இலங்கை செய்தி

எரிபொருள் விலை குறைப்பின் நலன்களை மின்சார பயன்பாட்டாளர்களுக்கும் வழங்குமாறு கோரிக்கை!

  • April 12, 2023
  • 0 Comments

எரிபொருள் விலை குறைப்பின் நலன்களை மின்சார பயன்பாட்டாளர்களுக்கு வழங்குமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கை எழுத்து மூலம் இலங்கை மின்சார சபையிடம்  முன்வைக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் நிலக்கரி விலை குறைவடைதல் எரிபொருள் விலை குறைவடைதல் மற்றும் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எரிபொருள் விலை குறைக்கப்பட்டதனால் மின்சாரக் கட்டணத்தை 20 வீதத்தினால் குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா செய்தி

நாளை கூடும் நாடாளுமன்றத்தின் விசேட கூட்டம்

  • April 12, 2023
  • 0 Comments

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று நாளை (1) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முற்பகல் 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அவரது அலுவலகத்தில் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட உள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

18 வயது மாணவனால் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த விபரீதம்!

  • April 12, 2023
  • 0 Comments

கொழும்பு பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 18 வயதுடைய மாணவன் செலுத்திச் சென்ற வேன் ஒன்று மோதியதில் பொலிஸ் கான்ஸ்டபிள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொள்ளுப்பிட்டி காலி வீதியில் கடமையாற்றிக் கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொள்ளுப்பிட்டி காலி வீதியில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், மாணவன் செலுத்திய வேனை நிறுத்துமாறு சைகை செய்துள்ளார்.இதன்போது மாணவனால் வேனைக் கட்டுப்படுத்த முடியாமல் கான்ஸ்டபிளை மோதியதில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

இலங்கை செய்தி

போலி ஆவணங்களை தயாரித்து காணியை விற்பனை செய்த நபருக்கு கடூழிய சிறை!

  • April 12, 2023
  • 0 Comments

போலி ஆவணங்களை தயாரித்து காணியொன்றை விற்பனை செய்த நபருக்கு 27 கடூழிய சிறை தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ரஞ்சன் லியனகே என்ற நபர் போலி ஆவணங்களை தயார் செய்து 47 அரை இலட்சம் ரூபாவுக்க காணியை விற்பனை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானித்து சிறைத் தண்டனையுடன் அபராதத்தையும் அறிவித்த நீதிபதி,  அபராதத் தொகையை செலுத்தாவிடின் மேலதிகமாக 6 மாத கடூழியச் சிறைத்தண்டனையும் […]

இலங்கை செய்தி

சர்வதேசத்தை ஏமாற்றும் இலங்கை : பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம்!

  • April 12, 2023
  • 0 Comments

சர்வதேச சமூகத்தை ஏமாற்றவே இலங்கை உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்த முயல்கிறது என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. தமிழ்மக்களின் இனப்படுகொலை யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் செயற்பாடுகள் மிக முக்கியமான கட்டத்தை அடைந்துகொண்டிருக்கும் தருணத்தில் இலங்கை தென்னாபிரிக்க பாணியை பின்பற்ற முயல்கின்றது எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை விமர்சித்துள்ளது. தென்னாபிரிக்க பாணியை இலங்கை பின்பற்றினால் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களிற்கு தண்டனையின் […]

இந்தியா செய்தி

யாழ் கடற்கரையில் திடீரென தோன்றிய சிவலிங்கத்தால் ஏற்பட்டுள்ள பரபரப்பு!

  • April 12, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில் நேற்றிரவு சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது. குறித்த சிவலிங்கம் பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோராமாக காணப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை யாராவது கொண்டுவந்து வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் குறித்த சிவலிங்கத்தை அதே இடத்தில் வைத்து வழிபடுவதற்கு சைவ மக்கள் எற்பாடு செய்து வருவதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சிவலிங்கம் காணப்படும் இடத்தியிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் கடற்படை முகாம் ஒன்றும் […]

இலங்கை செய்தி

மனித உரிமைகளை வலுப்படுத்தக்கூடிய வகையில் பொருளாதார நெருக்கடியைக் கையாள வேண்டும்

  • April 12, 2023
  • 0 Comments

சர்வதேச சட்டங்களின்படி பொருளாதார நெருக்கடியைக் கையாளும்போது மனித உரிமைகளை மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையில் அதனை முன்னெடுக்கவேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கும் நிதியியல் கட்டமைப்புக்களுக்கும் இருக்கின்றது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அத்துடன் தேசிய வருமானத்தை ஊக்குவிக்கும் நோக்கிலான கொள்கைகள் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை பாதிக்காமல் இருப்பதையும், ஊழலுக்கு எதிரான மறுசீரமைப்புக்கள் மூலமான பொறுப்புக்கூறலையும் இலங்கை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. நீடிக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 3 […]

இலங்கை செய்தி

கிறிப்டோ நாணயத்திட்டத்தில் முதலிடவேண்டாம் என இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

கிறிப்டோ முதலீடுகளை அடிப்படையாகக்கொண்டு, நாடளாவிய ரீதியில் நிதியியல் மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. கிறிப்டோ நாணயங்கள் இலங்கையில் சட்டபூர்வமான நாணயம் அல்ல என்பதுடன், நாட்டில் அவற்றின் பயன்பாட்டுடன் தொடர்புடைய ஒழுங்குமுறைப்படுத்தலும் பாதுகாப்புச்செயன்முறைகளும் நடைமுறையில் இல்லை. எனவே இணையத்தளம் மற்றும் ஏனைய வழிமுறைகளின் ஊடாக வழங்கப்படும் கிறிப்டோ நாணயத்திட்டத்தில் முதலிடவேண்டாம் என்று இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை எச்சரித்துள்ளது. கிறிப்டோ என அழைக்கப்படும் மறைக்குறி நாணயங்கள் தொடர்பில் பொதுமக்களால் எழுப்பப்படும் கேள்விகளைக் கருத்திற்கொண்டு, அதுபற்றி விளக்கமளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே […]

இலங்கை செய்தி

இலங்கையில் சோம்பேறிகளாக மாறிய மக்கள் – காரணத்தை வெளியிட்ட நிபுணர்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் வசிக்கும் ஒவ்வொரு 3 பேரில் ஒருவர் சோம்பேறியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மடிக்கணினி பாவனை, தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம், கைத்தொலைபேசிக்கு அடிமையாதல் போன்ற காரணங்களால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொற்றா சுகாதார பணியக சமூக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஷெரின் பாலசிங்கம் இதனை தெரிவித்துள்ளார். இதனால், இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இலங்கை செய்தி

இனப்பிரச்சினையை பிரதான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து பிரிக்க முடியாது என்கிறார் ஜனாதிபதி

  • April 12, 2023
  • 0 Comments

இனப்பிரச்சினையை பிரதான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து பிரிக்க முடியாது எனவும், நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். பசுமைப் பொருளாதாரத்திற்கான இலங்கையிலுள்ள சாத்தியக்கூறுகள் சாதகமாக உள்ளதாகவும், நாடு அதனை நோக்கிச் செல்வதுடன், விரைவில் டிஜிட்டல் மயமாக்கலை ஆரம்பிப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீ லங்கன் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியன  ஏற்கனவே நாட்டின் வளங்களை அதிகம் வீணடித்துள்ளன. அவற்றுக்காக அன்றி, வறியவர் மற்றும் […]