ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் 86 வயதில் முதியவர் படைத்த சாதனை!

  • April 15, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில்  Brian Winslow எடைதூக்கி தேசிய அளவிலும் உலக அளவிலும் சாதனை படைத்துள்ளார். பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அவருக்கு வயது 86ஆகும். 75 கிலோகிராம் எடையைத் தூக்கிய அவர் அதனையடுத்து 77.5 கிலோ எடை தூக்கி 2 சாதனைகளை ஒரே நாளில் சாதித்துக் காட்டினார். பிரையன் இங்கிலாந்தின் டெர்பிஷையர் (Derbyshire) வட்டாரத்தைச் சேர்ந்தவராகும். அவர் பிரிட்டனில் நடைபெற்ற எடைதூக்கும் போட்டியில் இம்மாதம் (மார்ச் 2023) 18ஆம் தேதி கலந்துகொண்டார். எடைக்கும் வயதுக்கும் அப்பாற்பட்டு அவர் எடைதூக்கியது பிரித்தானியாவில் […]

ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய நாடுகளில் அமுலுக்கு வரவுள்ள நடைமுறை!

  • April 15, 2023
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல் வாகனங்களின் பயன்பாடு முடிவுக்கு வரவுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இவை முடிவுக்கு வரவிருக்கிறது. 2035ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயுவை வெளியேற்றும் வாகனங்களின் விற்பனையை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டத்திற்கு ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. 2030ஆம் ஆண்டிலிருந்து விற்கப்படும் அனைத்துப் புதிய வாகனங்களும் 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் 55 சதவீதம் குறைவான கரியமில வாயுவை வெளியேற்றும் வகையில் இருக்கவேண்டும் என்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஐரோப்பாவில் வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கரியமில வாயுவின் அளவைக் குறைக்க அத்தகைய இலக்குகள் […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு – இருவர் பலி

  • April 15, 2023
  • 0 Comments

பிரான்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். Maurepas (Rennes) நகரில் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் இருவரே கொல்லப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

ஐரோப்பா செய்தி

பிரிட்டனில் இந்துக்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன

  • April 15, 2023
  • 0 Comments

இந்துக்கள் மிகவும் ஆரோக்கியமானவர்கள், சீக்கியர்கள் தங்களுடைய சொந்த வீடுகள் மற்றும் முஸ்லிம்கள் சமூக வாடகை வீடுகளில் வாழ்வதற்கு வாய்ப்புகள் அதிகம்,  மற்றும் கிறிஸ்தவர்கள் பட்டம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவு காட்டுகிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள மதக் குழுக்கள் முழுவதும் வீட்டு உரிமை, கல்வி மற்றும் நல்ல ஆரோக்கியம் ஆகியவற்றில் அப்பட்டமான ஏற்றத்தாழ்வுகள் உள்ளன என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) தெரிவித்துள்ளது. முஸ்லீம்கள் என்று அடையாளம் காணும் மக்கள், ஒட்டுமொத்த […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் மாயம் – தீவரமாக தேடிவரும் பொலிஸார்

  • April 15, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் ஒரு பல்பொருள் அங்காடிக்குச் சென்ற பிறகு காணாமல் போன ஒரு அம்மாவையும் அவரது நான்கு குழந்தைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர். வாக்டனைச் சேர்ந்த 43 வயதான அலனா, கடைசியாக மான்செஸ்டரின் சால்ஃபோர்டில் உள்ள ஹை ஸ்ட்ரீட்டில் வியாழக்கிழமை காலை 8.05 மணிக்கு காணப்பட்டார். அலனா தோள்பட்டை வரை பழுப்பு நிற முடியுடன், தோராயமாக 5 அடி 8, நடுத்தர அளவிலான, வெள்ளைப் பெண் என விவரிக்கப்படுகிறது. அவர் கடைசியாக வெளிர் நிற கோட் […]

ஐரோப்பா செய்தி

ரஷ்ய ராணுவத்தில் பாலியல் அடிமைகள்… பெண் மருத்துவர் பகிர்ந்த அதிர்ச்சியளிக்கும் அனுபவம்!

