மாயா சிவஞானம் -வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன் கலந்துரையாடல்
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார துணை பணிப்பாளர் மாயா சிவஞானம் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்துள்ளார். இதன்போது வடக்கின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி நகர்வுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக யுத்தத்திற்கு பின்னரான வடக்கின் அபிவிருத்தியில் அரசாங்கங்களின் பங்களிப்புகள் மற்றும் பிரித்தானிய அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் வடக்கின் நல்லிணக்க வேலைத்திட்டங்கள் குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.