ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் ஜெர்மனி பெண்ணுக்கு நேர்ந்த கதி

  • April 16, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜெர்மனி பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஈஃபிள் கோபுரத்தின் அருகே வைத்து இளம் பெண் மீது பாலியல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய ஒருவரை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த இளம் சுற்றுலாப்பயணி ஒருவர் ஈஃபிள் கோபுரத்தின் அருகே நின்றிருந்தார். இதன் போது அவரை ஆண் ஒருவர் நெருங்கியதாகவும், […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் இயல்பு நிலைக்கு திரும்பிய வோடபோன் இணைய சேவைகள்

  • April 16, 2023
  • 0 Comments

சுமார் 11,000 வாடிக்கையாளர்களுக்கு பிராட்பேண்ட் சேவையை முடக்கிய பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக வோடபோன் தெரிவித்துள்ளது. சிலரால் அதிக நாள் இணையத்தை அணுக முடியாததால் ஏற்பட்ட சிரமத்திற்கு நம்பமுடியாத அளவிற்கு வருந்துகிறோம் என்று நிறுவனம் கூறியது. விர்ஜின் மீடியா O2 இல் உள்ள சிக்கல்களைப் பின்தொடர்கிறது, 50,000 க்கும் மேற்பட்ட பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் சிக்கல்களைப் புகாரளித்தனர். வோடபோன் பிபிசியிடம் திங்களன்று ஏற்பட்ட செயலிழப்பு அதன் 1.1 மில்லியன் ஹோம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களில் 1%க்கும் மேல் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் நிறுவனம்  கூறியது. […]

ஐரோப்பா செய்தி

கைதிகள் பரிமாற்றத்தில் 200 பேரை விடுவித்த உக்ரைன் மற்றும் ரஷ்யா

  • April 16, 2023
  • 0 Comments

200க்கும் மேற்பட்ட ரஷ்ய மற்றும் உக்ரேனிய வீரர்கள் கைதிகள் இடமாற்றத்தில் நாடு திரும்பியுள்ளதாக போரிடும் நாடுகள் தெரிவித்துள்ளன. உக்ரைனுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 106 ரஷ்ய வீரர்கள் உக்ரைன் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 100 உக்ரைன் கைதிகளை ரஷ்யா விடுவித்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தலைமை அதிகாரி Andriy Yermak தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தில் இடைத்தரகர்கள் யாரேனும் ஈடுபட்டார்களா என்று எந்த அறிவிப்பிலும் குறிப்பிடப்படவில்லை. உக்ரேனிய வீரர்களில் சிலர் கடுமையான […]

ஐரோப்பா செய்தி

ஈஸ்டர் ஞாயிறு அன்று 700 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அறிவிப்பு!

  • April 16, 2023
  • 0 Comments

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் அன்று ஏறக்குறைய 700 ரஷ்ய துருப்புகள் கொல்லப்பட்டதாக உக்ரைன் கூறியுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவின் தினசரி இழப்புகள் குறித்த விபரத்தை உக்ரைன் வெளியிட்டுள்ளது. இதன்படி பெப்ரவரி 2022 இல் இருந்து இதுவரை 178820 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 670 பேர் உயிரிழந்துள்ளதாகவும், உக்ரைன் அறிவித்துள்ளது. இந்த விவரங்கள் சரிபார்க்கப்படவில்லை. இருப்பினும் மோதலின்போது சர்வதேச நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளதை விட உக்ரைனின் மதிப்பீடுகள் அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பா செய்தி

மரியுபோல் ரயில் நிலையத்தை முற்றிலுமாக அகற்றி வரும் ரஷ்ய படைகள்..

  • April 16, 2023
  • 0 Comments

உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள ரயில் நிலையத்தை ரஷ்ய படைகள் முற்றிலுமாக அகற்றி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. போரின் தொடக்க நாட்களில் ரஷ்ய ராணுவ படையின் தொடர் தாக்குதலுக்கு உள்ளான  மரியுபோல் நகரம், கடந்த ஆண்டு மே மாதம் முற்றிலுமாக ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது.அதிலிருந்து மரியுபோல் நகரில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து எந்தவொரு புதிய தகவலும் அவ்வளவாக வெளியே வராமல் இருந்தது. இந்நிலையில் உக்ரைனிய மேயரின் நாடுகடத்தப்பட்ட ஆலோசகர் பெட்ரோ ஆண்ட்ரியுஷ்செங்கோ, மரியுபோல் நகரின் […]

ஐரோப்பா செய்தி

நேட்டோவில் இணைந்த பின்லாந்து : வான் பாதுகாப்பை வலுப்படுத்;தும் ரஷ்யா!

