இந்தியா செய்தி

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

  • April 18, 2023
  • 0 Comments

இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன்படி நாளொன்றுக்கு 500 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 524 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. கடந்த நவம்பர் 19 ஆம் திகதி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 556 ஆக இருந்தது. அதன் பிறகு தற்போது மீண்டும் 500-ஐ தாண்டி […]

இந்தியா செய்தி

எல்லைமீறிய குற்றச்சாட்டில் 16 தமிழக மீனவர்கள் கைது!

  • April 18, 2023
  • 0 Comments

தமிழக மீனவர்கள் 16 பேரை, இரண்டு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். இந்திய கடல் எல்லையான நெடுந்தீவை அடுத்த அனலைத்தீவு அருகே மீனவர்கள் மீடிந்த சமயமத்தில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு படகுகள் உட்பட மீனவர்களை சிறைப்பிடித்துள்ளனர். அத்துடன் அவர்களின் வலைகளையும் அறுத்து சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் மீனவர்களையும் சரமாரியாக தாக்கி விரட்டி அடித்துள்ளனர். இதேபோல் நாகப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மற்றொரு விசைப்படகையும் சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்தனர். […]

ஆசியா செய்தி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட கைது வாரண்ட் ரத்து

  • April 18, 2023
  • 0 Comments

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட கைது வாரன்ட்டை பாகிஸ்தான் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக கானின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கானின் சட்டக் குழுவின் ஒரு பகுதியான பைசல் ஃபரீத் சவுத்ரி, அல் ஜசீராவிடம், தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றம், அமர்வை ஒத்திவைத்ததாகவும், மார்ச் 30 ஆம் தேதி அடுத்த விசாரணையில் அவர் முன்னிலையில் இருப்பதை உறுதிப்படுத்துமாறு முன்னாள் பிரதமருக்கு அறிவுறுத்தியதாகவும் கூறினார். கான் அதிகாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் ஆஜராகியதை அடுத்து, வாரண்டுகள் ரத்து செய்யப்பட்டது. […]

இந்தியா செய்தி

ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை எதிர்க்கும் இந்திய அரசு

  • April 18, 2023
  • 0 Comments

ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிப்பதை இந்திய அரசு எதிர்க்கிறது, ஞாயிற்றுக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபாலினம் மற்றும் திருநங்கைகள் (LGBT) தம்பதிகள் தாக்கல் செய்யும் தற்போதைய சட்ட கட்டமைப்பிற்கு எதிரான சவால்களை நிராகரிக்குமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தியது. சமூகத்தில் பல்வேறு வகையான உறவுகள் இருந்தாலும், திருமணத்திற்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் பாலின உறவுகளுக்கு மட்டுமே என்று சட்ட அமைச்சகம் நம்புகிறது, மேலும் இதைப் பராமரிப்பதில் அரசுக்கு நியாயமான ஆர்வம் உள்ளது என்று ராய்ட்டர்ஸ் பார்த்த […]

இந்தியா செய்தி

மது போதையில் மேடையில் படுத்து உறங்கிய மணமகன்: மணமகள் எடுத்த அதிரடி முடிவு!(வீடியோ)

  • April 18, 2023
  • 0 Comments

அசாமில் திருமண மேடையின் மேல் குடிபோதையில் மணமகன் படுத்து உறங்கியதால், மணமகள் திருமணத்தை அதிரடியாக தடுத்து நிறுத்தியுள்ளார். திருமண சடங்குகள் நடைபெற்று கொண்டு இருந்த மணமேடைக்கு மணமகன் குடிபோதையில் வந்ததால், மணமகள் நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். மணமகன் பிரசென்ஜித் ஹாலோய்-ஆல் நிலையாக உட்கார கூட முடியாமல் மணமேடையிலேயே படுத்து உறங்கியதால் மணமகளின் வீட்டார் பெரும் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளனர்.இது தொடர்பாக மணமகளின் உறவினர் தெரிவித்துள்ள தகவலில், திருமணம் சிறப்பாக நடைபெற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம், […]

ஆசியா செய்தி

ஈரான் சிறையில் சிறுமிகளுக்கு பலாத்காரம், மின் அதிர்ச்சி, கடும் சித்ரவதைகள்… வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

  • April 18, 2023
  • 0 Comments

ஈரானில் கைது செய்யப்பட்ட மாஷா அமினியை பொலிஸார் தாக்கியதில் அவர் கோமா நிலைக்கு சென்றார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாஷா செப்டம்பர் 16ம் திகதி உயிரிழந்தார். இதனையடுத்து, ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் மாத கணக்கில் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தின் வெற்றியாக இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதையும், பொதுவெளியில் பெண்கள் ஹிஜாப் ஆடை அணிவதை உறுதிபடுத்தும் அறநெறி பொலிஸ் பிரிவை ஈரான் கலைத்துள்ளது. அதேவேளை, ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் […]

இந்தியா செய்தி

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் : எதிர்கட்சிகளின் அமளில் சபை ஒத்திவைப்பு!

  • April 18, 2023
  • 0 Comments

நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் திகதி  தொடங்கியது. குறித்த கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் பாதி பிப்ரவரி 13ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், கூட்டத்தொடரின் இரண்டாவது பாதி திட்டமிட்டபடி இன்று தொடங்கியது. கூட்டத்தொடர் ஆரம்பித்த உடன், ஆளும் கட்சி உறுப்பினர்கள், லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசிய விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதனைதொடர்ந்து அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை தேவை என்று மல்லிகார்ஜுன் […]

ஆசியா செய்தி

சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஆண் ஒருவர் மர்ம மரணம்

  • April 18, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் உள்ள புக்கிட் மேராவில் (Bukit Merah) உள்ள ரெட்ஹில் குளோஸில் (Redhill Close) அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 61 வயது ஆண் நபர் மர்மமான முறையில் இறந்துக் கிடந்தார். இது குறித்து, மார்ச் 17- ஆம் திகதி அன்று காலை 10.50 மணியளவில் சிங்கப்பூர் பொலிஸாருக்கு (Singapore Police Force) தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் 61 வயது ஆண் நபர் […]

இந்தியா செய்தி

WIPL – டெல்லி அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி

  • April 18, 2023
  • 0 Comments

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 105 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கேப்டன் மெக் லேனிங் 43 ரன்களும், ஜெமிமா 25 ரன்களும் அடித்தனர். இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. அதிரடியாக ஆடிய யஸ்திகா பாட்டியா 43 ரன்களும், ஹெய்லி மேத்யூஸ் 32 ரன்களும் சேர்த்து […]

இந்தியா செய்தி

பாகிஸ்தானில் ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்துக்கள் மீது தாக்குதல் : வைரலாகும் காணொலி!

  • April 18, 2023
  • 0 Comments

ஹோலி பண்டிகை இந்தியா முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய இந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை இந்து மாணவர்கள் சிலர் ஒன்றினைந்து பல்கலைக்கழத்தின் அனுமதியுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கான அழைப்பிதல்களை முகநூலில் வெளியிட்டு ஒருங்கிணைத்திருந்தனர். இதனையடுத்து மாணவர்களுக்கு ஐ.ஜே.டி ஆர்வலர்கள் மிரட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே திட்டமிட்டப்படி கடந்த திங்கட்கிழமை மாணவர்கள் ஒன்றினைத்து பல்கலைக்கழகத்திற்கு […]

You cannot copy content of this page

Skip to content