இலங்கை செய்தி

கோட்டாபயவை தெரிவு செய்தது தவறுதான் – பகிரங்கமாக தெரிவித்த பொதுஜன பெரமுன

  • April 12, 2023
  • 0 Comments

2019 இல் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததன் மூலம் தாம் தவறு செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒப்புக்கொண்டுள்ளது. எவ்வாறாயினும் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்ததன் மூலம் அப்பிழை திருத்தப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினருமான பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அடுத்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போட்டியிட்டு வெற்றிபெறும் என்றும் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் சுகாதார அமைச்சராகவும் போக்குவரத்து அமைச்சராகவும் பவித்ரா வன்னியாராச்சி செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இலங்கை செய்தி

இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு ஜுனில் நிறைவு!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையின் உள்ளக மற்றும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு இந்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் மீளாய்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அதற்கு முன்னர் மறுசீரமைப்புப் பணிகளை முடிக்க முடியும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இணையத்தள கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை […]

இலங்கை செய்தி

இலங்கையில் போலி நாணயதாள்களின் பாவணை அதிகரிப்பு : மக்களுக்கு எச்சரிக்கை!

  • April 12, 2023
  • 0 Comments

புத்தாண்டு காலத்தில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. எனவே இந்த விடயம் தொடர்பாக பொது மக்கள் கவனம் செலுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது. வர்த்தகர்கள் இந்த நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

இலங்கை செய்தி

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

  • April 12, 2023
  • 0 Comments

அரசாங்கத்தின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனை நீர்கொழும்பு மக்கள் சபை ஏற்பாடு செய்திருந்த குறித்த ஆர்ப்பாட்டமானது நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் நடைபெற்றது. இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், மின்சார கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்தியதுடன்,  புதிய வரி கொள்கையை நீக்குமாறும், மக்களுக்கு சலுகைகளை வழங்குமாறு கோரியும் போராட்டத்தை மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுலோக அட்டைகளை ஏந்தி இருந்ததோடு எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

ஒத்திவைக்கப்பட்டுள்ள சாதாரணப் பரீட்சை – பரீட்சைகள் திணைக்களம்

  • April 12, 2023
  • 0 Comments

கல்விப் பொதுத் தராப்பத்திர சாதாரணப் பரீட்சை ஒத்திவைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி முதல் எதிர்வரும் மே 14ம் திகதி 2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது இந்தநிலையில் தற்போது குறித்த பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சாதாரண தரப்பரீட்சைக்கான புதிய திகதி எதிர்வரும் மே 29ம் திகதி அறிவிக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை செய்தி

யாழில் சிங்களத்தில் மாற்றப்பட்ட வீதியின் பெயரால் பரபரப்பு!

  • April 12, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் நயினாதீவில் வீதி ஒன்றின் பெயர் சிங்களத்தில் மாற்றப்பட்டுள்ளமையானது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நயினாதீவில் அமைந்துள்ள வீதி ஒன்றின் பெயர் அதிமேதகு சங்கைக்குரிய பிரஹ்மனவத்தே தம்மகித்தி திஸ்ஸ பெரஹெர மாவத்தை என சிங்களத்தில் மாற்றப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக வடக்கு கிழக்கில் பௌத்தமயமாக்கல் நடவடிக்கை துரித கதியில் இடம்பெற்றுவரும் இந்த நேரத்தில் இரவோடிரவாக இந்த பெயர்மாற்றமும் இடம்பெற்றுள்ளது. இது தற்போதைய அரசாங்கத்தின் சிங்கள மயமாக்கல் செயற்பாடு என பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இலங்கை செய்தி

இலங்கையர்களுக்கு பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் பணப்பை திருடர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார்  அறிவுறுத்தியுள்ளனர். புத்தாண்டு காலத்தில் ஆடைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்குச் செல்லும்போது அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தின்போது மக்களின் பாதுகாப்பு கருதி வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், புலனாய்வு அதிகாரிகள் மற்றும் சிவில் உடையில் உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கு போக்குவரத்து உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்

இலங்கை செய்தி

இலங்கையில் கணவரை கொடூரமாக கொலை செய்த மனைவி

  • April 12, 2023
  • 0 Comments

பொலனறுவை – புலஸ்திகம பிரதேசத்தில் தனது கணவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கி படுகொலை செய்ததாகக் கூறப்படும் பெண்ணொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நேற்று உயிரிழந்தவர் புலஸ்திகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரென என அடையாளம் காணப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக நேற்றுக் காலை முதல் இருவருக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது மனைவி கூரிய ஆயுதத்தினால் கணவரை தாக்கியுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சண்டையின்போது காயமடைந்த மனைவியும், புலஸ்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக […]

இலங்கை செய்தி

இலங்கையை உலுக்கிய மற்றுமொரு பெண்ணின் மரணம் – கணவனின் அதிர்ச்சி செயல்

  • April 12, 2023
  • 0 Comments

அரநாயக்க பிரதேசத்தில் குடும்ப தகராறு முற்றிய நிலையில் 23 வயதுடைய மனைவி கணவனால் தடியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் லம்புடுவ, மில்லங்கொட பகுதியை சேர்ந்த குமுதுனி தேஷானி ரணசிங்க என்ற ஒரு பிள்ளையின் தாயாவார். கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று பார்த்த போது, ​​யுவதி சமையல் அறையில் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். அரநாயக்க பொலிசார் நீதிமன்றத்தில் விடயங்களை அறிக்கையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளப்படவுள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் […]

இலங்கை செய்தி

இலங்கை மக்களுக்கு விசேட அறிவிப்பு!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் தரமற்ற எடை மற்றும் அளவஉபகரணங்களைப் பயன்படுத்துபவர்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அளவீட்டு அலகு, நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயற்பாட்டில் இருக்கும் என அதன் பணிப்பாளர் சுஜீவ அக்குரந்திலக்க தெரிவித்தார். இதன்படி, எடை மற்றும் அளவிடும் கருவிகளின் தரம் குறித்து 011 218 22 53 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என சுஜீவ அக்குரந்திலக்க குறிப்பிட்டார்.