இலங்கை செய்தி

எளிமையாக உடை அணியுமாறு இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் இந்த நாட்களில் நிலவும் அதிகப்படியான வெயில் காரணமாக நீரிழப்பு அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவர்கள் எளிமையான ஆடைகளை அணிய அறிவுறுத்தியுள்ளனர். BIG FOCUS திட்டத்தில் இணைந்துகொண்ட கொழும்பு Lady Ridgway மருத்துவமனையின் குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா, வெளிநாடுகளில் இருக்கும் அதே உடை கலாச்சாரத்தை இலங்கைக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றார். நாட்டில் தற்போது அதிக வெப்பநிலை நிலவுகிறது. ஆகவே குறைந்த பட்ச சூரிய ஒளியை உறிஞ்சும் வகையில் ஆடை அணிந்து வெளியே செல்ல வேண்டும். […]

இலங்கை செய்தி

ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க மஹிந்த அணியினர் திட்டம்

  • April 12, 2023
  • 0 Comments

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முன்னிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான யோசனைமுன்மொழியப்பட்டுள்ளது என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். சிங்களத் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கருத்துரைக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். “ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற கருத்து எங்கள் குழுவில் உள்ளது. அடுத்த தேர்தல் என்னவென்று எங்களுக்குத் தெரியாது. ஜனாதிபதித் தேர்தல் என்றால் அந்த நேரத்தில் நாங்கள் ஒரு கட்சியாக […]

இலங்கை செய்தி

கிளிநொச்சியில் மனைவியை பார்க்க சென்றவருக்கு நேர்ந்த கதி

  • April 12, 2023
  • 0 Comments

கிளிநொச்சி – கிருஸ்ணபுரம் பகுதியில்  ஒருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்த ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று முற்பகல் மனைவியை பார்க்கச் சென்ற போது தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். குறித்த நபருக்கும்  மாமனாருக்கும் இடையில்  ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து,  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தாக்குதலில் காயங்களுக்கு உள்ளான குறித்த நபர், கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 […]

இலங்கை செய்தி

சிறப்பு மாதிரியில் தொலைத்தொடர்பு மறுசீரமைக்கப்படும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

  • April 12, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் மாதிரியை பின்பற்றி அரச நிறுவனங்களை நடத்தும் வகையில் அமைக்கப்படும் ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) நிறுவனத்தினால் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். SLT இன் மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், அரச நிறுவனங்களை எவ்வாறு மறுசீரமைப்பது என்பது குறித்து இந்த புதிய நிறுவனம் தீர்மானிக்கும் என்றார். இந்த நிறுவனம் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு […]

இலங்கை செய்தி

மாமனாரின் தாக்குதலில் உயிரிழந்த இளம் தந்தை – கிளிநொச்சியில் சம்பவம்

  • April 12, 2023
  • 0 Comments

கிளிநொச்சி  , கிருஸ்ணபுரம் பகுதியில்  இரண்டு பிள்ளைகளின்   தந்தை  ஒருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார். மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்த 32 வயதான  குறித்த நபா்  இன்று முற்பகல் மனைவியை பார்க்கச் சென்ற போது  அவருக்கும் அவரது   மாமனாருக்கும் இடையில்  ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து,  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தொிவித்துள்ளனர். தாக்குதலில் காயங்களுக்கு உள்ளான குறித்த நபர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், […]

இலங்கை செய்தி

850,000 குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசி வழங்க தீர்மானம்

  • April 12, 2023
  • 0 Comments

நாட்டில் உள்ள மேலும் 850,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசி வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 16 ஜனவரி 2023 அன்று, 2 மில்லியன் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இரண்டு மாத காலத்திற்கு 10 கிலோ அரிசி ஒதுக்கீட்டை வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டது. எவ்வாறாயினும், மேலும் 850,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாகவும் அவர்களையும் உத்தேச வேலைத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அரசாங்கம் அடையாளம் […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு சரியான நேரத்தில் நம்பகமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் முக்கியம் – உலக வங்கி

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையின் உயர்ந்த நிதி, வெளி மற்றும் நிதித் துறை ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதன் திரவ அரசியல் நிலைமை ஆகியவை நாட்டின் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துகின்றன என்று உலக வங்கி தனது இரு வருட புதுப்பிப்பில், நாட்டின் பொருளாதாரத்தின் மூல காரணங்களைத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஸ்ரீலங்கா டெவலப்மென்ட் அப்டேட் (SLDU), ரீசெட் செய்ய நேரம், 2023 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 4.3 சதவீதத்தால் சுருங்கும் என்று கணித்துள்ளது, தேவை […]

இலங்கைக்கு வந்த பிரபல ஹாலிவுட் நடிகர்

  • April 12, 2023
  • 0 Comments

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியன் பேல் இலங்கைக்கு வந்துள்ளார். பின்னர் அவர் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து மாலத்தீவுக்கு விஜயம் செய்தார். தனது பயணத்திற்கு அவர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை தேர்வு செய்துள்ளார். அவர் ஸ்ரீலங்கன் விமானத்தை வந்தடைந்த போது அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளது. பேட்மேன் திரைப்படத்தில் பேட்மேனாக நடித்த பிறகு கிறிஸ்டியன் பேல் உலகளவில் மிகவும் பிரபலமானார். இலங்கை சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான […]

இலங்கை செய்தி

பௌத்த மரபுரிமைகளை நாட்டு மக்கள் பாதுகாக்க வேண்டும் – சரத் வீரசேகர!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கை தேரவாத சிங்கள பௌத்த நாடு ஆகவே பௌத்த மரபுரிமைகளை நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாக்க வேண்டும். பாராளுமன்றத்தில் இன்று (04) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இனப்பிரச்சினை உள்ளது என ஜனாதிபதி குறிப்பிடுகிறார் ஆனால் நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று கிடையாது தமிழ் அரசியல்வாதிகளே இனப்பிரச்சினை என்று குறிப்பிட்டுக் கொண்டு சிங்களவர்களை இனப்படுகொலையாளர்கள் என சித்தரிக்கிறார்கள். பௌத்த மத மரபுரிமைகளுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது […]

இலங்கை செய்தி

புதிய ஒம்புட்ஸ்மனாக கே.பி.கே.ஹிரிம்புரேகம ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்

  • April 12, 2023
  • 0 Comments

நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளராக (ஒம்புட்ஸ்மன்) நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கே.பி.கே.ஹிரிம்புரேகம இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 156(2) மற்றும் 1981 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க நிர்வாக விவகாரங்களுக்கான பாராளுமன்ற ஆணையாளர் சட்டத்தின் பிரிவு 3(1) ஆகியவற்றின் படி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. […]