இலங்கை

பசில் ராஜபக்க்ஷ பற்றி உண்மையை உடைத்த சன்ன ஜயசுமண!

  • April 10, 2023
  • 0 Comments

பசில் ராஜபக்க்ஷ பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். தேசிய அமைப்பாளராக சபுமல் வலவ்வத்த என்ற நபர் பெயரிடப்பட்டுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆவணங்களில் அந்த நபரின் பெயர் இருப்பதாகவும் சன்ன ஜயசுமண குறிப்பிடுகின்றார். அதன்படி செயலாளர் சாகர காரியவசம் நாட்டுக்கு பொய் சொல்கிறார் எனவும், பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கட்சி யாப்பும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட கட்சி யாப்பும் வேறு […]

இலங்கை

உள்ளூராட்சிதேர்தல்கள் தாமதம் – மனித உரிமை ஆணைக்குழு விசாரணை!

  • April 10, 2023
  • 0 Comments

உள்ளூராட்சி தேர்தல்கள் தாமதமாவது குறித்து இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ள ஆணைக்குழுவின் பேச்சாளர் இதன் காரணமாக விசாரணைகள்இடம்பெறும்என தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் விசார

இலங்கை

சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்த தீர்மானம்!

  • April 10, 2023
  • 0 Comments

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சர்ச்சை நிலவுகின்றன பின்னணியில் சர்வஜன வாக்குரிமை தொடர்பில் பாராளுமன்ற விவாதம் அவசியம் என பிரதான எதிர்க்கட்சிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய ஒத்திவைப்டுபு விவாதம் நடைபெறவுள்ளது. குறித்த விவாதம் வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. பாராளுமன்ற அமர்வு வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 7ஆம் திகதி காலை 09.30 மணிமுதல் காலை 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் காலை 10.30 மணிமுதல் […]

இலங்கை

மாயா சிவஞானம் -வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன் கலந்துரையாடல்

  • April 10, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார துணை பணிப்பாளர் மாயா சிவஞானம் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்துள்ளார். இதன்போது வடக்கின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி நகர்வுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக யுத்தத்திற்கு பின்னரான வடக்கின் அபிவிருத்தியில் அரசாங்கங்களின் பங்களிப்புகள் மற்றும் பிரித்தானிய அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் வடக்கின் நல்லிணக்க வேலைத்திட்டங்கள் குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை

அமெரிக்க செனட் சபையின் அறிவித்தல், சர்வதேசத்தின் இலங்கை குறித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது – ஹர்ஷ டி சில்வா!

  • April 10, 2023
  • 0 Comments

அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டலுவல்கள் குழுவின் தலைவர் தேர்தலை மேலும் காலம் தாழ்த்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ளமையின் ஊடாக , இலங்கை தொடர்பில் சர்வதேசம் கொண்டுள்ள நிலைப்பாடு என்னவென்பதை தெளிவாக அறியமுடிகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், இலங்கையில் ஜனநாயகம் சர்வாதிகாரத்தினால் முடக்கப்பட்டுள்ளது என்பதே சர்வதேசத்தின் நிலைப்பாடாகவுள்ளது […]

இலங்கை

இலங்கையில் சில பொருட்களின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

  • April 10, 2023
  • 0 Comments

புறக்கோட்டை மொத்த சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை குறைவடைந்துள்ளது. அதற்கமைய, கிலோவொன்றின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, பெரிய வெங்காயம் கிலோவொன்றின் மொத்த விலை 95 ரூபாவாக காணப்படுவதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் மொத்த விலை 130 ரூபாவாக காணப்பட்டது. இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு கிலோவொன்றின் விலையும் குறைவடைந்துள்ளது. கடந்த வாரம் 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கிலோவொன்று தற்போது 130 ரூபாவாக […]

இலங்கை

கொரோனாவுக்கு பின்னர் இலங்கைக்கு வருகைத்தந்த சீன சுற்றுலாப் பயணிகள் குழு!

  • April 10, 2023
  • 0 Comments

சீன சுற்றுலாப்பயணிகள் குழுவொன்று நேற்று இலங்கைக்கு வந்தடைந்துள்ளனர். கொவிட் -19 தொற்றுக்கு பின்னர் முதலாவது குழுவினர் இவ்வாறு வந்தடைந்துள்ளனர். சீனாவில் கொவிட்-19 தொற்று ஆரம்பமானதை அடுத்து, ஏனைய பல்வேறு நாடுகளிலும் தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து, சுகாதார பாதுகாப்பு கருதி, இலங்கையில் வெளிநாட்டு பயணிகளுக்கு இலங்கை வருவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்தமையினால் இலங்கை பொருளாதார ரீதியில் கடுமையான பின்னடைவை எதிர்நோக்கியிருந்தது. இந்தநிலையில், மீண்டும் நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கையின் சுற்றுலா தொடர்பான விரிவாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படுகிறது. […]

இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி – பிக்கு அடித்துக் கொலை

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையில் 8 வயது சிறுமி ஒருரைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேக நபரான 70 வயதுடைய பௌத்த மதகுரு ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். குருநாகல் வைத்தியசாலையில் மரணமடைந்த மேற்படி மதகுரு ஹெட்டிப்பொல பிதேசத்தைச் சேர்ந்த விகாரை ஒன்றில் வசித்து வந்துள்ளார். குறித்த பௌத்த மதகுரு  சம்பவ தினம் “போதி பூஜா” ஒன்றுக்காக வந்திருந்த சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியே சிறுமியின் உறவினர்களால் குறித்த மதகுரு தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான மதகுரு […]

இலங்கை

கொழும்பிற்கு வரும் சூரிய சக்தியில் இயங்கக்கூடிய பேருந்துகள்

  • April 10, 2023
  • 0 Comments

கொழும்பிற்கு சூரிய சக்தியில் இயங்கக்கூடிய பேருந்துகள் கொண்டுவரப்படவுள்ளது. முன்னோடித் திட்டமாக சூரிய சக்தியில் இயங்கக்கூடிய பேருந்துகளை இயக்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நெடுஞ்சாலைகள் அமைச்சு இது தொடர்பான யோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளது. இதன்படி கொழும்பு வர்த்தக நகரம் மற்றும் கம்பஹா மாவட்டத்தை மையமாக வைத்து குறித்த முன்னோடி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பொது – தனியார் கூட்டுத் திட்டமாக இது செயல்படுத்தப்படுகிறது.  

இலங்கை

இலங்கையில் மற்றுமொரு கட்டணம் உயர்வு!

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையில் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவு மற்றும் புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்ப பதிவுக் கட்டணமான 15,000 ரூபா 35,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி புதிய கட்டணம் 50,000 ரூபாவாகும். மேலும், பதிவு புதுப்பித்தல் கட்டணத்தை 15,000 ரூபாவினால் 10,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]