இலங்கை செய்தி

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  • April 12, 2023
  • 0 Comments

வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கையின் நிச்சயமற்ற தன்மையைக் குறைக்கவும் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில்  அமுல்படுத்திய சுங்கவரிகளை படிப்படியாகக் குறைக்க  எதிர்பார்க்கப்படுகிறது என  ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கவும், தனியார் துறைக்கான கடன் ஓட்டத்தை மீட்டெடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவசர பணப்புழக்க உதவி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.  நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவத்திற்கு  குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. வங்கி  விசேட ஏற்பாடுகள் சட்டம் வேகமாக  செயற்படுத்தப்பட்டு […]

இலங்கை செய்தி

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன்வசதி வேலைத்திட்டம் தொடர்பில் ஏப்ரல் 25ஆம் திகதி பாராளுமன்ற விவாதம்

  • April 12, 2023
  • 0 Comments

ர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி (IMF/EFF) திட்டத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், அது ஏப்ரல் 25 முதல் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். அரசியல் கட்சிகள் தமது நாட்டுக்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்று தீர்மானிப்பதற்கான  வாய்ப்பு  இதன்மூலம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். இலங்கையின்  தற்போதைய பொருதாதர நிலைமை மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு […]

இலங்கை செய்தி

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் மற்றும் 13 ஆவது திருத்தம் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அரசாங்கம் விளக்கம்!

  • April 12, 2023
  • 0 Comments

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் குறித்த நிலைப்பாடு மற்றும் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை ஸ்தாபித்தல் உட்பட நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் அலி சப்ரி,  13ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் அமைச்சர் விளக்கினார். உண்மை மற்றும் நல்லிணக்க […]

இலங்கை செய்தி

உலக வங்கி மற்றும், சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தீர்க்கமான கலந்துரையாடல்!

  • April 12, 2023
  • 0 Comments

பொருளாதார மீட்சி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க  உலக வங்கி மற்றும்,  சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தீர்க்கமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வசந்த கால கூட்டம்  திங்கட்கிழமை வாஷிங்டனில் ஆரம்பமானது. இக் கூட்டத்தில் இலங்கை சார்பில் கலந்து கொள்வதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ,  மத்திய வங்கி ஆளுனர் […]

இலங்கை செய்தி

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மேலும் குறைவடையும் சாத்தியம்!

  • April 12, 2023
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த சில மாதங்களில்  மேலும் குறையலாம் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதத்துக் குள் பால் மாவின் விலை மேலும் குறையலாம் என பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினர் லக்க்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார். கடந்த வாரம் பால் மாவின் விலையும் குறைக்கப்பட்டதுடன்இ அதன்படி 400 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் மா பக்கெற்  ஒன்றின் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட […]

இலங்கை செய்தி

புதிய நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ள நாடாளுமன்றக் குழு!

  • April 12, 2023
  • 0 Comments

இரண்டு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் தூதுவர் ஒருவரை நியமிப்பதற்கு உயர் அதிகாரிகள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ. எஸ். சத்யானந்தவின் நியமனம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் புதிய செயலாளராக எம். எம். நைமுதீனின் நியமனத்துக்கு உயர் பதவிகளுக்கான குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதனுடன் பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவராக கலாநிதி சானக ஹர்ஷ தல்பஹேவாவை நியமிப்பதற்கு உயர் அதிகாரிகள் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக […]

இலங்கை செய்தி

இலங்கையில் இராணுவத் தளம் அமைப்பது தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் வெளியிட்டுள்ள தகவல்!

  • April 12, 2023
  • 0 Comments

லங்கையில் இராணுவத் தளம் அமைக்கும் எண்ணம் தமது நாட்டுக்கு இல்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதில் அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியின் இலங்கை விஜயம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், “ இராணுவத் தளத்தை அமைக்கும் எண்ணம் எமக்கு இல்லை என நான் மீண்டும் மீண்டும் கூறியுள்ளேன். சோஃபா (SOFA) ஒப்பந்தத்தை புதுப்பிக்கவோ அல்லது மீள மதிப்பீடு செய்யவோ தமது நாட்டுக்கு எந்த எண்ணமும் […]

இலங்கை செய்தி

இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு.. கொலையில் முடிந்த சம்பவம் !

  • April 12, 2023
  • 0 Comments

மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரிகம பொது வர்த்தக நிலையத்தில் வியாபாரத்திற்காக வந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக்கொலை நேற்று (10) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயம் அடைந்த நபரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மீரிகம பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் கொலையை செய்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கை வந்த பெண்ணின் பரிதாப நிலை

  • April 12, 2023
  • 0 Comments

ஹிக்கடுவ தொட்டகமுவ பாலத்திற்கு அருகில் உள்ள மொலபு ஓய ஆற்றிலிருந்து நேற்று முன்தினத் பிற்பகல் ரஷ்ய பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் மிதந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர். கிரிஸனோவஸ்கியா செனியா என்ற 35 வயதுடைய பெண், கடந்த ஒக்டோபர் மாதம் முதல் ஹிக்கடுவை கல்வல வீதியிலுள்ள ரிவர் குடிசையில் தங்கியுள்ளார். சுமார் மூன்றரை மாதங்களுக்கு முன்னர் ரஷ்ய பெண்ணான இவர் இலங்கை வந்துள்ளார். ஆற்றில் அவரது […]

இலங்கை செய்தி

இலங்கையில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு விசேட அறிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் குடிவரவுத் திணைக்களம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் அன்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு முன்னதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தில் வந்து தமது விண்ணப்பங்களை ஒப்படைக்குமாறும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.