இலங்கை

இலங்கையில் வீதி விபத்து – வெளிநாட்டு பெண் பலி

  • March 19, 2025
  • 0 Comments

இலங்கையில் சம்பவித்த விபத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியின் பெல்வெஹர பகுதியில், தம்புள்ளையிலிருந்து ஹபரணை நோக்கிச் சென்ற வாகனம் ஒன்று கடை ஒன்றின் முன்பாக நிறுத்துவதற்காக வீதியில் இடதுபுறமாகத் திரும்பியது. அதே திசையில் பயணித்த முச்சக்கர வண்டி அந்த வாகனத்துடன் மோதாமல் இருப்பதற்காக திடீரென வீதியின் வலது பக்கம் திரும்பிய போது எதிர் திசையிலிருந்து வந்த பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • March 19, 2025
  • 0 Comments

இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரிப்பதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 237,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 217,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 178,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 29,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 27,188 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் […]

உலகம்

சுனிதா வில்லியம்ஸை வரவேற்ற டால்பின்கள்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

  • March 19, 2025
  • 0 Comments

9 மாதங்கள் விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸுக்கு டால்பின்கள் வரவேற்பளித்த விடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் பூமியில் பாதுகாப்பாக தரையிறங்கினர். கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் தெற்காசிய நபரை தீவிரமாக தேடும் பொலிஸார்

  • March 19, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா – மெல்போர்னில் பேருந்தில் நடந்த பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரைத் தேடும் நடவடிக்கையை பொலிஸார் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் பெப்ரவரி 17 ஆம் திகதி காலை சுமார் 6.30 மணியளவில் மெல்போர்னில் பேருந்து வழித்தடம் 811 இல் நடந்தது. எதிர்கொண்ட 37 வயது பெண், அந்த நபர் டான்டெனாங் நிலையத்திலிருந்து பேருந்தில் ஏறியதாகக் கூறுகிறார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர் தெற்காசியராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கண்ணாடி மற்றும் சிவப்பு டி-சர்ட் அணிந்திருந்த […]

பொழுதுபோக்கு

புதுக்காதலியுடன் ஆட்டம் போட்ட முன்னாள் காதலர்… இடத்தை காலி செய்த பளிச் நடிகை

  • March 19, 2025
  • 0 Comments

அந்த நடிகைக்கும் காதலுக்கும் கொஞ்சம் கூட செட் ஆகவில்லை. பால் நிறத்தில் பளிச்சென்று இருக்கும் அந்த நடிகைக்கு ரசிகர்கள் ஏராளம் உண்டு. கோலிவுட் டோலிவுட் என கலக்கிய நடிகை இப்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு காரணம் வாரிசு ஹீரோவுடன் ஏற்பட்ட காதல் முறிவு தான். பெரிய குடும்பத்து வாரிசை காதலித்து திருமணம் செய்து கொள்ள நினைத்தார் நடிகை. ஆனால் அந்த ஹீரோ கடைசி நேரத்தில் அல்வா கொடுத்துவிட்டார். அந்த விரக்தியில் பாலிவுட் பக்கம் […]

பொழுதுபோக்கு

“குட் பேட் அக்லி”யில் கெஸ்ட் ரோலில் சிம்பு?

  • March 19, 2025
  • 0 Comments

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படம் வருகிற ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகிறது. அதையடுத்து இம்மாத இறுதியில் டிரைலர் வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு தடை – அதிர்ச்சி கொடுத்த சபாநாயகர்

  • March 19, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனனுக்கு எதிராக தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மரபுகளுக்கு முரணான உறுப்பினரின் நடவடிக்கைகள், அவர் வெளியிட்ட சில அறிக்கைகள் மற்றும் அவரது சமூக ஊடக நடத்தை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த தற்காலிகத் தடை விதிக்கப்படுவதாக சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அதற்கமைய, நாடாளுமன்றத்தில் உறுப்பினர் வெளியிட்ட அறிக்கைகளை ஆடியோ, வீடியோ மற்றும் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்புவது நிறுத்தி வைக்கப்படும். அடுத்த 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் […]

வாழ்வியல்

உடலில் சில இடங்களில் இப்போது வலி இருக்கிறதா? அவதானம்

  • March 19, 2025
  • 0 Comments

எப்போதும் உடல் வலியின் தன்மையைப் புரிந்துகொள்வது பயனுள்ள சிகிச்சைக்கு அவசியம். பொதுவாக ஏதாவது இடத்தில் அடிபட்டால் கடுமையான வலி ஏற்படும். அதிகப்படியான வலி சிகிச்சைக்கான அவசியத்தை உங்களுக்கு உணர்த்தும். இந்த வகை வலி பொதுவாக ஒரு குறுகிய காலத்தில் குணமாகும், இது உடலை குணப்படுத்த அனுமதிக்கிறது. எவ்வாறாயினும், கடுமையான வலியின் அனுபவம் நம் உடலில் கவனம் செலுத்துவதற்கும், மேலும் காயத்தைத் தடுக்க நமது செயல்பாடுகளைச் சரிசெய்வதற்கும் நினைவூட்டலாக செயல்படும். மாறாக, ஒரு சிலருக்கு நீண்ட நாட்கள் வலி […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன் – சற்று முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலை

  • March 19, 2025
  • 0 Comments

திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட தேசபந்து தென்னகோன், சற்று நேரத்திற்கு முன்பு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் ஒரு வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகின்றது. வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த மாதம் 27 ஆம் ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோனுக்கு பிடியாணை பிறப்பித்தது.

இலங்கை

இலங்கையில் இன்று 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை!

  • March 19, 2025
  • 0 Comments

இலங்கையில் சில இடங்களில் இன்று பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், வமேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், […]