ஐரோப்பா செய்தி

Playboy இதழின் அட்டைப்படத்தில் தோன்றிய பிரெஞ்சு அமைச்சர்

  • April 15, 2023
  • 0 Comments

பிரான்ஸ் மந்திரி மார்லின் ஷியாப்பா, Playboy இதழின் அட்டைப்படத்தில் தோன்றியதையடுத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். தன்னை ஒரு சாபியோசெக்சுவல் என்று வர்ணிக்கும் ஷியாப்பா, பத்திரிகையின் பிரெஞ்சு பதிப்பிற்காக உடை அணிந்திருப்பார், மேலும் அவரது 12 பக்க நேர்காணலில் கருக்கலைப்பு, பெண்கள் உரிமைகள் மற்றும் LGBT உரிமைகள் போன்ற தலைப்புகள் இருக்கும். அவரது முடிவை பிரெஞ்சு பிரதமர் எலிசபெத் போர்ன் உட்பட அவரது அரசியல் சகாக்கள் விமர்சித்துள்ளனர். Playboy France இன் அட்டைப்படத்தை அலங்கரித்த முதல் பெண் அரசியல்வாதி  […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனில் 501 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெஃப் அறிவிப்பு!

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரைனில் போர் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை குறைந்தது 501 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. ஐநா குழந்தைகள் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல் இது ஐநாவால் சரிபார்க்கப்பட்ட எண்ணிக்கை எனத் தெரவித்தார். உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் எனத் தெரிவித்த அவர்,  மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை கற்பனை செய்ய முடியாதது எனவும் கூறினார். உக்ரைனின் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு இது மற்றொரு சோகமான மைல்கல் என்றும் அவர் விவரித்தார்.  

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவால் கைது செய்யப்பட்ட நிருபர் இவான் மேல்முறையீடு செய்துள்ளதாக அறிவிப்பு!

  • April 15, 2023
  • 0 Comments

கடந்த வாரம் ரஷ்யாவில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் நிருபர் இவான் கெர்ஷ்கோவிச் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் நிருபர் இவான்  உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. 31 வயதான இவர்  பனிப்போருக்குப் பின்னர் ரஷ்யாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அமெரிக்க செய்தி நிறுவனத்தின் முதல் நிருபர் ஆவார்.

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவின் அணுசக்தி நிலையில் மாற்றம் இல்லை – ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க்

  • April 15, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் அணுசக்தி நிலையில் எவ்வித மாற்றங்களும் இல்லை என நேட்டோ தெரிவித்துள்ளது. ரஷ்யா, பெலாரஸில் அணுவாயுதங்களை நிலைநிறுத்துவதாக அறிவித்துள்ள நிலையில், நேட்டோ ரஷ்யாவின் செயல்பாட்டை உண்ணிப்பாக அவதானித்து வருகிறது. இந்நிலையில், பிரஸ்ஸல்ஸில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க், இதுவரையில் அவர்களின் அணுசக்தி தோரணையில் எந்த மாற்றத்தையும் பார்க்கவில்லை எனக் கூறினார். பெலாரஷ்ய படைகள் உக்ரைனுடனான போரில் அதிகாரப்பூர்வமாக ஈடுபடவில்லை,  ஆனால் மின்ஸ்க் ரஷ்ய படைகளை அதன் பிரதேசத்தில் இருந்து தாக்குதல்களை […]

ஐரோப்பா செய்தி

பிளேபாய் கவர்ச்சி இதழுக்கு போஸ் கொடுத்த பிரான்ஸின் பெண் மந்திரி

  • April 15, 2023
  • 0 Comments

உலகெங்கிலும் அதிக வாசகர்களை கொண்ட பிரபல கவர்ச்சி இதழ் பிளேபாய் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் மந்திரி மார்லின் ஷியாப்பா(40) போஸ் கொடுத்துள்ளார். வழக்கமாக பிளேபாய் இதழுக்கு போஸ் கொடுப்பவர்கள் ஆடையில்லாமல் தான் கொடுப்பார்கள். ஆனால், மார்லின் ஷியாப்பா அப்படிச் செய்யாமல், டிசன்டாகவே போஸ் கொடுத்திருந்தார். இருப்பினும், மந்திரி ஒருவர் வயது வந்தோர் இதழுக்கு எப்படி போஸ் கொடுக்கலாம் என்று சர்ச்சை எழுந்து உள்ளது. பெண்கள், ஓரினச்சேர்க்கை உரிமைகள், கருக்கலைப்பு ஆகியவை குறித்து பிளேபாய் இதழுக்கு 12 […]

ஐரோப்பா செய்தி

நேட்டோ கூட்டணியில் நாளைய தினம் இணையும் ஃபின்லாந்து!

