இலங்கை

தடம் புரண்டது யாழ் தேவி

  • April 10, 2023
  • 0 Comments

அநுராதபுரத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் யாழ்தேவி புகையிரதம் மஹவ நிலையத்திற்கு அருகில் இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ளதாக ரயில்வே பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இன்று பிற்பகல் 2 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து பயணிக்க ஆரம்பித்த இந்த ரயில் தடம் புரண்டது. தடம் புரண்டதற்கு முன், ரயில் பெட்டிகள் இணைக்கும் பகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு, ஒரு வழிப்பாதை முற்றிலும் தடைபட்டதாக கூறப்படுகிறது. ரயிலை மீட்கும்  பணி விரைவில் தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இலங்கை

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை தங்க ஆபரண வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு – செட்டியார் தெருவில் இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த சங்கத்தின் பொருளாளர் ராமன் பாலசுப்ரமணியம் இதனை தெரிவித்தார். மேலும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று ஒரு இலட்சத்து 57 ஆயிரத்து 480 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். ரூபாவின் […]

இலங்கை

நெருக்கடியான நேரத்திலும் பெண் ஒருவருக்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சை

  • April 10, 2023
  • 0 Comments

நாட்டில் மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறைக்கு மத்தியில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை தொடர்பில் கண்டி தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. ஆசனவாயில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 67 வயதுடைய பெண் ஒருவரே உரிய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். கண்டி தெல்தெனிய அடிப்படை வைத்தியசாலையின் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைப் பயன்படுத்தி 67 வயதுடைய பெண் ஒருவரின் புற்றுநோயை வெற்றிகரமாக அகற்றுவதற்கு கண்டி தெல்தெனிய அடிப்படை வைத்தியசாலையின் வைத்தியர்கள் குழுவொன்று முயற்சித்துள்ளது. இது குறித்து வைத்தியர்கள் கருத்து தெரிவிக்கையில், மருந்து […]

இலங்கை

மருந்து இல்லை எனக் கூறினால் முறைப்பாடு அளியுங்கள் – இலங்கை வைத்திய சங்கம் வலியுறுத்தல்!

  • April 10, 2023
  • 0 Comments

அரச வைத்தியசாலைகள் அல்லது அரச மருந்தகங்களில் செல்லும் நோயாளர்களுக்கு அங்கு மருந்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டால் , அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்குமாறு இலங்கை வைத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை வைத்திய சங்கத்தினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பெப்ரவரி 15ஆம் திகதி நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவிக்கையில், எந்தவொரு நோயாளியும் அரச வைத்தியசாலைகள் அல்லது மருந்தகங்களுக்கு சென்று […]

இலங்கை

உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – ரோஹன ஹெட்டியாராச்சி!

  • April 10, 2023
  • 0 Comments

உள்ளூராட்சி மன்ற தேர்தலை திகதி குறிப்பிடாமல் பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசாங்கம் மிகவும் மோசமான முறையில் தலையிட்டு வருகிறது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். பெப்ரல் அமைப்பு நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர்,; தேர்தல் முறையை மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பது தெளிவாக தெரிகிறது. வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் அபாயத்தில் நாம் இருக்கிறோம்.  வரையறைகளை அமைத்து, அதற்கமைய மீண்டும் வேட்புமனு […]

இலங்கை

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

  • April 10, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலரொன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து உயர்வடைந்து வருகின்றது. நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட பணவீக்க உயர்வினால் கடந்த காலங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துசென்றது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 343.97 ரூபாவாகவும், அதன் விற்பனைப்பெறுமதி 356.73 ரூபாவாகவும் சாதகமான மட்டத்தில் பதிவாகியிருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று (03)  ரூபாவின் பெறுமதி கணிசமானளவினால் உயர்வடைந்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் டொலர் […]

இலங்கை

மொட்டின் தவிசாளர் பதவியில் இருந்து ஜி.எல்.பீரிஸ் நீக்கம்

  • April 10, 2023
  • 0 Comments

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜி.எல். பீரிஸை நீக்குவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். அவரை கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை

ஜனாதிபதியால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் – அமைச்சர் பந்துல!

  • April 10, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் பொருளாதார காரணிகளுக்கு தற்போது முன்னுரிமை வழங்கியுள்ளோம் என போக்குவரத்து துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ஹோமாகம பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர், சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் நாடு என்றுமில்லாத வகையில் பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. நாடு வங்குரோத்து […]

இலங்கை

எரிவாயு விலை தொடர்பில் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ள லி

  • April 10, 2023
  • 0 Comments

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை இம்மாதம் அதிகரிக்கப்படவிருந்த நிலையில் , டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் நாளை(05) அறிவிப்பார் என கூறப்படுகின்றது. அதேசமயம் எரிவாயு விலை அதிகரித்தாலும், குறைந்தாலும் பெரிய தொகையாக இருக்காது எனவும் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.

இலங்கை

உயர்கல்வி அமைச்சராக பதவியேற்கும் எஸ்.பி.திசாநாயக்க!

  • April 10, 2023
  • 0 Comments

எஸ்.பி. திசாநாயக்கவை உயர்கல்வி அமைச்சராக பதவியேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் உயர்கல்வி அமைச்சுப் பதவியுடன் கல்வி அமைச்சுப் பதவியும் ஒன்றாக இருப்பது விரும்பத்தக்கது என எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் முழு அமைச்சரவை மாற்றத்தை செய்வார் எனவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.