ஐரோப்பா செய்தி

மார்செய்யில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்

  • April 15, 2023
  • 0 Comments

பிரான்சின் மார்செய்லின் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று   இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக ஆறு பேர் காயமடைந்த நிலையில் அடையாளம் காணப்பட்டனர்.  அத்துடன் இடிபாட்டில் மேலும் மேலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை பிரான்ஸ் தீயணைப்பு படையினர் தேடி வருவதாகவும் தெரிவிக்கப் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த அனர்தத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கட்டிடம் இடிந்து விழுந்ததினால் குறித்த கட்டிடத்தில் தீ பரவலும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது மீட்பு […]

ஐரோப்பா செய்தி

போரில் 1 இலட்சத்து 78 ஆயிரம் வீரர்களை இழந்த ரஷ்ய படையினர்!

  • April 15, 2023
  • 0 Comments

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் ஓர் ஆண்டைக் கடந்து நீடித்து வருகின்றது. இந்நிலையில் மோதலின் போது ரஷ்யா 1 இலட்சத்து 78 ஆயிரத்து 150 வீரர்கள் இழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. படையெடுப்பிலிருந்து ரஷ்யா சந்தித்த இழப்புகளின் எண்ணிக்கை குறித்த சமீபத்திய புதுப்பிப்பை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, உக்ரேனியப் படைகள் 3,636 டாங்கிகள் மற்றும் 7,024 கவச வாகனங்களை அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரஷ்யா எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா செய்தி

உக்ரைன் குழந்தைகளை மீட்க ஐரோப்பிய ஒன்றியம் புதிய முயற்சிகளை முன்னெடுப்பதாக அறிவிப்பு!

  • April 15, 2023
  • 0 Comments

ரஷ்யாவால் கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் நோக்கில் ஐரோப்பிய ஆணையம் புதிய முயற்சிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்காக போலந்துடன் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்வதாக ஆணையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் கடந்த மாதம் ஐசிசி நீதிமன்றம் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு பிறப்பித்த பிடியாணையை நியாயப்படுத்தியது. இதேவேளை உக்ரைனின் மீட்பு அமைப்பான சேவ் உக்ரைன் அமைப்பு ரஷ்யாவில் இருந்து 31 குழந்தைகளை மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா செய்தி

போர் களத்தில் வெடிமருந்து பற்றாக்குறையை எதிர்கொள்ளும் ரஷ்யா!

  • April 15, 2023
  • 0 Comments

ரஷ்யா போர் முனையில் பீரங்கிக் குண்டுகள் பற்றாக்குறையை எதிர்க்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரெம்ளினின் ஆதரவு பெற்ற தளதி அலெக்சாண்டர் கோடகோவ்ஸ்கியின் அறிக்கையை மேற்கோள் காட்டி போர் ஆய்வுக்கான நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ரஷ்ய படைகள் இன்னும் பீரங்கிகளை அதிகமாக நம்பியிருப்பதாக ஐ.எஸ்.டப்ளியூ தெரிவித்துள்ளது. ரஷ்யா பீரங்கி வெடிமருந்து பற்றாக்குறையுடன் போராடுவது, மொஸ்கோவை பலவீனப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரேனிய படைகள், ரஷ்யாவை விட மூன்றில் ஒரு பங்கு குண்டுகளை பயன்படுத்துவதாக வொஷிங்டன் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ரஷ்யா சீனா, […]

ஐரோப்பா செய்தி

50 இற்கும் மேற்பட்ட தாக்குதல்களை முறியடித்த உக்ரைன் : உச்சக்கட்ட போர் பதற்றத்தில் பக்முட்!

  • April 15, 2023
  • 0 Comments

கடந்த 24 மணி நேரத்தில் 50 மேற்பட்ட ரஷ்ய தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் ஆயுதப்படைகளின் பொதுப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி ரஷ்யா நான்கு ஏவுகணைத் தாக்குதகல்கள், 40 வான்வழித் தாக்குதல்கள், ரொக்கெட் சால்வோ அமைப்புகளின் 58 தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஏவுகணைத் தாக்குதல்கள், வான்வழித் தாக்குதல்கள் என்பன தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்றும் பொதுப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே உக்ரேனிய வான் பாதுகாப்பு படை ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பகுதியில் 12 தாக்குதல்களை மேற்கொண்டதுடன், 14 போர் […]

ஐரோப்பா செய்தி

சபோர்ஜியாவில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி!

