யாசகரின் குழந்தை மீட்பு : கரு கலைந்ததால் குழந்தை ஆசையில் பெண் செய்த செயல்!
பெண் யாசகர் ஒருவரின் ஒன்றரை மாத ஆண் குழந்தையை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் பெண்ணொருவர் வனாத்துவில்லு பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பம்பலப்பிட்டிய பொலிஸார், கைக்குழந்தை தங்களுடைய பொறுப்பின் கீழ் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தனர்.குழந்தையை கடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், ஓட்டோவின் சாரதி, தரகர்களாக செயற்பாட்ட நான்கு ஆண்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரின் கணவன் வெளிநாட்டில் பணியாற்றுகின்றார். அந்தப் பெண் பிரசவத்துக்காக கொழும் பிரதேசத்தில் உறவினர் வீட்டில் […]