  • April 15, 2023
  • 0 Comments

ரஷ்ய ராணுவத்தில் பெண் மருத்துவராக பணியாற்றிய வீராங்கனை மார்கரிட்டா. இவர் ரேடியோ ப்ரீ ஐரோப்பிய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அவரது பிரிவில் பணியாற்றிய சக பெண் மருத்துவர்கள் களத்தில் மனைவிகளாக பயன்படுத்தப்பட்டு வந்து உள்ளனர். இதன்படி, அந்த பெண்கள் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளுக்கு சமையல் செய்வது, தூய்மை செய்வது போன்ற பணிகளை செய்வதுடன், பாலியல் ரீதியாகவும் பணிவிடை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.அப்படி அவரையும் பயன்படுத்த சில அதிகாரிகள் முயன்று […]

ஐரோப்பா செய்தி

ஐந்து வங்கிகளில் சோதனை நடத்திய பிரான்ஸ் அதிகாரிகள்: வெளிவந்த மாபெரும் மோசடி

  • April 15, 2023
  • 0 Comments

மாபெரும் மோசடி மற்றும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் பிரான்ஸ் அதிகாரிகள், ஐந்து வங்கிகளில் சோதனை நடத்தினார்கள். பல மாதங்களாக கவனமாக திடமிடப்பட்டு, 16 நீதிபதிகள், சுமார் 150 விசாரணை அதிகாரிகள் மற்றும் ஆறு ஜேர்மன் அதிகாரிகள் ஆகியோர் இந்த ரெய்டுகளில் ஈடுபட்டுள்ளார்கள். Societe Generale, BNP Paribas, அதன் ஒரு பிரிவான Exane, நிதி நிறுவனங்களான Natixis மற்றும் பிரித்தானிய வங்கி ஜாம்பவான் HSBC ஆகிய நிறுவனங்களில் சொதனைகள் நிகழ்த்தப்பட்டன. வரி ஏய்ப்பு மோசடி […]

ஐரோப்பா செய்தி

சபோர்ஷியா ஆலையை பாதுகாக்க முடியாது – அணுசக்தி தலைவர் தெரிவிப்பு!

  • April 15, 2023
  • 0 Comments

சபோர்ஷியா ஆலையில் துருப்புக்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகவும், இதன்காரணமாக ஆலையை பாதுகாக்க முடியாது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி தலைவர் ரஃபேல் மரியானா க்ரோஸி தெரிவித்துள்ளார். சபோர்ஷியா ஆலையை நேற்றைய தினம் பார்வையிட்ட அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை தொடங்கியதில் இருந்து அவர் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும். இந்த விஜயத்தின் போது அணுசக்தி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து நிலைமைய நேரடியாக மதிப்பீடு செய்வதே அவரது நோக்கம் […]

ஐரோப்பா செய்தி

புடினின் நெருங்கிய நண்பருக்கு உதவிய 4 வங்கி ஊழியர்களுக்கு சுவிஸ் நீதிமன்றம் தண்டனை!

  • April 15, 2023
  • 0 Comments

புடினின் நெருங்கிய நண்பருக்கு உதவிய 4 வங்கி ஊழியர்களுக்கு சுவிஸ் நீதிமன்றம் தண்டனை! ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பருக்கு சுவிஸ் வங்கிக் கணக்கின் மூலம் மில்லியன் கணக்கான பணத்தை வைப்பிலிட உதவிய வங்கி ஊழியர்கள் நால்வர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். செர்ஜி ரோல்டுகினின் வங்கிக் கணக்கிற்கு மில்லியன் கணக்கான பணத்தை அவர்கள் வைப்பிலிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த குற்றவாளிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டவரையான காலப்பகுதியில் அவர்கள் இவ்வாறான குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாக […]

ஐரோப்பா செய்தி

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்

  • April 15, 2023
  • 0 Comments

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ரோமில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டு அவர் அனுமதிக்கப்பட்டுள்ளது. 86 வயதான அவருக்கு கடந்த நாட்களில் சுவாசிப்பதில் சிரமம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகவில்லை என்று தெரிவித்து வத்திக்கான் அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்தநிலையில் அவருக்கு சில நாட்களுக்கு வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் என அதில் குறிப்பட்டுள்ளது. அதேநேரம் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக உலக […]

You cannot copy content of this page

Skip to content