ஐரோப்பா செய்தி

23 பிரித்தானிய குடிமக்கள் மீது பொருளாதார தடைகளை விதித்த ரஷ்யா!

  • April 14, 2023
  • 0 Comments

23 பிரித்தானிய  குடிமக்கள் மீது ரஷ்யா பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக உக்ரேனிய இராணுவத்தின் பயிற்சியில் ஈடுபட்டுள்ள பிரிட்டிஷ் ஆயுதப்படைகளின் அதிகாரிகள்,  பயிற்றுவிப்பாளர்களை வழங்கிய அமைப்புகளின் தளபதிகள் தடைபட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஜிங்க் நெட்வொர்க் கார்ப்பரேஷனின் உயர் அதிகாரிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.  சுதந்திர ஊடகவியலாளர்களை துன்புறுத்தியதில் தொடர்புடைய பல நீதிபதிகள் மற்றும் இங்கிலாந்து சிறைச்சாலை அமைப்பின் அதிகாரிகள் மீதும்  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக  […]

ஐரோப்பா செய்தி

துருக்கியை குறிவைக்கும் ரஷ்யா?

  • April 14, 2023
  • 0 Comments

துருக்கி நிலநடுக்க நெருக்கடியை  பயன்படுத்திக் கொண்டு இஸ்தான்புல்லை கைப்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிரெம்ளினின் முன்னாள் அதிகாரியான  செமியோன் பாக்தாசரோவ் தெரிவித்துள்ளார். உக்ரைனின் உள் விவகார அமைச்சகத்தின் ஆலோசகரான அன்டன் ஜெராஷ்சென்கோ பகிர்ந்துள்ள வீடியோ கிளிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யர்கள் துருக்கியில்  படைகளை உயர்த்த வேண்டும் எனவும், இஸ்தான் புல் நகரம் வரலாற்று ரீதியாக ரஷ்யாவிற்கு சொத்தமானது எனவும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா செய்தி

யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல : புடினுக்கு எதிரான கைது நடவடிக்கை குறித்து ஓலாஃப் ஸ்கோல்ஸ் கருத்து!

  • April 14, 2023
  • 0 Comments

ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐ.சி.சி) கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், பல தலைவர்கள் ஐ.சி.சியின் முடிவை வரவேற்றுள்ளனர். உக்ரைனில் இருந்து நூற்றுக்கணக்கான குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தி ரஷ்ய தலைவர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக ஐ.சி.சி குற்றம் சாட்டி, பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளதுடன்,  இந்த வாரண்ட் மூர்க்கத்தனமானது , அர்த்தமற்றது என்று கிரெம்ளின் கூறியது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள  ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் ஐ.சி.சியின் முடிவை […]

ஐரோப்பா செய்தி

இராணுவ தேவைகளை வளப்படுத்தும் ரஷ்யா : புதிய சட்டத்தை கொண்டுவர திட்டம்!

  • April 14, 2023
  • 0 Comments

ரஷ்ய அதிகாரிகள் இராணுவ தேவைகளை வளப்படுத்துவதற்கு ஏற்றவாறு சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.   குறித்த அறிக்கையில், ரஷ்ய அதிகாரிகள் அதன் இராணுவத் தேவைகளை வளப்படுத்த இராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு திட்டத்தை எளிமையாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி கட்டாய இராணுவ ஆள்சேர்ப்பில் 18-30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான வயதை மாற்றுவதற்கான புதிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ரஷ்ய டுமா பிரதிநிதிகள் […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் அட்லாண்டிக் கடற்கரையில் கரையொதுங்கிய 910 டால்பின்கள்!

  • April 14, 2023
  • 0 Comments

அட்லாண்டிக் கடற்கரையில் 910 டால்பின்கள் கரையொதுங்கியதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. குளிர்காலம் தொடங்கியதிலிருந்து பிரான்சின் அட்லாண்டிக் கடற்கரையில் குறைந்தது 910 டால்பின்கள் கரையொதுங்கியுள்ளதாக கடல்சார் ஆய்வு நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.இதுவரை காணாத அளவில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 400-க்கும் மேற்பட்ட கடல் பாலூட்டிகள் கரையோரத்தில் ஒதுங்கியது என்று மேற்கு நகரமான லா ரோசெல்லை தளமாகக் கொண்ட பெலகிஸ் கடல்சார் ஆய்வகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது வெறும் தற்காலிக புள்ளிவிவரங்கள் தான் என்றும் ஆய்வகம் கூறியது. டால்பின்களின் […]

ஐரோப்பா செய்தி

புடினிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் – மறுக்கும் ரஷ்யா : வரவேற்கும் அமெரிக்கா!

