செய்தி வட அமெரிக்கா

பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து பாதியில் வெளியேறிய அதிபர் ஜோ பைடன்..!(வீடியோ)

அமெரிக்காவில் வங்கிகளின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்துவருகின்றன. அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி (SVB) சமீபத்தில் திவாலானது. இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் வங்கிகளின் பங்கு மதிப்பு கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. இதையடுத்து, திவாலான வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை மீட்க அமெரிக்க நிதிஅமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன இந்த நிலையில்,இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஜோ பைடனிடம் வங்கிகள் […]

செய்தி வட அமெரிக்கா

பக்கத்து வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் பொலிஸாரை அழைத்த நபர்: உள்ளே சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பக்கத்து வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் பொலிஸாருக்கு தகவலளித்தார் அமெரிக்கர் ஒருவர். பொலிஸார் அந்த வீட்டுக்கு விரைந்தபோது கண்ட காட்சி அவர்களை திடுக்கிடவைத்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸிலுள்ள ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதையும், வழக்கத்தைவிட பெரிய ஈக்கள் அந்த வீட்டிலிருந்து வெளியே வருவதையும் கண்ட பக்கத்துவீட்டுக்காரர் ஒருவர் பொலிஸாருக்கு தகவலளித்துள்ளார்.பொலிஸார் அந்த வீட்டுக்குச் செல்லவும், வீட்டுக்குள்ளிருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அவர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல, அங்கு துப்பாக்கியால் தன்னைத்தான் சுட்டுக்கொண்ட 60 வயது மதிக்கத்தக்க […]

செய்தி வட அமெரிக்கா

மூன்று முக்கிய பெரும் நாடுகள் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

அவுஸ்திரேலியா, அமெரிக்க, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து அணுசக்தியில் இயங்கும் புதிய நீர்மூழ்கி படையணியை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. மூன்று நாடுகளும் இணைந்து நவீனதொழில்நுட்பத்தில் இயங்ககூடிய நீர்மூழ்கி படைப்பிரிவை உருவாக்கவுள்ளன. அவுஸ்திரேலிய அமெரிக்க பிரிட்டிஸ் தலைவர்கள் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி நீர்மூழ்கிகள் அணுசக்தியில் இயங்கும் அணுவாயுதங்களை கொண்டிராது எனவும் தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கை அணுவாயுதங்கள் அற்ற நாடு என்ற அவுஸ்திரேலியாவின் உறுதிமொழிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் நிதி நெருக்கடியால் மூடப்பட்ட மேலும் ஒரு வங்கி!

நிதி நெருக்கடியால் சிலிக்கான் வேலி வங்கி திவாலான நிலையில் தற்போது மேலும் ஒரு வங்கி மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விவகாரத்தில், வாடிக்கையாளர் முதலீட்டை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க மத்திய வங்கியும் வைப்பு நிதி காப்பீட்டுக் கழகமும் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி (SVB) சமீபத்தில் திவாலானது. இதனையடுத்து அமெரிக்க பங்குச் சந்தையில் வங்கிகளின் பங்கு மதிப்பு கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.இந்த நிலையில், […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் பரபரப்பை ஏற்படுத்திய விபத்து – இருவர் மரணம், 9 பேர் காயம்

கனடாவின் வட பகுதியில் உள்ள ஆம்க்கீ நகரில் நேற்று நேர்ந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பாதசாரிகள் காயமுற்றனர். சம்பவத்தின் தொடர்பில் 38 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸ் அதிகாரி கூறினார். அந்த நபர் வேண்டுமென்றே மக்களின் மீது வாகனத்தை மோதியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் விசாரணை நடத்திவருகிறது. உயிரிழந்த இருவருமே 60 வயதைக் கடந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தவர்களில் இருவரின் உடல்நிலை மோசமாய் உள்ளதாகக் கூறப்பட்டது.

