பாட்டியின் செல்லப்பெயரை மகளுக்கு வைத்த இளவரசர் ஹரி: ராஜ குடும்ப எழுத்தாளர் விமர்சனம்
இளவரசர் ஹரி தன் மகளுக்கு தன் பாட்டியாரின் செல்லப்பெயரை வைத்துள்ளதை பலரும் அறிந்திருக்கக்கூடும். ஆனால், அந்த பெயரை ஹரி தன் மகளுக்கு வைத்தது அவமரியாதைக்குரிய செயல் என்கிறார் ராஜ குடும்ப எழுத்தாளர் ஒருவர். ஹரி தன் மகளுக்கு லிலிபெட் டயானா மௌண்ட்பேட்டன் விண்ட்ஸர் என பெயரிட்டுள்ளார்.அதில் லிலிபெட் என்பது தன் பாட்டியாரான மகாராணி எலிசபெத்தின் செல்லப்பெயராகும்.அதாவது, மகாராணியார் சிறுபிள்ளையாக இருக்கும்போது, அவரால் தன் பெயரை எலிசபெத் என உச்சரிக்க முடியவில்லையாம்.அவர் தன் பெயர் லிலிபெட் என்று கூறுவாராம். […]