  • April 14, 2023
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், இதனை ரஷ்யா மறுத்துள்ளது. இருப்பினும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் இந்த செயற்பாடு மிகவும் வலுவான கருத்தை கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் அதிகாரத்தை ரஷ்யாவோ அல்லது அமெரிக்காவோ அங்கீகரிக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ள ஜோ பைடன், இது மிகவும் வலுவான கருத்தைச் சொல்கிறது தான் எண்ணுவதாக குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் ரஷ்ய ஜனாதிபதி புடின் தெளிவான போர் குற்றங்களை செய்துள்ளதாகவும், […]

ஐரோப்பா செய்தி

கடவுச்சீட்டு தொடர்பில் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • April 14, 2023
  • 0 Comments

கோடை விடுமுறையை வெளிநாட்டில் கொண்டாடுவதை தவறவிடாமல் இருக்க பிரித்தானியர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை இப்போதே புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஐந்து வார வேலைநிறுத்தப் போராட்டத்தின் விளைவாக ஏற்படக்கூடிய காலதாமதத்தைத் தவிர்க்க, இந்த கோடையில் வெளிநாடு செல்ல விரும்பும் குடும்பத்தினர் தங்களது பாஸ்போர்ட்டை இப்போதே புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத் தொழிலாளர்கள் ஏப்ரல் 3 முதல் மே 5 வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.ஊதியம், […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் ரயிலுக்காக நின்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • April 14, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மெற்றோ சுரங்கத்தின் படிக்கட்டுக்களில் பெண் ஒருவரை தள்ளி வீழ்த்திவிட்டு அவரது தொலைபேசி பறிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை மாலை 7 மணி அளவில் மெற்றோ நிலையத்தின் சுரங்கத்தில் இடம்பெற்றுள்ளது. இளம் பெண் ஒருவரது தொலைபேசியை பறித்த திருடன் ஒருவன் அப்பெண்ணை படிக்கட்டில் தள்ளி விழுத்தியுள்ளான். படிக்கட்டில் உருண்டு விழுந்த அப்பெண், பலத்த காயமடைந்தார். தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் தலையிட்டு குறித்த பெண்ணை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். திருடன் சம்பவ இடத்தில் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் புதிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் வெளியான தகவல்

  • April 14, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் புதிய கட்டிடங்களுக்கான அனுமதி வழங்கப்படுவது தற்போது குறைவடைந்து இருப்பதாக தற்போது புள்ளி விபரம் ஒன்று தெரிவிக்கின்றது. ஜெர்மனி நாட்டில் ஜெர்மன் கட்டிட துறை நிர்மாண அமைச்சானது புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு வழங்கப்படுகின்ற அனுமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக  தெரிய வந்திருக்கின்றது. குறிப்பாக கடந்த ஆண்டு 2022 மொத்தமாக கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 304600 ஆக காணப்பட்டுள்ளது. இதேவேளையில்  அரசாங்கமானது வருடம் ஒன்றுக்கு 4 லட்சம் புதிய வீடுகளை கட்டுவதற்கு உத்தேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு அரசாங்கமானது  குறைந்த […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை

  • April 14, 2023
  • 0 Comments

பிரான்ஸில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, பொருட்கள் வாங்கும் போது காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட கட்டணப்பட்டியல் வழங்கப்பட மாட்டாது. நாடு முழுவதும் இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வருகிறது. காகிதங்களை வீணாக்குவதை தடுக்கவும், கழிவுகள் சேருவதை தடுக்கவும் இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பொருட்களுக்கான கட்டணப்பட்டியலை ‘டிஜிட்டல் முறையில் தொலைபேசிகளுக்கோ அல்லது மின்னஞ்சலுக்கோ அனுப்பிவைக்கப்படும். இந்த நடைமுறை கடந்த வரும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, முதலில் ஜனவரி 1 முதல் […]

You cannot copy content of this page

Skip to content