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் அதிர்ச்சி – 4 வயதுச் சகோதரியை சுட்டுக்கொன்ற 3 வயதுச் சிறுமி

அமெரிக்காவில் 3 வயதுச் சிறுமி அவரின் 4 வயதுச் சகோதரியைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக அந்நாட்டுக் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். டெக்சஸ் (Texas) மாநிலத்தில் உள்ள ஹியூஸ்டன் (Houston) நகரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் 5 நபர்களும் இரு பிள்ளைகளும் அடுக்குமாடி வீட்டில் இருந்தனர். பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, இரு பிள்ளைகளும் படுக்கையறையில் தனியாக இருந்தனர். அப்போது துப்பாக்கிச் சத்தம் கேட்டது. விரைந்துசென்று பார்த்தபோது, 4 வயதுச் சிறுமி சுய நினைவின்றித் தரையில் கிடந்தார். இதுபோன்ற சூழல்களில் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் பல பகுதிகளுக்கு பனிப் பொழிவு எச்சரிக்கை

  • April 13, 2023
  • 0 Comments

எதிர்வரும் நாட்களில் பிரித்தானியாவின் பல பகுதிகளுக்கு பனிப் பொழிவு எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் சில பகுதிகளில் புதன்கிழமை காலை வரை மஞ்சள் வானிலை எச்சரிக்கைகள் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்களன்று வானிலை அலுவலகம் மேலும் மஞ்சள் எச்சரிக்கைகளை வெளியிட்டது, இது அடுத்த ஐந்து நாட்களில் இங்கிலாந்தின் பெரும்பகுதியை உள்ளடக்கிய வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கடுமையான பனி வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை கொண்டு […]

ஐரோப்பா செய்தி

பெலாரஸ் நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சிறையில் அடைப்பு

  • April 13, 2023
  • 0 Comments

பெலாரஸ் நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவருக்கு பெலாரஸ் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்கயா 2020 இல் பெலாரஸ் ஜனாதிபதித் தேர்தலில்  அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிராகப் போட்டியிட்ட பின்னர் வெளியேறினார். இந்நிலையில் அவருக்கு எதிராக தேசத் துரோகம், அதிகாரத்தைக் கைப்பற்ற சதி செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்நிலையில், அவருக்கு  பெலாரஸ் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இன்று நான் எனது தண்டனையைப் பற்றி சிந்திக்கவில்லை. ஆயிரக்கணக்கான அப்பாவிகள், தடுத்து வைக்கப்பட்டு உண்மையான […]

ஐரோப்பா செய்தி

நிறுவன வாரியங்களில் 40 வீத பெண்கள் தேவை என்ற சட்டத்தை ஸ்பெயின் நிறைவேற்றவுள்ளது

  • April 13, 2023
  • 0 Comments

ஃபார்ச்சூன் அறிக்கையின்படி, பாலின சமத்துவத்தை நோக்கிய நடவடிக்கையில் ஒரு பகுதியாக நிறுவன வாரியங்களில் குறைந்தது 40 சதவீத பெண் பிரதிநிதித்துவம் தேவைப்படும் சட்டத்தை ஸ்பெயின் அரசாங்கம் நிறைவேற்ற முற்படுகிறது. பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸின் கூற்றுப்படி, பாலின ஒதுக்கீடு சட்டம் காங்கிரஸுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் மார்ச் 7 அன்று அங்கீகரிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சோசலிஸ்ட் கட்சியின் பேரணியின் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அரசாங்கத்தின் ஒரு […]

ஐரோப்பா செய்தி

பார்சிலோனாவின் முக்கிய மருத்துவமனை மீது சைபர் தாக்குதல்!

  • April 13, 2023
  • 0 Comments

பார்சிலோனாவின் முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலில், கணினி அமைப்பு முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக 150 அவசரமற்ற, செயல்பாடுகளையும் முவ்வாயிரம் நோயாளிகளின் சோதனைகளையும் இரத்து செய்ய கட்டாயப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த அமைப்பு எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பது குறித்து எந்த கணிப்பும் செய்ய முடியாது என மருத்துவமனை இயக்குனர் தெரிவித்துள்ளார். கட்டலோனியா பிராந்திய அரசாங்க அறிக்கையானது, பிராந்தியத்தின் சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி அமைப்பை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியது. எழுதப்பட்ட […]