கியிருந்த ரிச்மண்ட் […]

இலங்கை செய்தி

யாழில் பெண் ஒருவரின் செய்த மோசமான செயல்

  • April 12, 2023
  • 0 Comments

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஓட்டுமடம் – பொம்மைவெளியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பொம்மைவெளி 5 ஆம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த 32 வயது பெண்ணே கைது செய்யப்பட்டார். உயிர்க்கொல்லி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக நீண்ட நாள்களாக தேடப்பட்டு வந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர். […]

இலங்கை செய்தி

இலங்கையில் வாக்குவாதத்தால் ஏற்பட்ட விபரீதம்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக்கொலை நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயம் அடைந்த நபரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீரிகம பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலையை செய்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.