இலங்கை

இலங்கை நாடாளுமனத்தின் இறுதி அமர்வு எப்போது? : கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு!

  • June 24, 2023
  • 0 Comments

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு ஒப்புதலை பெறுவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை நடத்துவது குறித்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது. இதன்படி குறித்த கட்சி தலைவர்கள் கூட்டம் வரும் (27.06) செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக சபாநாயகர் அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். “கட்சித் தலைவர்கள் ஜூன் 27 அன்று கூடுவார்கள், சிறப்பு வார இறுதி அமர்வு நடத்துவது குறித்த இறுதி முடிவு அன்று முடிவு செய்யப்படும்” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வார இறுதி […]

ஐரோப்பா

இத்தாலியில் லெஸ்பியன் தாயின் பெயரை நீக்க கோரிக்கை : வலுத்த எதிர்ப்பு!

  • June 24, 2023
  • 0 Comments

இத்தாலியில்  குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் இருந்து லெஸ்பியன் தாயின் பெயரை நீக்குவதற்கான வழக்கறிஞரின் அழைப்புக்கு இத்தாலிய பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். லெஸ்பியன் தம்பதிகளுக்குப் பிறந்த 33 குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள் சட்டப்பூர்வமானது அல்ல என்று வடக்கு இத்தாலிய நகரத்தில் அரசு வழக்கறிஞர் ஒருவர் கூறியதை அடுத்து, சுமார் 300 பெண்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். இதன்போது நாம் அனைவரும் ஒன்றுதான் என்று உங்கள் ஆசிரியர் உங்களுக்கு கற்பிக்கவில்லையா என்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளையும் காட்சிப்படுத்தியிருந்தனர். முதலில், ஆகஸ்ட் […]

உலகம்

டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்து குறித்து விசாரணை செய்வதில் சிக்கல்!

  • June 24, 2023
  • 0 Comments

டைட்டன் நீர்மூழ்கி கப்பல் ஆழ்கடல் பகுதியில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளான நிலையில், இது குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கப்பல் இடிந்து விழுந்த பகுதியைத் தேடும் பணியில் கடல்சார் ஏஜென்சிகள் இன்னும் மும்முரமாக இருப்பதால் முறையான விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை என்று அமெரிக்க கடலோர காவல்படை  அறிவித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து விசாரணைகள் எப்போது ஆரம்பிக்கப்படும், விசாரணைக்கு யார்  தலைமை தாங்குவார் என்பது குறித்த தகவல்களை தீர்மானிப்பதில் சிக்கல்கள் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் […]

ஐரோப்பா

இளவரசர் ஹரி மக்களால் விரும்பப்படாதவர் – அதிர்சியளிக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

  • June 24, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில்  கேட் மிடில்டனைப் போல மேகன் மெர்கலை யாரும் விரும்பவில்லை என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. அதாவது பிரித்தானியாவில், Meghan Markle பற்றிய மக்களின் கருத்து வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. யூகோவ் நடத்திய கருத்துக்கணிப்பில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களில் 68 வீதமானோர், இளவரசர் ஹரியின் மனைவியை பற்றி எதிர்மறையான பார்வையைக் கொண்டுள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து மேகன் மீதான பொதுமக்களின் நிகர சாதகத்தன்மை -47 வீதமாக […]

இலங்கை

X-Press Pearl கப்பல் இழப்பீடு குறித்த விசாரணைக்கு திகதியிடப்பட்டது!

  • June 24, 2023
  • 0 Comments

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலுக்கு இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இம்மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இது குறித்து  கொழும்பு வர்த்தக நீதிமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் ஏனைய அமைப்புகள் தாக்கல் செய்த மனு நேற்று (23) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே இந்த இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான முகவர் நிறுவனமான சீ கொன்சவேர்டியம் அடங்கலாக 8 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 7 பில்லியன் […]

ஆசியா

எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் : இந்தியா மற்றும் அமெரிக்காவை சாடும் பாகிஸ்தான்‘!

  • June 24, 2023
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானின் எல்லையை தீவிரவாத தாக்குதல்களுக்கு தளமாக பயன்படுத்தக்கூடாது என அழைப்பு விடுத்துள்ள நிலையில், பாகிஸ்தான் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அண்மையில் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றிருந்த மோடி, அங்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்திருந்தார். இதன்போது, இரு தலைவர்களும் பாகிஸ்தானின் எல்லையை தீவிரவாத தாக்குதல்களுக்கு தளமாக பயன்படுத்தக்கூடாது என்பதை உறுதிப்படுத்துமாறு பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவு […]

ஐரோப்பா

கச்சா எண்ணெய் கொள்வனவு ஜி7 நாடுகள் நிர்ணயித்த விலைக்கு அமைவாக இருக்க வேண்டும் – அமெரிக்கா!

  • June 24, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கான விலை வரம்பை ஜி7 நாடுகள் நிர்ணயித்துள்ள நிலையில், இதனை இந்தியாவும் பின்பற்றும் என வெள்ளை மாளிகை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா எண்ணெயை கொள்வனவு செய்யும்போது அது ஜி7 நாடுகள் நிர்ணயித்த விலை வரம்பிலோ அல்லது அதற்கு குறைவாகவோ இருக்கும் என்று அமெரிக்கா நம்புவதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது. இது குறித்து கருத்த வெளியிட்டுள்ள தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி ரஷ்ய எண்ணெய் கொள்முதல் பற்றி இந்தியா தனது சொந்த விருப்பங்களைச் […]

இலங்கை செய்தி

பிரதமர் பதவியில் மாற்றம்?

  • June 23, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பிய பின்னர் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட கூடும் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாடு செல்வதற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் ஒருவருடன் இது தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஜனாதிபதி இல்லத்திற்குச் சென்று இந்த கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பியதும் அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த தகவலை […]

உலகம் செய்தி

குஜராத்தில் கூகுள் fintech மையத்தை திறப்போம்!!! மோடியிடன் கூறிய சுந்தர் பிச்சை

  • June 23, 2023
  • 0 Comments

கூகுள் தனது உலகளாவிய fintech செயல்பாட்டு மையத்தை குஜராத்தில் திறக்கும் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு அறிவித்தார். மோடி அரசின் முக்கிய பிரச்சாரமான டிஜிட்டல் இந்தியாவுக்கான பிரதமரின் தொலைநோக்கு பார்வையையும் அவர் பாராட்டினார். “அமெரிக்காவின் வரலாற்று சிறப்புமிக்க பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்தித்தது, கூகுள் இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டொலர் முதலீடு செய்கிறது என்பதை நாங்கள் பிரதமருடன் பகிர்ந்து […]

ஐரோப்பா செய்தி

பிரான்சில் 2014 ஆம் ஆண்டு முதல் 35,000 பேர் கோடை வெப்பத்தால் உயிரிழப்பு

  • June 23, 2023
  • 0 Comments

2014 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் கோடை வெப்பத்தின் தாக்கத்தால் 30,000 முதல் 35,000 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பொது சுகாதார நிறுவனம் வெளியிட்ட மதிப்பீட்டில் தெரிவித்துள்ளது. வெப்ப மரணங்கள் பெரும்பாலும் வயதானவர்களுடன் தொடர்புடையதாக இருந்தாலும், “கணிசமான விகிதம் மூன்றில் ஒரு பங்கு 75 வயதிற்குட்பட்டவர்கள்” என்று Sante Publique France (SPF) ஒரு ஆய்வில் கண்டறிந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக 2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பிரான்ஸ் அடிக்கடி வெப்ப அலைகளை கண்டுள்ளது, […]