சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பை அடுத்து இலங்கைக்கு 7 பில்லியன் டொலர்கள் கிடைக்கும் வாய்ப்பு
சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர்சபையின் அனுமதியை அடுத்து 7 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இலங்கைக்குக் கிட்டியிருப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கி, வெகுவிரைவில் நாட்டின் பொதுக்கடன்களின் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படுமெனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின்கீழ் 48 மாதகாலத்தில் சுமார் 2.9 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கான உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி எட்டப்பட்டது. அதனையடுத்து கடந்த 6 மாதகாலமாக சர்வதேச நாணய […]