செய்தி தமிழ்நாடு

கண்களை குளிரவைத்து தெப்பத்திருவிழா

  • April 13, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில்  பிரசித்தி பெற்ற அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது 11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நேற்றைய தினம் இரவு தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அமர்ந்தபடி கந்த பெருமான் வள்ளி தெய்வானையுடன் தெப்பக்குளத்தை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் அரோகரா என கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இதில் உள்ளூர் மட்டுமல்லாது […]

செய்தி தமிழ்நாடு

ஊட்டச்சத்து மாத்திரை உட்கொண்ட மாணவிகள் மயக்கம்

  • April 13, 2023
  • 0 Comments

நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியில் உதகை நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 249 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழக அரசு சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்படும். இது ஒரு மருத்துவ மேற்பார்வையாளர் அல்லது பள்ளியில் உள்ள ஆசிரியர் மூலம் வழங்கப்படும். இந்நிலையில் 8-ம் வகுப்பு பயின்று வரும் 4 மாணவிகளிடையே யார் அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொள்வது என போட்டி நிலவியதாக தெரிகிறது. இதனால் ஒவ்வொரு […]

செய்தி தமிழ்நாடு

ஹிந்தியில் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்திய காவலர்

  • April 13, 2023
  • 0 Comments

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வட மாநிலத்தவர்கள் உணவகங்கள்,தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான ஒரு சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதேபோல பீகார் பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு சில பீகார் பத்திரிகைகள் தவறான ஒரு செய்தியினை பரப்பியதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வரக்கூடிய வட மாநில தொழிலாளர்கள் அச்சத்துடன் […]

செய்தி தமிழ்நாடு

அர்ஜுனா விருது பெற்ற மாற்றுத்திறனாளி வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா

  • April 13, 2023
  • 0 Comments

மதுரை லேடி டோக் கல்லூரி மாணவி ஜெர்லின் அனிகா மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் விளையாடி தங்கம் உள்ளிட்ட 3 பதக்கம் பெற்றார். இந்திய அரசு வீராங்கனைக்கு  அர்ஜுனா விருது  வழங்கி கெளவுரவித்தது. மாற்றுத்திறனாளி மாணவி ஜெர்லின் அனிகா மற்றும் தேசிய மற்றும் உலக அளவில் விளையாடுப்  போட்டியில்  சாதித்த மாணவிகளுக்கான பாராட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் […]

செய்தி தமிழ்நாடு

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்

  • April 13, 2023
  • 0 Comments

கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் குறைந்த விலைக்கு காலி மனைகள் மற்றும் வீடுகள் கட்டி விற்பனை செய்து வரும் ஜெயம் லேண்ட் புரோமோட்டர்ஸ் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனமாக உள்ளது இதன் நிறுவனரான கண்ணன் தனது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக நிறுவன ஊழியர்களுடன் ஆதரவற்றோர் இல்லத்தில் கேக் வெட்டி உணவு வழங்கி கொண்டாடினார்.. அதன்படி கோவை சிங்காநல்லூர் பகுதியில் கிங்ஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்டோர்வகளுக்கு சிக்கன் பிரியாணி, சில்லி சிக்கன், […]

செய்தி தமிழ்நாடு

கழிவு நீரை அப்புறப்படுத்திய காவலர்

  • April 13, 2023
  • 0 Comments

சென்னை வண்ணாரப்பேட்டை மணியக்காரர் சத்திர சாலை துணிக்கடைகள் நிறைந்த சாலையில் இன்று காலை 51 வது வார்டு பகுதியில் கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டு சாலையில் பெருக்கெடுத்து ஓடியது, இதை கண்ட அந்தப் பகுதியில் போக்குவரத்து பணியை சரி செய்து கொண்டு இருந்த வண்ணாரப்பேட்டை எச்1 போக்குவரத்து காவல்துறை தலைமை காவலர் ரவிக்குமார் அங்கு கடைகளில் தேங்கியுள்ள தண்ணீரை தள்ளுவதற்கு வைத்துள்ள உபகரணத்தை வாங்கி வந்து சாலையில் தேங்கி இருந்த கழிவு நீரை பொதுமக்கள் வசதிக்காக அப்புறப்படுத்தினார், […]

செய்தி தமிழ்நாடு

வதந்திகளாக பரப்பப்படும் வீடியோக்களை நம்ப வேண்டாம்

  • April 13, 2023
  • 0 Comments

கடந்த சில தினங்களாக வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக பல்வேறு வீடியோக்கள் வைரலாக பரவி வந்த நிலையில் தமிழகத்தில் பணியாற்றி வரும் பல்வேறு வட மாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்வதாகவும் இதனால் தொழில்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையினர் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்வதாக தொழில்துறையினர் தெரிவித்து […]

செய்தி தமிழ்நாடு

இவ்வளவு பெரிய ஐயனார் சிலையா?

  • April 13, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குளமங்களம் வெள்ளூரணி ஆற்றங்கரையில் ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட ஐயனார் ஆலயம் உள்ளது. ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். ஆசியாவிலேயே மிக உயரமான 33 அடி உயர குதிரை சிலையைக் கொண்ட இவ்வாலயத்தில் திருவிழாவின்போது பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றித் தர வேண்டி காகிதப்பூ மாலையை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இந்தாண்டு நடைபெற்ற திருவிழாவில் சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் சிவ வீ மெய்யநாதன் முதல் மாலையை காணிக்கையாக செலுத்தினார்.அதனை தொடர்ந்து […]

செய்தி தமிழ்நாடு

நெல் கொள்முதல் விவசாயிடம் மோசடி

  • April 13, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த  அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள வடமன்னிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேலு இவர் தனக்கு சொந்தமான நிலத்திலும் மற்றும் அவரைச் சார்ந்த விவசாயிகளுடைய நெல்லையும் தன் சொந்த பொறுப்பில் ஏற்றி விற்பனைக்காக புதுவயல் அப்துல்காதர் என்ற நெல் வியாபாரிக்கு லாரி மூலம் நெல் மூட்டைகளை ஏற்றி அனுப்பி உள்ளார். இது சம்பந்தமாக 10 லட்சம் நிலுவையில் உள்ளது. இது குறித்து நெல் வியாபாரி அப்துல் காதரிடம் பலமுறை நேரில் சென்று பணம் கேட்டுள்ளார். […]

செய்தி தமிழ்நாடு

காலை தரிசனம் மாசி மக தரிசனம்

  • April 13, 2023
  • 0 Comments

அருள்மிகு காசி விஸ்வநாதர் கும்பகோணம்) சுப கிருது வருடம் : மாசி மாதம் 22 ஆம்  நாள் ! மார்ச் மாதம் : 06 ஆம் தேதி ! (06-03-2023) திங்கட்கிழமை ! சூரிய உதயம் : காலை : 06-30 மணி அளவில் ! சூரிய அஸ்தமனம் : மாலை : 06-26 மணி அளவில் இன்றைய திதி : வளர்பிறை : சதுர்த்தசி.. மாலை 05-00 மணி வரை ! அதன்பிறகு  பௌர்ணமி ! […]