  • April 15, 2023
  • 0 Comments

சபோர்ஜியாவின் அடுக்குமாடி கட்டத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குலில் 50 வயது ஆண் ஒருவரும், அவருடைய 11 வயது மகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கட்டத்தின் இடிபாடுகளில் இருந்து 46 வயதுடைய பெண் ஒருவரும் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டுள்ள பெண் உயிரிழந்தவரின் மனைவி என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து நகரசபை செயலாளர் அனடோலி குர்தேவ் இட்டுள்ள பதிவொன்றில் சபிக்கப்பட்ட ரஷ்ய பயங்கரவாதிகள் மீண்டும் சபோர்ஜியாவை தாக்கி மனித உயிர்களை […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு : மக்களுக்கு எச்சரிக்கை!

  • April 15, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் கிரீஸை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றைய தினம் வெப்பநிலையானது 18 பாகை செல்ஸியஸை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள அதிகபட்ச வெப்பநிலையாகும். வடக்கு அயர்லாந்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புற ஊதா கதிர்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே 2023 ஆம் ஆண்டில் கடந்த மார்ச் […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் நள்ளிரவில் இடிந்து விழுந்த கட்டடம் : மீட்பு பணிகள் தீவிரம்!

  • April 15, 2023
  • 0 Comments

பிரான்ஸின் துறைமுக நகரமான மார்ச்சேயில் நள்ளிரவில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து, தீ விபத்திற்கு உள்ளாகியுள்ளது. கட்டட இடிபாடுகளில் உள்ளவர்களை மீட்பதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருவதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த பகுதியில் தீவிபத்தும் ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் சிரமத்தை எதிர்நோக்குவதாக மீட்பு பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நள்ளிரவு ஒரு மணிக்கு நேர்ந்த இந்த அனர்த்தத்தில் எத்தனை பேர் சிக்கியுள்ளார்கள் என்பதை அறியமுடியவில்லை எனவும், உயிரிழப்பு அல்லது சேத விபரங்களை மதிப்பிட முடியவில்லை என்றும் மீட்பு […]

ஐரோப்பா செய்தி

80 ஆயிரம் டொலருக்கு விற்பனையான 10 வயது ஜேர்மன் சிறுவனின் ஓவியம்!

  • April 15, 2023
  • 0 Comments

ஜேர்மனியைச் சேர்ந்த 10 வயது சிறுவனின் ஓவியம், கண்காட்சியில் 80 ஆயிரம் டொலருக்கு விலை போயியுள்ளது. ஜேர்மனியைச் சேர்ந்த கெரெம் அகர் என்பவரின் 10 வயது மகன் மிகைல் அகர். கிராஃபிட்டியால் ஈர்க்கப்பட்ட இந்த சிறுவன் நான்கு வயதில் இருந்து ஓவியக் கலையில் ஈடுபட்டு வருகிறார். 2012ம் ஆண்டில் பிறந்த மிகைல், தனது பெற்றோர் பரிசாக கொடுத்த கை வண்ணப்பூச்சுகள் மற்றும் கேன்வாஸ் ஆகியவற்றைக் கொண்டு ஓவியம் வரையத் தொடங்கியுள்ளார்.அதன் பின்னர் ஏழு வயதிற்குள் அவர் உலகளவில் […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனின் ஆயுதப் படைக்கு நிதி திரட்ட 1000 கேக்குகளை தயாரித்த தன்னார்வலர்கள்!

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரைனின் ஆயுதப் படைக்கு நிதி திரட்ட ஏதுவான வகையில் ஈஸ்டர் கேக் செய்யப்பட்டுள்ளது. இதன்படி சுமார் 1000 ஈஸ்டர் கேக்குகள் செய்யப்பட்டுள்ளன. தன்னார்வலர்கள் கேக்குகளை அலங்கரித்து மேற்கு உக்ரேனிய நகரமான லிவிவ் நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் அடுக்கி வைத்தனர். இந்த கேக்குகளை தயாரிக்க 25 நிமிடங்கள் மட்டுமே எடுத்ததாக தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர். கேக்குகளை விற்பதன் மூலம் கிடைக்கும் பணம் உக்ரைனின் ஆயுதப்படைகளின் 125வது பிராந்திய பாதுகாப்பு படைக்கு அனுப்பப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.