சூடானில் இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம் ; 14 பேர் பலி 20 பேர் படுகாயம்
வடக்கு சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டின் எல்லைக்குட்பட்ட ஜெபல் அல்-அஹ்மரில் தங்கச் சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த தங்கச் சுரங்கத்தில், அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் இங்கு வேலை செய்து வருகின்றனர். நேற்று மதியம் இந்த சுரங்கம் திடீரென்று இடிந்து சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் பலர் சிக்கி படுகாயம் அடைந்தனர். உடனடியாக பொலிஸாருக்கும், மீட்புக்குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து […]