உலகம்

மகள்களுக்காக ஆடை வடிவமைப்பாளராக மார்க் ஸக்கர்பர்க்!

  • May 2, 2023
  • 0 Comments

Meta நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Mark Zuckerberg மகளுக்காக புதிய துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். ஆடை வடிவமைப்பு மற்றும் தையல் போன்ற விடயங்களில் அவர் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மகள்களுக்காக ஆடைகளை வடிவமைத்து 3D printing மூலம் அவற்றை உருவாக்கத் தொடங்கியிருப்பதாக ஸக்கர்பர்க் தமது Facebook பக்கத்தில் தெரிவித்தார். கடந்த சில மாதங்களில் தாம் உருவாக்கிய ஆடைகளை மகள்கள் அணிந்திருக்கும் படங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார். அதற்காகத் தையல் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்ததாக அவர் குறிப்பிட்டார். ஆடைகள் சௌகர்யமானவை […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் 6 பேர் உயிரை பறித்த புழுதிப் புயல்

  • May 2, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் புழுதிப் புயல் நீடிப்பதால் சாலையில் பல விபத்துகள் ஏற்பட்டுள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 100 வாகனங்கள் விபத்துக்குள்ளானதாக Illinois பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலையில் புழுதிப் புயல் வீசியதால், பயணிகளை ஏற்றிச் சென்ற சுமார் 60 வாகனங்களும், 30 சரக்கு வாகனங்களும் விபத்துக்குள்ளாயின. சிகாகோ (Chicago) செயின்ட் லூவிஸ் (St. Louis) நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் அந்த விபத்து நேரிட்டது. 2 லாரிகள் தீபற்றியதாகவும் கூறப்படுகிறது. இரண்டிலிருந்து 80 வயதுக்கு இடைப்பட்ட 30 க்கும் […]

வட அமெரிக்கா

2 மாதங்களில் அமெரிக்காவில் மேலும் ஒரு வங்கி திவால்! அதிர்ச்சியில் மக்கள்

  • May 2, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் சிலிக்கன் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கிகளைத் தொடர்ந்து, பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியும் திவாலாகியுள்ளது. இந்த வங்கியை ஜெ பி மோர்கன் சேஸ் வங்கி வாங்கியுள்ளது. அமெரிக்காவில் முன்னணி வங்கிகளில் ஒன்றான சிலிக்கன் வேலி வங்கி நிதி நெருக்கடியால் திவால் ஆனது. இந்த வங்கியைத் தொடர்ந்து சிக்னேச்சர் வங்கியும் திவால் ஆனது. இந்த நிலையில், 3வதாக, கடும் நிதிச்சிக்கலில் சிக்கியிருந்த, சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியும் திவால் ஆகியுள்ளது. இதையடுத்து […]

கருத்து & பகுப்பாய்வு

அடுத்த 5 ஆண்டுகளில் உலகெங்கும் ஏற்படவுள்ள பாதிப்பு!

  • May 2, 2023
  • 0 Comments

அடுத்த 5 ஆண்டுகளில் உலக வேலைச் சந்தை பெரிய இடையூறுகளை எதிர்நோக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளியல் அமைப்பின் அறிக்கையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. 800க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் கருத்தாய்வுகளை அடிப்படையாகக் கொண்டு அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இயற்கை எரிசக்தி அமைப்புகள் போன்ற பல அம்சங்கள் அதிகமான வேலைகளில் உருவாக்கக்கூடும். 2027ஆம் ஆண்டுக்குள் 69 மில்லியன் புதிய வேலைகள் உருவாக்கப்படும் அதே நேரத்தில் 14 மில்லியன் வேலைகள் இல்லாமல் போகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

ஜெர்மனியில் பிறக்கும் குழந்தைகளுக்கு 10 ஆயிரம் யூரோ நிதி உதவி!

  • May 2, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் பிறக்கின்ற குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசாங்கமானது 10 ஆயிரம் யுரோ நிதி உதவி திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என தீர்மானித்துள்ளது. சிடியுவோ என்று சொல்லப்படுகின்ற ஜெர்மனியின் பிரதான எதிர் கட்சியினுடைய பொது செயலாளர் மரியோ காரியோ அவர்கள் இது தொடர்பில் கருத்து தெரிவித்து இருக்கின்றார். அதாவது எதிர்காலத்தில் இந்த பிள்ளைகள் இந்த 10 ஆயிரம் யூரோ பணத்தை […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அமுலுக்கு புதிய நடவடிக்கை!