  • April 15, 2023
  • 0 Comments

ஃபின்லாந்து நேட்டோ கூட்டணியில் நாளைய தினம் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளதாக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். ஃபின்லாந்து நேட்டோவில் சேர்வதற்கு தற்போது 30 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், உண்மையில் இது ஒரு வரலாற்று நாள். கூட்டணிக்கு இது ஒரு சிறந்த நாள் என்று அவர் கூறினார். இந்த நடவடிக்கையில் பின்லாந்து பாதுகாப்பானதாக இருக்கும் என ஸ்டோல்டன்பெர்க் கூறினார்.

ஐரோப்பா செய்தி

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் குண்டுவெடிப்பின் பின்னணியில் உக்ரைன் உளவுத்துறை?

  • April 15, 2023
  • 0 Comments

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் குண்டுவெடிப்பின் பின்னணியில் உக்ரைனின் உளவுத்துறையினர் இருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவின் டாஸ் செய்திநிறுவனம் வெளியிட்டுள்ள செய்தின்படி, குறித்த குண்டுவெடிப்பில் உக்ரேனிய புலனாய்வு அதிகாரிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கிரெம்ளின் எதிர்கட்சி பிரமுகர் அலெக்ஸி நவல்னியால் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு அறக்கட்டளையின் முகவர்கள் இந்த தாக்குதலை நடத்த உதவியதாக குற்றம் சாட்டியுள்ளனர். கிரெம்ளின் இந்த தாக்குதலை பயங்கரவாத செயல் என விமர்சித்துள்ளது.  

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் வேலைநிறுத்தத்தை அறிவித்த கடவுச்சீட்டு விநியோக ஊழியர்கள்!

  • April 15, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் கடவுச்சீட்டு விநியோக ஊழியர்கள், ஐந்து வார வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இரட்டை இலக்க பணவீக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில், ஊதிய உயர்வு கோரி குறித்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு தயாராகும் வகையில் பிரித்தானியர்கள் தங்கள் பயண ஆவணங்களை புதுப்பிக்க முற்படுகையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் 1000 ஊழியர்கள் வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், கடவுச்சீட்டை பெற 10 வாரங்கள் வரை செல்லும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐரோப்பா செய்தி

ஈரானிய, சவுதி வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு

  • April 15, 2023
  • 0 Comments

ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் மற்றும் சவுதி அரேபிய இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் ஆகியோர் வரும் நாட்களில் சந்திக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரானிய வெளியுறவு அமைச்சர் இருதரப்பு உறவின் நேர்மறையான போக்கில் திருப்தி உள்ளதென  தெரிவித்துள்ளார். ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, தெஹ்ரானின் நல்ல அண்டை நாடு கொள்கையை மேம்படுத்துவதற்கான உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளார். சவூதி வெளியுறவு அமைச்சர், தனது பங்கிற்கு, இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையே நிலையான தொடர்பு மற்றும் […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் அறுவர் பலி!

  • April 15, 2023
  • 0 Comments

கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கோஸ்ட்யாண்டினிவ்கா நகரின் மீது ரஷ்ய நடத்திய ஏவுகணை தாக்குதலில், 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனது அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனலில் வெளியிட்ட செய்தியில்.  ரஷ்யப் படைகள் எஸ் -300 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக பாவ்லோ கைரிலென்கோ கூறினார். இத்தாக்குதலில் 17 உயரமான கட்டிடங்கள் 18 வீடுகள் மற்றும் ஒரு மருத்துவமனை ஆகியவை அழிக்கப்பட்டன. மூன்று ராக்கெட்டுகளால் தாக்கப்பட்ட அவ்திவ்கா உட்பட கடந்த 24 மணி […]