சித்தியின் கொடுமை!! நான்கு வயது சிறுமியின் வாயில் சிகரெட்டை திணித்த கொடூரம்
நான்கு வயது சிறுமியை வாயில் சிகரெட்டை திணித்தும், முகத்தை தண்ணீரில் அமிழ்த்தியும் கொடூரமாக நடத்திய தந்தையின் இரண்டாவது மனைவி கைது செய்யப்பட்டதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறுமியை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் போது சந்தேக நபர் போதையில் சிறுமியின் வாயில் புகையிலையை திணித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறுமி தற்போது சிகிச்சைக்காக ஹொரண ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியை தாக்க பயன்படுத்திய ஆயுதமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுமி கூறுவதை கேட்காமல் பிடிவாதமாக இருப்பதாகவும், சந்தேகநபர் […]