  • May 2, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் மின்-சிகரெட் புழக்கத்தை ஒழிக்கும் நடவடிக்கைகள் எடுக்க்படபவுள்ளது. சுகாதார அமைச்சர் Mark Butler இதனை அறிவித்திருக்கிறார். புகையிலை நிறுவனங்கள் வேண்டுமென்றே இளையர்களை நிக்கொட்டீனுக்கு அடிமையாக்குவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஒருமுறை பயன்படுத்தும் மின்-சிகரெட்களும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பரிந்துரைக்கப்படாத மின்-சிகரெட்களும் இனி ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்படும். மின்-சிகரெட்களில் நிக்கொட்டின் அளவும் கட்டுப்படுத்தப்படும். ஆஸ்திரேலியாவில் பத்தாண்டுகளில் புகைப்பிடிப்புக்கு எதிரான மிகப்பெரிய சீர்த்திருத்தமாக அந்த நடவடிக்கைகள் கருதப்படுகின்றன. அண்மைக் காலங்களில் இளையர்களுக்கிடையே மின்-சிகரெட்டுகளைப் புகைக்கும் போக்கைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா சிரமப்படுகிறது. உயர்நிலைப் பள்ளிகளில் […]

இலங்கை

இலங்கையில் பால் மாவின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

  • May 2, 2023
  • 0 Comments

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பால்மா இறக்குமதியாளர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. பெரும்பாலும் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பால்மாவின் விலை குறைவடையும் என சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார். இலங்கை ரூபாவிற்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதிக்கு அமைய எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மேலும் குறையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் மாத ஆரம்பத்தில் இறக்குமதி செய்யப்பட்ட […]

ஆசியா

சீனாவில் பணத்திற்காக சொந்த பேத்தியைக் கடத்திய தாத்தா!

  • May 2, 2023
  • 0 Comments

சீனாவில் சொந்தப் பேத்தியைக் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 65 வயது யுவான்சாய், பேத்தியை பிணைத்தொகையாக பிடித்து 500,000 யுவானுக்கும் அதிகமாக வழங்குமாறு கோரியுள்ளார். இதற்குமுன் அவர் அரசாங்க ஊழியராகப் பணிபுரிந்துள்ளார். சூதாட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் அவருக்குப் பணம் தேவைப்பட்டது. ஒருநாள் தமது 4 வயதுப் பேத்தியைப் பாலர் பள்ளியிலிருந்து அழைக்கச் சென்றார் அவர். அவளை வீட்டுக்குக் கொண்டுபோய் விடாமல் தமது மகளை அழைத்து 3 நாள்களுக்குள் 500,000 யுவானைக் கொடுக்கவில்லை என்றால் பேத்தியை இனிமேல் பார்க்கவே […]

இலங்கை

இலங்கையில் தொலைபேசியால் நேர்ந்த விபரீதம் – பரிதாபமாக உயிரிழந்த நபர்

  • May 2, 2023
  • 0 Comments

நுரைச்சோலை தல்வ பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் தல்வா பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய திருமணமான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கைத்தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இது தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஐரோப்பா

பிரான்ஸில் அதிர்ச்சி ஏற்படுத்திய கொள்ளை – விலையுயர்ந்த இரத்தினக்கல் திருட்டு

  • May 2, 2023
  • 0 Comments

  பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 1 ஆம் வட்டாரத்தில் உள்ள நகைக்கடை ஒன்று கொள்ளையிடப்பட்டுள்ளது. விலையுயர்ந்த இரத்தினக்கல் நகைகளை விற்பனை செய்யும் Bulgari நகைமாடத்தில் சனிக்கிழமை காலை கொள்ளையிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகை தந்த மூன்று கொள்ளையர்கள், ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்தி அங்கிருந்து நகைகளை கொள்ளையிட்டுச் சென்றனர். கொள்ளையிடப்பட்ட நகைகளின் மதிப்பு கணக்கிடப்படவில்லை. விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர், கண்காணிப்பு கமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டுகொள்ளையர்களுக்கு வலை வீசியுள்ளனர்.

You cannot copy content of this page

Skip to content