  • April 16, 2023
  • 0 Comments

பின்லாந்து நேட்டோவுடன் இணைக்கப்பட்ட பிறகு வான் பாதுகாப்பு படைகளை வலுப்படுத்த ரஷ்யா குறிப்பிட்டுள்ளது. நேட்டோ கூட்டணியில் பின்லாந்து இணைந்ததற்கு பிறகு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக ரஷ்யா கூறுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விண்வெளப் படைகளின் துணைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஆண்ட்ரி டெமின், ரஷ்ய வான் பாதுகாப்பு பல சவால்களை எதிர்கொள்வதாக கூறினார். இதனால் ரஷ்யா 50இற்கும் மேற்பட்ட மொபைல் ரேடார் நிலையங்களைச் சேர்த்துள்ளதாகவும், ஏ-50 முன் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்கள், 24 மணி […]

ஐரோப்பா செய்தி

இரகசிய ஆவணங்கள் கசிவை தொடர்ந்து திட்டத்தை மாற்றிய உக்ரைன்!

  • April 16, 2023
  • 0 Comments

பென்டகனின் இரகசிய ஆவணங்கள் கசிந்ததை அடுத்து உக்ரைன் இராணுவ திட்டங்கள் பலவற்றை மாற்றியமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் போர் உத்திகள் குறித்த இரகசிய ஆவணங்கள் கசிந்துள்ள நிலையில், இதுகுறித்த விசாரணைகளை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே கசிந்த ஆவணங்கள் போலியானது என உக்ரைன் கூறியுள்ளது. இந்நிலையில், உக்ரைனின் சில திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கியின், ஆலோசகரான மைக்கலோ போடோலியாக், உக்ரைனின் உண்மையான திட்டங்களுக்கும், ஆவணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறியுள்ளார்.

ஐரோப்பா செய்தி

இத்தாலி நோக்கி படையெடுத்த புலம்பெயர்வாளர்கள்; படகு கவிழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்திருக்க வாய்ப்பு !

  • April 16, 2023
  • 0 Comments

இத்தாலி நோக்கி சென்ற புலம்பெயர்ந்தவர்களின் படகு மஹ்தியா கடல் பகுதியில் கவிழ்ந்ததை தொடர்ந்து, 27 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் வறுமை, உணவு பற்றாக்குறை அதனால் ஏற்படும் மோதல் போக்கு போன்றவை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.இதனால் இந்த நாடுகளை சேர்ந்த மக்கள் கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்தவர்களாக சென்றடைய முயற்சிக்கின்றனர்.இவ்வாறு புலம்பெயரும் மக்கள், சிறிய படகுகளில் ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் போது, […]

ஐரோப்பா செய்தி

ஜேர்மனில் வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட இரு பிள்ளைகள்!

  • April 16, 2023
  • 0 Comments

ஜேர்மன் நகரமொன்றிலுள்ள வீடொன்றில், இரண்டு பிள்ளைகள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று, தென்மேற்கு ஜேர்மனியிலுள்ள Hockenheim நகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், முறையே எழு மற்றும் ஒன்பது வயதுடைய இரண்டு பிள்ளைகள் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டார்கள். சம்பவ இடத்தில் இருந்த 43 வயது பெண் ஒருவரைக் கைது செய்துள்ள பொலிஸார், அவர் அந்த பிள்ளைகளைக் கொலை செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை செய்துவருகிறார்கள். பொலிஸார், அந்தப் பெண், அந்தக் குழந்தைகளின் உறவினர் என்று மட்டுமே […]

ஐரோப்பா செய்தி

ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு

  • April 16, 2023
  • 0 Comments

பிரான்சில் ஆல்ப்ஸ் மலையில் மான்ட் பிளாங்கின் தென்மேற்கே ஏற்பட்ட பனிச்சரிவில் 4 பேர் இறந்துள்ளனர். மேலும்  9 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்துள்ளார். அர்மான்செட் பனிப்பாறையில் பகலில் பனிச்சரிவு ஏற்பட்டது என்றும்  அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில் சிக்கியவர்கள் மலைப்பகுதியில் பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்தனர் என்று Haute-Savoie இன் உள்ளூர் அதிகாரிகளின் செய்தித் தொடர்பாளர் இம்மானுவேல் கோக்வாண்ட் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது இந்த அனர்த்தத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்தவண்ணம் […]

You cannot copy content of this page

Skip to content