கனடாவில் கல்வி விசா பெற்றுத் தருவதாக கூறி 60 கோடி ரூபா மோசடி
கனடாவில் உள்ள கிளிம்ப் பல்கலைக்கழகத்தில் கல்வி விசா பெற்றுத்தருவதாக கூறி 60 கோடி ரூபாய் மோசடி செய்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களின் மோசடியில் பெருமளவான வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பத்தரமுல்லை பெலவத்தை குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு அருகில் நபர் ஒருவர் தாக்கியதாக சந்தேகத்திற்குரிய பெண் மற்றும் ஆணிடம் இருந்து கிடைத்த முறைப்பாட்டையடுத்து, […]