செய்தி வட அமெரிக்கா

ரஷ்யாவிற்கு விமான தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்த இருவரை கைது செய்த அமெரிக்கா

உக்ரைன் போர் தொடர்பான தடைகளை மீறி ரஷ்யாவிற்கு விமான தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் இரண்டு அமெரிக்க பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 59 வயதான சிரில் கிரிகோரி புயனோவ்ஸ்கி மற்றும் 55 வயதான டக்ளஸ் ராபர்ட்சன் ஆகியோர் ரஷ்ய நிறுவனங்களுக்கு விமானம் தொடர்பான மின்னணு சாதனங்களை வழங்கியதாக அமெரிக்க நீதித்துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. புயனோவ்ஸ்கி மற்றும் ராபர்ட்சன் இருவரும் கன்சாஸில் வசிப்பவர்கள், ரஷ்ய தயாரிப்பான விமானங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்களுக்கு பழுதுபார்க்கும் சேவைகளை […]

இலங்கை செய்தி

இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான 7 அரசு நிறுவனங்களை விற்க முடிவு

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், லிட்ரோ எரிவாயு நிறுவனம் உள்ளிட்ட 7 அரச நிறுவனங்களின் அரச பங்குகளை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. மார்ச் 13ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் கீழ் உள்ள அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவு இன்று பிற்பகல் அறிவித்தது. அமைச்சரவை தீர்மானத்தின்படி, அரசாங்கத்தின் பங்குகளை விற்க முடிவு செய்த அரச நிறுவனங்களின் பட்டியல்; (1) ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் (2) ஸ்ரீலங்கா […]

இலங்கை செய்தி

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இலங்கைப் பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது

  • April 11, 2023
  • 0 Comments

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டத்தை இலங்கை பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குறித்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாகவும் தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு நாம் வங்குரோத்து நாடாக […]

செய்தி

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலின்மை தொடர்கின்றது

  • April 11, 2023
  • 0 Comments

அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படும் விதம் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் இன்னமும் உரியவாறு வெளியிடப்படவில்லை. நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்ற சூழ்நிலையில்கூட, அரசாங்கத்தின் கொள்கைத்தீர்மானங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலின்மை தொடர்கின்றது. பொருளாதார மீட்சிக்கான சாத்தியப்பாடு சூனியமாக இருப்பதையே வெளிப்படுத்துகின்றது என்று வெரிட்டே ரிசேர்ச் அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தினால் கடந்த 2022 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட கொள்கைகள் உரியவாறு பின்பற்றப்படுகின்றனவா என்ற மதிப்பீட்டை வெரிட்டே ரிசேர்ச் அமைப்பு மேற்கொண்டுள்ளது. அதன் ஓரங்கமாக சுகாதாரம் மற்றும் […]

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமூலம்

  • April 11, 2023
  • 0 Comments

பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய புதிய சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரானது எனப் பெயரிப்பட்டுள்ள இந்த சட்டமூலம் ஆங்கிலத்தில் எண்டி – டெரரிசம்  எனக் குறிப்பிட்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளை நீக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது இந்த சட்டமூலத்தை தயாரிப்பதன் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை செய்தி

இலங்கையில் மோட்டார் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த மோட்டார் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இறக்குமதி தடை நீக்கப்பட வேண்டும் என்பதற்கு அமைய இந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தடை செய்யப்பட்ட 101 வகையான பொருட்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனம் உட்பட உலோகங்கள்இ கேக்இ பிளாஸ்டிக்இ சீஸ்இ இறப்பர்இ மரச்சாமான்கள்இ சோப்புகள்இ காய்கறிகள்இ உள்ளிட்ட பொருட்கள் மீண்டும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. நாட்டில் […]

இலங்கை செய்தி

ஐ.எம்.எஃபின் 10 நிபந்தனைகளை அரசாங்கத்தால் செய்ய முடியும் – மைத்திரி!

  • April 11, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் 10 பிரதான நிபந்தனைகளை அரசாங்கம் தாராளமாக நிறைவேற்றலாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர், ஊழல் ஒழிப்பு சட்டம் வெகுவிரைவில் இயற்றப்பட வேண்டும். அரச ஊழல் மோசடியால் இலங்கை வங்குரோத்து நிலை அடைந்தது என சர்வதேசம் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள 10 […]

இலங்கை செய்தி

இலங்கையின் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையில் அனைத்து தரப்பினரும் பங்கெடுக்க வேண்டும் – சீனா வலியுறுத்தல்!

  • April 11, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பானது தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்குப் பெரிதும் உதவும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின், கடன்சுமையை நியாயமான முறையில் பகிரும் கோட்பாட்டுக்கு அமைவாக இலங்கையின் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையில் அனைத்து வர்த்தக மற்றும் பல்தரப்புக் கடன்வழங்குனர்களும் பங்கெடுத்துக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், இலங்கையின் கடன்நெருக்கடியை உடனடியாகவும், செயற்திறனாகவும் கையாள்வதற்கு அவசியமான நிதியியல் உத்தரவாதத்தை சீன […]

இலங்கை செய்தி

மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்தல்

  • April 11, 2023
  • 0 Comments

ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 03ம் திகதிகளில் மேற்கொள்ளப்படவிருந்த தபால் மூல வாக்குப்பதிவு நடவடிக்கைகள் அன்றைய தினங்களில் இடம்பெறாது. அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடனான சந்திப்பை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

இலங்கை செய்தி

ஐ.எம்.எஃபின் நிபந்தனைகளின் தமிழர்கள் புறக்கணிப்பு : கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் அதிருப்தி!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கைக்கான நிதியுதவிச்செயற்திட்டத்துக்கு அனுமதியளித்திருக்கும் சர்வதேச நாணய நிதியம், அதனை முன்னிறுத்தி நிறைவேற்றப்படவேண்டிய நிபந்தனைகளில் இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாமை தமக்கு மிகுந்த அதிருப்தியளிப்பதாக கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதியுதவி அளித்துள்ள நிலையில், இலங்கை நிறைவேற்ற வேண்டிய சில நிபந்தனைகளையும் முன்வைத்துள்ளது. இந்நிலையில், கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். இந்த உதவி செயற்திட்ட […]