இலங்கை

வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்த அருங்காட்சியத்தை உருவாக்கும் முயற்சியில் சர்வதேச மன்னிப்புசபை!

  • April 10, 2023
  • 0 Comments

தெற்காசியப்பிராந்திய வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் நிகழ்நிலை அருங்காட்சியகத்தை உருவாக்கும் முயற்சியில் சர்வதேச மன்னிப்புச்சபை ஈடுபட்டு வருகிறது. இலங்கையைப் பொறுத்தமட்டில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும், அதற்கு முன்னரான இனக்கலவரங்களின்போதும் பெருமளவானோர் வலிந்து காணாமலாக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச கட்டமைப்புக்கள் மற்றும் உள்நாட்டில் நிறுவப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும், நீதியை […]

இலங்கை

கல்வி அமைச்சர் வெளியிட்ட செய்தி

  • April 10, 2023
  • 0 Comments

பாடசாலை 3ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சீன நன்கொடையின் கீழ் இலங்கை பெற்றுக்கொண்ட பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகள் உத்தியோகபூர்வமாக செவ்வாய்க்கிழமை பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை, மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகம் 3ஆம் தவணை முடிவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளா

இலங்கை

யாழ் மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக சொலமன் சிறிலை நியமிக்க திட்டம்

  • April 10, 2023
  • 0 Comments

யாழ். மாநகர சபையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் முதல்வர் வேட்பாளராக சொலமன் சிறிலை நியமிக்க திட்டமிட்டிருப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இன்று காலையில் தமிழ் அரசு கட்சியின் மாநகரசபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில், பெரும்பாலானோர் சொலமன் சிறிலுடைய பெயரை முன்மொழிந்தனர். அதன் அடிப்படையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அறிவித்துள்ளார். யாழ். மாநகரசபை முதல்வர் தெரிவு எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் சொலமன் சிறிலுக்கான ஆதரவை […]

இலங்கை

இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை : அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவிப்பு!

  • April 10, 2023
  • 0 Comments

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய புலனாய்வு அறிக்கையில் இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை எனவும், ஆனால் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் ஆதரவளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளினால் அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும் இலங்கை அரசாங்கம் புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளன. எவ்வாறாயினும், இலங்கையில் இன்னமும் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் தெரிவித்துள்ள அமெரிக்க அரசாங்கம், போராட்டங்களை ஒடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளது. இதனிடையே, 2009 இல் விடுதலைப் புலிகளை இலங்கை […]

இலங்கை

பயங்கரவாத அமைப்பை தோற்கடிப்பதற்கு அமெரிக்காவே உதவியது – அலிசப்ரி!

  • April 10, 2023
  • 0 Comments

உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பை தோற்கடிப்பதற்கு அமெரிக்காவின் புலனாய்வு தகவல்களே உதவியதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். திருகோணாமலையில் இராணுவதளமொன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளிற்காகவே சமீபத்தில் அமெரிக்காவின் உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் மேற்படி கூறினார். அதேநேரம் திருகோணமலையில் இராணுவத்தளம் அமைப்பது குறித்த கருத்துக்களையும் அவர் நிராகரித்துள்ளார். நாங்கள் எங்கும் எவரும் இராணுவதளங்களை அமைப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை ஆனால் அதன் அர்த்தம் நாங்கள் தனிமையில் வாழ […]

இலங்கை

6ஆம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த அதிபர்!

  • April 10, 2023
  • 0 Comments

பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை அதிபரே இச் செயலை செய்ததாக  பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 11 வயது சிறுமியை வன்கொடுமை செய்துள்ளதாகவும் சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகத்திற்குரிய 50 வயதுடைய அதிபர் பலாங்கொட அல்லராவ பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் […]

இலங்கை

இலங்கையின் முக்கிய வீதி மூடல்

  • April 10, 2023
  • 0 Comments

கண்டி – மஹியங்கனை பிரதான வீதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கண்டி – மஹியங்கனை வீதியின் 18 ஆவது வளைவு பகுதியில் 14 ஆவது வளைவுக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்

  • April 10, 2023
  • 0 Comments

தங்கத்தின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை தங்க ஆபரண வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்தார். அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றமையால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு – செட்டியார் தெருவில் நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று ஒரு இலட்சத்து 57 ஆயிரத்து 480 ரூபாவிற்கு விற்பனை […]

இலங்கை

உலகின் சிறந்த இடங்களில் ஒன்றான இலங்கை – Forbes சஞ்சிகை தகவல்

  • April 10, 2023
  • 0 Comments

வனவிலங்குகளை பார்வையிட சிறந்த இடமாக இலங்கையை Forbes சஞ்சிகை தரப்படுத்தியுள்ளது. ஆபிரிக்காவிற்கு  வெளியில் இலங்கை இந்த இடத்தை பிடித்துள்ளது. உலக நாடுகளில்  சிறுத்தைகளின் அடர்த்தியான பரம்பலைக் கொண்ட இடமாகவும் ஆபிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை விடவும்  மிகச்சிறந்த பூனை இனங்களைக் கொண்ட இடமாகவும் இலங்கை அமைந்துள்ளதாக  Forbes குறிப்பிட்டுள்ளது. ஆசிய யானைகள், மயில்கள், நீர் எருமைகள், குரங்குகள் மற்றும்  தேன் உண்ணி கரடிகளை அதிகம் கொண்ட தேசமாகவும் இலங்கை அமைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Cape Cod-இல் இருந்து டொமினிக்கன் […]

இலங்கை

இலங்கையில் மசாஜ் நிலையங்களில் நடக்கும் அட்டகாசம் – சிக்கிய இளம் பெண்கள்

  • April 10, 2023
  • 0 Comments

கல்கிஸை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் பெண்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக கல்கிஸை, இரத்மலானை பிரதேசத்தில்  இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது விபசார விடுதியின் முகாமையாளர் உட்பட 7 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 23 முதல் 39 […]