நைஜீரியாவின் பெனு மாகாணத்தில் ஆயுதமேந்திய கும்பல் 74 பேரைக் கொன்று குவித்துள்ளது
நைஜீரியாவின் பெனு மாநிலத்தில் இந்த வாரம் ஆயுதமேந்திய குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற இருவேறு தாக்குதல்களில் குறைந்தது 74 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகளும் காவல்துறையினரும் தெரிவித்துள்ளனர். மேய்ச்சல்காரர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான வன்முறைகள் பொதுவாகக் காணப்படும் பகுதியில் சமீபத்திய மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை காலை வரை Mgban உள்ளூர் அரசாங்கப் பகுதியில் உள்ள உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாமில் 28 சடலங்கள் மீட்கப்பட்டதாக பெனு மாநில காவல்துறை செய்தித் […]