இலங்கை செய்தி

யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக பூங்குழலி சிறிசங்கீர்த்தன் நியமனம்

  • April 11, 2023
  • 0 Comments

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக விரிவுரையாளர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனனை நியமிக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று கூடிய மாதாந்த பேரவை கூட்டத்தின் போதே இந்த நியமனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் கலாநிதி சி.ரகுராம் கலைப்பீட பீடாதிபதியாக பொறுப்பேற்ற நிலையில் ஊடகக் கற்கைகள் துறையின் துறைத் தலைவர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது. இந்தநிலையில், ஊடகக் கற்கைகள் துறையின் […]

இலங்கை செய்தி

இலங்கையில் மனித பாவைனைக்கு உதவாத சாக்லேட்டுகள் மீட்பு

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையின் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, ஹலவத்த நகரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மனித பாவனைக்கு தகுதியற்ற சாக்லேட் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹலவத்த  நகரில் உள்ள 3 கடைகளில் மனிதர்கள் சாப்பிடுவதற்குத் தகுதியற்ற சாக்லேட் கையிருப்பு இருப்பதைக் கண்டுபிடித்ததாக அவர்கள் தெரிவித்தனர். பின்னர், ஹலவத்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடைகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் இனிப்புகள் மற்றும் சாக்லேட்டுகள், காலாவதி, உற்பத்தி தேதி போன்ற முக்கிய தகவல்களை குறிப்பிடாமல் நாடளாவிய ரீதியில் […]

இலங்கை செய்தி

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்க போகும் சம்பளம்! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

  • April 11, 2023
  • 0 Comments

அரச ஊழியர்களின் சம்பளம் பெருமளவில் அதிகரிக்கப்படவுள்ளதாக தொழில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜாஎல பிரதேசத்தில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அடுத்த சில மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் 20,000 ரூபாவால் அதிகரிக்கப்படும். மேலும் பலர் வருமான வரி செலுத்துபவர்களாக மாறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை செய்தி

சிறுவர்களின் போஷாக்கின்மை நிலைமை தொடர்பில் கண்டறிய விசேட குழு!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த குழு குறித்த விவகாரம் சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் என்பதுடன். அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்யவுள்ளது. இக்குழு பாரளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

முன்னாள் உபவேந்தர் ரவீந்திரநாத் படுகொலையுடன் பிள்ளையானிற்கு தொடர்பு: வெளியான பகீர் தகவல்

  • April 11, 2023
  • 0 Comments

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கும் மட்டக்களப்பில் தற்போது இராஜாங்க அமைச்சராகயிருப்பவருக்கும் தொடர்பிருந்தது என மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் காணி ஆணையாளர் நே.விமல்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று(25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,“கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய தலைவராக தான் இருந்தபோதே முன்னாள் உபவேந்தர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அக்காலத்தில், தற்போது மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சராகயிருப்பவர் தொடர்புபட்டது குறித்து பல்கலைக்கழகத்தில் பேசப்பட்டது.சட்டத்திற்கு முரணான வகையில் காணி கோரி […]

இலங்கை செய்தி

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான ஏற்பாடுகள் இல்லை – சாகல ரத்னாயக்க!

  • April 11, 2023
  • 0 Comments

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் அரசாங்கத்திடம் இல்லையென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். மொரட்டுவை கட்டுபெத்தவில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையகத்தில் அத் திணைக்கள அதிகாரிகளால் ஆற்றப்படும் சேவையை பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களுக்கு 60 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்வதற்கு, 55 வருடங்களில் சேவைக்கால நீடிப்பைக் […]

இலங்கை செய்தி

இந்த நாடு எப்போதோ முன்னேற்றம் அடைந்திருக்கும் : வரிவிதிப்பு தொடர்பில் சிறிதரன் குற்றச்சாட்டு!

  • April 11, 2023
  • 0 Comments

வரி விதிப்பு ஊடாக நாடு முன்னேற்றமடையும் என்றால் இந்த நாடு எப்போதோ முன்னேற்றமடைந்திருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சபையில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (24) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் நிதியுதவி ஒத்துழைப்புக்கு அனுமதி கிடைத்தவுடன்  ஒரு தரப்பினர் பட்டாசு வெடித்து  கொண்டாடும் நிலை […]

இலங்கை செய்தி

வடமாகாண ஆளுநருக்கு எதிரான விசாரணை மே மாதத்தில் எடுத்துகொள்ளப்படும் என அறிவிப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

வட மாகாண ஆளுநர் நியதிச் சட்டங்களை இயற்றி வர்த்தமானியில் பிரசுரித்தமை தவறான செயற்பாடு என்று சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து குறித்த வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு மேன்முறையீட்டு நீதிபதிகள் உத்தரவிட்டதோடு, குறித்த நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக எதிர்வரும் மே 24ஆம் திகதியன்று மீண்டும் இவ்விடயத்தினை மன்று கவனத்தில் கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளது. தன்னிச்சையாக நியதிச் சட்டங்களை இயற்றி வர்த்தமானியில் பிரசுரித்த வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் நடவடிக்கைக்கு எதிராக வட […]

இலங்கை செய்தி

இலங்கை மின்சார சபையின் பாவம் ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது – தயாசிறி ஜயசேகர!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை மின்சார சபையின் பாவம் ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர். இலங்கை மின்சார சபையின் பாவம் ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.மின்சார சட்டத்தின் 30ஆவது பிரிவின் (பி) உறுப்புரையில் மின்பாவனையாளர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அல்லது தாங்கிக் […]

இலங்கை செய்தி

900 பயணிகளுடன் இலங்கை வந்த சொகுசு கப்பல்!

  • April 11, 2023
  • 0 Comments

00 சுற்றுலாப் பயணிகளுடன் சொகுசு கப்பல் ஒன்று  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வைக்கிங் நெப்டியூன் என்ற அதிசொகுசு பயணிகள் கப்பலே இவ்வாறு வருகை தந்துள்ளது. இக்கப்பலில் 400 ஊழியர்கள் சேவையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You cannot copy content of this page

Skip to content