ஆங்கிலக் கால்வாயைக் கடக்க நீண்ட நேரம் காத்திருக்கும் பிரித்தானிய பயணிகள்!
ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற பிரித்தானிய பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள டோவர் துறைமுகம், மோசமான வானிலை, அதிக போக்குவரத்து மற்றும் பிரெஞ்சு அதிகாரிகளின் செயலாக்க தாமதம் ஆகியவற்றால் இந்த தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய வெளியேறியுள்ள நிலையில், இவ்வாறான தாமதங்களால் மக்கள் விரிக்தியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.