இலங்கை செய்தி

இலங்கையில் எரிபொருள் வரிசை மீண்டும் ஆரம்பம்?

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு விளைவித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்குவதற்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபன முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபன வளாகம் மற்றும் பெட்ரோலியக் களஞ்சிய முனையங்கள் ஆகியவற்றினுள் பிரவேசிப்பதற்கும் குறித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து அதிகாரிகளும் கடமைக்கு சமூகமளித்து, எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய கடமைகளை முன்னெடுக்குமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

வவுனியாவில் நாளை மாபெரும் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு

  • April 12, 2023
  • 0 Comments

வவுனியாவில் நாளைய தினம் இடம்பெறும் மாபெரும் போராட்டத்திற்கு கட்சி பேதம் பாராது அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இதற்கு அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆதிலிங்கேஸ்வரர் உட்பட விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமை தொடர்பில் நேற்றைய தினம் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் உரையாடியியதாகவும் கூறினார். குறிப்பாக வெடுக்குநாறி மலை விடயம் மாத்திரமல்லாது […]

இலங்கை செய்தி

இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண் – விசாரணையில் வெளிவந்த தகவல்

  • April 12, 2023
  • 0 Comments

இரத்தினபுரி நிரியல்ல பிரதேசத்தில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகவில்லை என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையை சட்ட வைத்திய நிபுணர் முதித குடாகம தலைமையில் இடம்பெற்ற நிலையில் இந்த விடயம் வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும், யுவதியின் உடல் உறுப்புகள் மேலதிக விசாரணைக்காக அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், பிரேத பரிசோதனையில் அவரது மரணம் கழுத்தை நெரித்ததால் ஏற்படவில்லை என மேலும் தெரியவந்துள்ளது. மேலும், அவரது உடலில் காயங்கள் ஏதும் […]

இலங்கை செய்தி

கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள திருப்பம் – மீண்டும் இணையும் பிரபலங்கள்

  • April 12, 2023
  • 0 Comments

மைத்திரிபால சிறிசேனவை ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசுடன் இணைப்பதற்கான நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் மனக்கசப்பு இருந்தாலும்கூட அதையெல்லாம் மறந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அரசுடன் இணைந்திருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்களே இந்த ஒப்பரேஷனில் இறங்கியுள்ளனர். இவர்கள் சில நாட்களுக்கு முன் மைத்திரியைச் சந்தித்து இந்த விவகாரம் பற்றி விரிவாகப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பின் விளைவாக ரணிலும் […]

இலங்கை செய்தி

இலங்கை முழுவதும் தீவிரமாக விற்பனையாகும் ஆணுறைகள்

  • April 12, 2023
  • 0 Comments

ஒரு பிராண்ட் ஆணுறை தொலைதூரப் பகுதிகளிலும் வேகமாக நகர்கிறது என்று FPA நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷார ரணசிங்க செய்தி நிறுவனத்திற்கு  தெரிவித்தார். மருத்துவச்சிகள் ஆணுறைகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் ஒரு வழிமுறையும் அரசாங்கத்திடம் உள்ளது என்று அவர் கூறினார். குறைந்த அளவிலான ஆணுறைகள் கிராமப்புறங்களில் நகர்வதாகவும், நகர்ப்புறங்களில் உயர்தர தயாரிப்புகள் நகர்வதாகவும் ரணசிங்க கூறினார். “ஆணுறைகள் இரட்டைப் பாதுகாப்பைத் தருகின்றன. கர்ப்பத்திலிருந்து மட்டுமல்ல, பாலியல் ரீதியாக பரவும் நோய்களிலிருந்தும். ஆணுறைகள் நமது இளைஞர்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் மிகவும் சக்திவாய்ந்த […]

இலங்கை செய்தி

முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார்.

