செய்தி

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘மார்க் ஆண்டனி’! ரிலீஸ் திகதி இதுவா?

  • May 14, 2023
  • 0 Comments

விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள கற்பனை மற்றும் காலப்பயணம், கேங்ஸ்டர் ஆக்‌ஷனாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் இன்னும் வெளியிடவில்லை […]

ஆசியா

பாகிஸ்தானில் வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய காலக்கெடு!

  • May 14, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், வன்முறைகளில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கான் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராகுவதற்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்த நிலையில், துணை இராணுவ படையினரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். 152 போலீசார் காயம் அடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். வன்முறை தொடர்பாக 2800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும்  கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை

இலங்கையில் இருந்து பிரான்ஸ் சென்ற முப்படை வீரர்கள் ஏழு பேர் மாயம்

  • May 14, 2023
  • 0 Comments

பிரான்ஸில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்விற்கு சென்ற இலங்கை முப்படை வீரர்கள் 7 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 CISM உலக இராணுவ டிரையத்லான் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கை முப்படை வீரர்கள் ஏழு பேர் பிரான்சில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காணாமல் போனவர்களில் நான்கு இராணுவ அதிகாரிகள், ஒரு கடற்படை அதிகாரி மற்றும் விமானப்படையைச் சேர்ந்த இருவர் அடங்குவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 5ம் திகதி முதல் 9ம் திகதி […]

மத்திய கிழக்கு

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் அறிவிப்பு!

  • May 14, 2023
  • 0 Comments

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் போக்கு நீடித்த நிலையில், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.  இதற்கிடையே பாலஸ்தீனிய ஆயுத குழுவின் தலைவர் காதர் அதானென் கடந்த 2ஆம் திகதி இஸ்ரேல் சிறையில் உயிரிழந்தார். இதையடுத்து காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் ஆயுதக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து கடுமையான மோதல் போக்கு நீடித்த […]

பொழுதுபோக்கு

சத்தமின்றி சாதனை படைத்த “குட் நைட்“

  • May 14, 2023
  • 0 Comments

சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் மக்கள் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் நடிப்பில் சந்திரசேகர் இயக்கத்தில் குட் நைட் திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர். இதனால் திரையரங்குகளில் காட்சிகள் அதிகப் படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் உ படம் இரண்டு நாளில் ரூபாய் 1.5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.  

பொழுதுபோக்கு

பிரிந்தாலும் சேர்ந்து அடி வாங்கும் ஜோடி

  • May 14, 2023
  • 0 Comments

சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா நடிப்பில் சமீபத்தில் கஸ்டடி படம் திரைக்கு வந்தது. இந்த படமும் தற்போது எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, இரண்டு நாட்களில் வெறும் 12 கோடி தான் வசூல் வர, நாக சைதன்யாவின் திரைப்பயணத்தில் தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும், சமந்தாவின் நடிப்பில் சமீபத்தில் வந்த படங்களும் பெரிய வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை

மதுவிற்காக நிலைய அதிகாரிகள் மீது தாக்குதல்- மூவர் கைது

  • May 14, 2023
  • 0 Comments

பொலவத்த வென்னப்புவ புகையிரத நிலையத்திற்குள் மது அருந்த அனுமதிக்காத புகையிரத நிலைய அதிகாரி மற்றும் ஊழியர்களைத் தாக்கிய மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புகையிரத நிலையத்திற்குள் மது அருந்திய அந்த நபர்களை, அதிகாரிகள் புகையிரத நிலையத்திலிருந்து வெளியேறுமாறு தெரிவித்துள்ளனர். அப்போது குறித்த குழுவிலிருந்த நபர் ஒருவர் கத்தியைக் காட்டி அவர்களை மிரட்டியதோடு தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காயமடைந்த ரயில்வே ஊழியர்களும் அதிகாரியும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலவத்த மற்றும் மிரிசங்கொட்டுவ பிரதேசங்களைச் […]

இலங்கை

கடந்த ஆண்டில் 163.58 பில்லியன் ரூபாய் இழப்பீட்டை சந்தித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்!

  • May 14, 2023
  • 0 Comments

இலங்கை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் கடந்த ஆண்டில் (2022) 163.58 பில்லியன் ரூபாய் இழப்பீடை சந்தித்துள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கை மதிப்பில் சுமார் 4000 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2021 இல் பதிவுசெய்யப்பட்ட இழப்பை விட மூன்று மடங்கு அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், நஷ்டமடைந்து வரும் 52 அரச நிறுவனங்களில் ஒன்றாகும். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனமானது அதன் வரலாற்றில், 1998 மற்றும் 2008 […]

இலங்கை

லக்சம்பேர்க்குடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இலங்கை!

  • May 14, 2023
  • 0 Comments

லக்சம்பேர்க்குடன் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. லக்சம்பேர்க்குடன் இருதரப்பு ஆலோசனைகள் தொடர்பாக இலங்கை புரிந்துணர்வு உடன்படிக்கையை (MoU) செய்துகொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நேற்று (மே 13) நடைபெற்ற 2வது ஐரோப்பிய யூனியன் (EU) இந்தோ-பசிபிக் மந்திரி மன்றத்தின் ஒரு பகுதியாக குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் அலி சப்ரி,  லக்சம்பேர்க்கின் வெளியுறவு அமைச்சர் ஜீன் அசெல்போர்னை சந்தித்தோம். இதன் போது விமான […]

இலங்கை

பதவி விலகல் தொடர்பில் 5 மாகாண ஆளுநர்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

  • May 14, 2023
  • 0 Comments

தம்மை பதவி விலகுமாறு ஜனாதிபதியோ அல்லது ஜனாதிபதி செயலகமோ இதுவரை எழுத்து மூலம் அறிவிக்கவில்லை என பல்வேறு மாகாண ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பதவியை ராஜினாமா செய்வது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.இதேவேளை, ஐனாதிபதியோ ஐனாதிபதி செயலகமோ பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக அறிவிக்கவில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, Jeevan Thiagarajah தெரிவித்தார். மேலும், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், ​​Anuradha Yahampath ஊடகங்களில் வெளியான செய்திகளில் இருந்து […]

You cannot copy content of this page

Skip to content