எலிகள் மூலம் மீண்டும் கொரானா பரவும் அபாயம்; ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் எலிகள் கொரானா தொற்றால் அதிகம் பாதிக்கப்படலாம் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கன் சொசைட்டி பார் மைக்ரோபயாலஜியின் இதழில் வெளியான அறிக்கையில் நியூயார்க் நகரின் எலிகள் மூன்று விதமான கொரானா தொற்றால் பாதிக்கப்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.கடந்த மார்ச் 9ம் திகதி வெளியான அறிக்கையில் அமெரிக்க நகரிலுள்ள எலிகள் மீது செய்யப்பட்ட ஆய்வில் SARS-CoV-2 வைரஸின் ஆல்பா, டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகை கொரானா வைரஸ் எலிகளுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளன. […]