  • April 12, 2023
  • 0 Comments

முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 82 ஆகும். இலங்கை நாடாளுமன்றத்தின் 17வது சபாநாயகராக இருந்த ஜோசப் மைக்கேல் பெரேரா, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பதவி மற்றும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவி உட்பட பல பதவிகளை வகித்துள்ளார். இதேவேளை, இன்று காலை காலமான சங்கீத் நிபுன் சனத் நந்தசிறியின் இறுதிக் கிரியைகளை எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் பொரளை மயானத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

சட்டவிரோதமாக தனுஷ்கோடியை அடைந்து தஞ்சம் கோரும் இரண்டு இலங்கை குடும்பங்கள்

  • April 12, 2023
  • 0 Comments

தமிழக கடலோர காவல்துறைக்கு தகவல் கொடுத்த மீனவர்கள் மணல் மேட்டில் இலங்கையர்களை கண்டெடுத்தனர். இதையொட்டி கடலோர போலீசார் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர், அவர்கள் மணல் மேட்டில் இருந்து ஹோவர்கிராப்டில் இரு குடும்பத்தினரையும் மீட்டனர். எட்டு பேர் – ஐந்து பெண்கள், இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு வயது வந்த ஆண் இலங்கையிலிருந்து தனுஷ்கோடி அருகே உள்ள மணல்மேட்டை அடைந்தனர். தீவு நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்ததில் இருந்து இலங்கையைச் சேர்ந்த 225 […]

செய்தி வட அமெரிக்கா

கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைவோரைத் தடுக்க அமெரிக்கா மேற்கொண்டுள்ள நடவடிக்கை

கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. நேரடியாக அமெரிக்காவுக்குள் செல்லாமல், கனடாவுக்குள் நுழைந்து, பின் கனடா அமெரிக்க எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள் மக்கள். தற்போது, மெக்சிகோவிலிருந்து இதுபோல் அமெரிக்காவுக்குள் நுழைவோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதாவது, ட்ரம்ப் ஆட்சியின்போது அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையில் உயரமான உலோகத் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டது நினைவிருக்கலாம். மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைய தடையாக சுவர் எழுப்பப்பட்டுவிட்டதால், தற்போது வேறொரு வழியைப் பின்பற்றுகிறார்கள் மெக்சிகோ நாட்டவர்கள்.அதாவது, சட்டப்படி விமானம் ஏறி கனடாவுக்கு வரும் […]

செய்தி வட அமெரிக்கா

கின்னஸில் இடம்பிடித்துள்ள ஒரு வயது இரட்டையர்கள்!

கரு முழுமையாக முதிர்வுறாமல் 22 வாரங்களிலேயே பிறந்து, ஆகக் குறைந்த நாள்களில் பிறந்த இரட்டையர்களாக கனடாவைச் சேர்ந்த ஏடியா மற்றும் ஏட்ரியல் சகோதரர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் . பொதுவாக, முழுமையான கர்ப்ப காலம் 40 வாரங்களாக இருக்கும் நிலையில், ஏடியாவும் ஏட்ரியலும் 18 வாரங்களுக்கு முன்னதாகவே பிறந்துவிட்டனர். அதாவது குழந்தைகள் இருவரும் 126 நாள்களுக்கு முன்னதாகவே, அதாவது 2022 மார்ச் 4ம் திகதி பிறந்தனர்.கருவுற்று 21 வாரங்கள் ஐந்து நாள்களிலேயே ஷகினா ராஜேந்திரத்திற்கு மகப்பேற்று வலி […]

செய்தி வட அமெரிக்கா

மெக்சிகோவில் மினிவானில் இருந்து நான்கு அமெரிக்கர்கள் கடத்தப்பட்டனர்

வடகிழக்கு மெக்சிகோவில் கடத்தப்பட்ட நான்கு அமெரிக்கர்கள் மருந்து வாங்குவதற்காக எல்லையைத் தாண்டியதாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் தெரிவித்துள்ளார். அமெரிக்க குடிமக்கள் தமௌலிபாஸ் மாநிலத்தில் உள்ள மாடமோரோஸ் வழியாக மார்ச் 3 அன்று வெள்ளை நிற மினிவேனில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய குழு அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. பின்னர் அவர்கள் ஒரு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிகாரிகள் மெக்சிகோ ஜனாதிபதியின் […]