இலங்கை

இலங்கை கொடூரமான பாதுகாப்பு சட்டங்களை கைவிடவேண்டும் – வொல்க்கெர் டேர்க் வலியுறுத்தல்!

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கை  கொடூரமான பாதுகாப்பு சட்டங்களை  கைவிடவேண்டும் என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளிற்கான உயர்ஸ்தானிகர் வொல்க்கெர் டேர்க் இதனை தெரிவித்துள்ளார். பலவீனப்படுத்தும் கடன் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியன இலங்கையில் பொதுமக்கள்  அடிப்படை பொருளாதார சமூக உரிமைகளை பெறுவதை மட்டுப்படுத்தியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். மீட்பு கொள்கைகள் சமத்துவம்இன்மைகளிற்கு தீர்வை காணவேண்டும் வெளிப்படைத்தன்மை ஆட்சியில் பொறுப்புக்கூறல் மற்றும் ஆழமாக வேருன்றியுள்ள தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் ஆகியவற்றை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் […]

செய்தி

கொரோனா தொற்று மெல்ல மெல்ல மீண்டும் அதிகரிக்கும்

  • April 10, 2023
  • 0 Comments

கொரோனா நோய் தொற்றை தடுக்க அனைத்து விதமான கண்காணிப்பு பணிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று மெல்ல மெல்ல மீண்டும் அதிகரிக்கும் சூழலில் கோவையில் கடந்த வாரத்தில் மட்டும் கொரோனாவினால் உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடுமானால் கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ ரீதியாக எப்படி கையாள வேண்டும் என்பதற்கான ஒத்திகை  நிகழ்வு நடைபெற்று வருகிறது. […]

இலங்கை

தொடர்ந்து வளர்ச்சி பாதையில் ரூபாயின் பெறுமதி!

  • April 10, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் கொள்வனவு பெறுமதி 313.77 ஐ எட்டியுள்ளது. அத்துடன் விற்பனை விலை 331.05 ஆக பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், USD/LKR SPOT மாற்று விகிதத்தின் நடுத்தர விகிதம் ரூ. 326.63.

இலங்கை

மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

  • April 10, 2023
  • 0 Comments

நூணயத்தின் பெறுமதி வளர்ச்சியடைந்து வருகின்ற நிலையில், சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்து அரச நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை 30 ரூபாவாலும், பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விற்பனை விலை 40 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை உள்ள மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆத்துடன் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 15 […]

இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பது  குறித்து கவலை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் தளங்களில் பாலின வன்முறைகளை கையாள்வதற்கு பயனுள்ள மற்றும் திறமையான புகார் பொறிமுறைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், டிஜிட்டலை மையமாக கொண்ட பாலின வன்முறை குறித்து  விழிப்புணபுர்வை ஏற்படுத்தவேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் தளங்களை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என […]

தமிழ்நாடு

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா ஒத்திகை

  • April 10, 2023
  • 0 Comments

மதுரை அரசு மருத்துமனையில் கொரோனா ஒத்திகை மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் கொரோனா பரவலை முன்னிட்டு அதற்கான ஒத்திகை இன்று மருத்துவமனையில்  டீன் ரத்தினவேல் முன்னிலை நடத்தப்பட்டுள்ளது. இதில் கொரோனா பாதித்த நோயாளியை எப்படிப் மருத்துவமனை அழைத்து வந்து சிகிச்சை வழங்கப்படும் என செய்முறையில் விளக்கப்பட்டது. திடீரென அம்புலன்ஸில் கொரோனா உடை அணிந்த செவிலியர்கள் நோயாளிகள் போன்ற பொம்மையுடன் இறக்கியதால் அங்கிருந்த பொதுமக்கள் வேக வேகமாக பையில் இருந்த முகக் கவசத்தை எடுத்து மாட்டினர்.  

தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

  • April 10, 2023
  • 0 Comments

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி உள்ளது.இங்கு 40க்கும் மேற்பட்ட மாணவ ,மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த 2021 ஆண்டு கட்டிடத்தை முழுவதும் இடித்து  அப்புறப்படுத்தினர்.அங்கிருந்த மாணவர்களை அதே பகுதியில் […]

இலங்கை

பாணின் விலை குறைப்பு!

  • April 10, 2023
  • 0 Comments

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை  ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகள்  தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை எனவும்  அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து நிதி உறுதிக்கடிதம் நேற்றிரவு (திங்கட்கிழமை) கிடைத்ததையடுத்து நானும் மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்ட இணக்கப்பாட்டுக்கடிதம் சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என நேற்று முன்தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் அறிவித்தார். இந்நிலையில் இலங்கைக்கான உதவிச்செயற்திட்டத்திற்கு அனுமதியளிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள […]

இலங்கை

கொழும்பில் பதற்றநிலை;திடீரென ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள்!

  • April 10, 2023
  • 0 Comments

கொழும்பில் சற்றுமுன் பல்கலைக்கழக மாணவர்கள் பெருந்திரளானோர் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். கொழும்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்றைய தினம் கண்ணீர்ப்புகைக்குண்டுகள் வீசப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்களுடன், பேராசிரியர்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆர்ப்பாட்டம் காரணமாக துன்முல்லை சந்தி மற்றும் Reid அவென்யூ பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.